Wiki
Table of Contents
வாழைப்பழக் கிண்ண கேக் (Banana Muffins)
தேவைப்படும் பொருட்கள்
- வாழைப்பழம்-3 (நன்றாக பழுத்த பழம்)
- வெண்ணை அல்லது மார்கரின்(Margarine) கட்டி-1 (சுமார் 100கிராம்)
- பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி
- வனிலா எஸன்ஸ்-1 தேக்கரண்டி
- சர்க்கரை - 3/4 கிண்ணம் (சுமார் 150 கிராம்)
- சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
- துருவிய தேங்காய், இனிப்பேற்றியதும் (sweetened) சரியே - 1/4 மூடி
- மைதா மாவு (அல்லது ஆல்பர்ப்பஸ் மாவு - All purpose flour) - 2 கிண்ணம் (சுமார் 400 கிராம்)
- பாதாம், திராட்சை, முந்திரி அல்லது சாக்கலேட் துண்டுகள் (விருப்பம்போல்)
செய்முறை
1. வாழைப்பழத்தை நன்றாக மசிக்கவும்.
2. மேலே உள்ள அனைத்தையும் நன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
3. அவன்(oven)-ஐ 350 டிகிரியில் (F) வைக்கவும்.
4. கேக் குழிகள் கொண்ட தட்டில் (muffin plate) ஊற்றவும். ஒட்டிக்கொள்ளாத தட்டு இருந்தால் காகிதக் கிண்ணம் தேவையில்லை. அல்லாவிடில் காகிதக் கிண்ணத்தைக் குழியில் வைத்து, பிறகு மாவை ஊற்றவேண்டும். ஊற்றிய பின் விருப்பம்போல பாதம்/முந்திரிப் பருப்போ, சாக்கலேட் துண்டுகளோ மேலே ஒட்டினாற்போல அலங்கரிக்கலாம். மாவை ஊற்றும்போது குழியில் பாதியளவே நிறையவேண்டும்.
5. 15-20 நிமிடம் வேகவைத்து எடுத்தால், சுவையான, முட்டைக் கலப்பற்ற வாழைப்பழ கிண்ணக் கேக் தயார்.







