Wiki

 

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 01

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

முதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது ‘இலவச இணைப்’பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 02

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

ஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன். மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 03

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

அப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு ‘·பாரின் ஆ·பர்’ ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம்! ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 04

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

உயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை?) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். ‘நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது’, என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 05

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

பொள்ளாச்சி போனபின்னும் அம்மா வேஸ்ட்காட்டன் மில் ஒன்றில் பஞ்சிலிருந்து கொட்டை, குப்பையெல்லாம் பொறுக்கி சுத்தம் பண்ணும் வேலைக்குப் போனார். நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலை. பெரிய குடோனில் வரிசையாய்ப் பெண்கள் தரையில் உட்கார்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் ஏதோ கல்யாணத்தில் பந்தி வழங்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.
மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 06

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

அது எமர்ஜென்சியின் இறுதிக் காலம். அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. சித்தூரில் கிடைத்ததை விட அதிகமான செய்தித்தாள்கள் தினமும் நூலகத்தில் மாலையில் படிப்பது, வேலையிடத்தில் தோழர்களுடன் விவாதிப்பது போன்றவற்றால் இங்கு வந்தபின் ஈடுபாடு இன்னும் அதிகரித்தது. 1977 மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்பட, பொதுக்கூட்டங்கள் நிறைய நடந்தன. சில முறை நானும்கூட அவருடன் போயிருக்கிறேன்.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 07

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

கோவை போனபின், வாழ வழியற்ற பெண்கள் நிறையப்பேருக்குக் கைகொடுக்கும் இட்லிக்கடை அம்மாவுக்கும் கைகொடுத்தது. அலுவலகம் ஒன்றில் வெள்ளைச்சட்டை வேலை பார்க்கும் என் மாமாவுக்குத் தன் வீட்டு வாசலில் இட்லிக்கடை என்பது கொஞ்சம் கௌரவக்குறைவாய் இருந்ததால், அம்மா பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் வாசலில் கடை நடத்தினார். ஓரளவுக்கு இது நன்றாகப் போனது, எனவே அம்மாவால் யாருக்கும் சுமை இல்லை என்கிற அளவில் நாட்கள் நகர்ந்தன.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 08

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

ஒரு வருடகாலமாய் பழகிப்போன அரிசிச்சாப்பாடு புதுப்பாளையத்தில் அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோக அம்மச்சி அரிசி, அல்லது சாமை இரண்டு மட்டும் செய்துதரும். சாமை, நெல்லஞ்சோத்துக்கு (அரிசிக்கு) உண்ணும் குழம்பு, ரசம் எதனுடனும் ஒத்துக்கொள்ளும். ஆறினபின்னும் பெரிய வித்தியாசம் இருக்காது. ராகி, சோளம் போன்றவை அப்படியல்ல.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 09

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு அம்மச்சியிடம் விடைபெற்று திரும்பவும் கோவைக்கு வந்துவிட்டேன். அம்மா ‘இட்லிக்காரம்மா’வாகி இருந்தார்கள். கோடை விடுமுறையாதலால் நானும் இட்லிக்கடையில் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். நேரம் எளிதில் போனது. இட்லிக்கடை அனுபவம் மற்ற வேலைகளைவிட வித்தியாசமானது. காலையில் 6 மணிக்கெல்லாம் சட்டினி, சாம்பார் செய்து ஆறரைவாக்கில் தயாராகிவிட வேண்டும்.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

{{பாலிடெக்னிக்கில்}} சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், ‘செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா’ என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

1981 மே மாதம். எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று…இல்லை, இல்லை, ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சானல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள்.மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

என்னுள் இருந்த எஞ்சினீயரை முழுதாய் வெளியே கொண்டுவந்தது எவரெஸ்ட் எஞ்சினீரிங் வொர்க்ஸ் பணிதான். முதல் வருடத்திலேயே ‘டெவெலப்மென்ட்’ என்ற ஒரு சிறப்புப் பணிக்கு இழுத்துக்கொள்ளப்பட்டேன். இயந்திரங்கள் பற்றி இயற்கையிலேயே இருந்த ஆர்வத்தையும், எண்ணியதை, அடுத்தவர் விளக்குவதை, நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து எளிதில் செய்யும் அளவுக்கு தெளிவான வரைபடங்களாக வெளிப்படுத்தும் திறமையையும் அடையாளம் கண்டு என்னை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர், நிறுவனத்தின் முழு உரிமையாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள். மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

அழகிரி எனக்குக் கிடைத்த அருமையான தோழன். ஐடிஐ தொழிற்பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர். உலகு மூலம் அறிமுகமானாலும், என்னுடனேயே அதே வருடம் பி.ஈ. படித்ததால் நெருக்கமான நட்பு. நெல்லைச் சீமை சொந்த ஊர். பெரும்பாலும் கோவையிலேயே வேலை+வாழ்க்கை. அப்போது சாய்பாபா காலனியில் ஒரு மான்சனில் அறை. அழகேசன் சாலையில் ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. வெகுவிரைவில் ஒட்டிக் கொண்டோ ம். ஒருவர் இல்லாமல் இன்னொருவரைப் பார்க்க முடியாது என்னும் அளவுக்கு. மேலும் வாசிக்க...

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15

இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.

என் அம்மாவும் மகளும் 2000-ல் திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது. வேலைக்கு வெளியே நிறைய நேரம் கிடைத்தது. எனக்கு அங்கு மிகவும் பிடித்த விஷயம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கிடைத்த வசதிகள். CAD எனப்படும் கணினி உதவியுடன் வடிவமைக்கும் வசதி அங்கு அப்போதுதான் வந்திருந்தது. கோவையில் மாலையில் படிப்புக்காக செலவிட்ட பழக்கம், பெரிய நட்போ, சுற்றமோ இருந்து நம் நேரத்தை எடுத்துக் கொள்ளாததால் செய்ய ஒன்றுமில்லாமல் வீட்டில் இருந்தது, எளிதில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி புதியன கற்றுக் கொள்ளும் ஆர்வம், எல்லாம் சேர்ந்து என்னை கணினியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தின.மேலும் வாசிக்க...

 
  people_who_made_me.txt · Last modified: 2006/09/09 09:14