சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

Creative Commons License
Everything in this site is licensed under a Creative Commons License.


காசியின் வலைப்பதிவுகள் பற்றி

நான் வலைப்பதிக்க ஆரம்பித்தது 2003 செப்டம்பரில். முதலில் வலைப்பூக்கள் பற்றி நா. கண்ணன் அவர்கள் இ-சுவடி குழுவில் எழுதியதன் மூலம் அறிந்துகொண்டேன். திசைகள் மின்னிதழ் வலைப்பூக்களுக்குக் கொடுத்த அறிமுகமும் ஆதரவும் என்னுள் ஆர்வத்தைத் தூண்டவே, நானும் வலைப்பதிக்கத் தொடங்கினேன்.

சுமார் இரண்டு மாதங்கள் ரீடிப்பிலாக்ஸ்.காம் சேவையைப் பயன்படுத்தினேன். பிறகு பலரும் அதன் வேகத்தில், (அல்லது வேகமின்மையில் ) அதிருப்தி தெரிவித்ததால் 2003 நவம்பரில் ப்லாக்ஸ்பாட்.காம் சேவைக்கு மாறினேன். அது நன்றாகவே இருந்தாலும், பல மேலதிக வசதிகளுக்கு வேறுவேறு சேவைகளை நாட வேண்டியிருந்தது.

தமிழா! குழுவின் முகுந்த் மூலமாக நியூக்ளியஸ் என்ற பரி-நிரலி அறிமுகமானது. அதைத் தமிழ்ப்படுத்தி, நம் சொந்தத் தளத்தில் நிறுவினால் கிடைக்கக்கூடிய பல ஆதாயங்கள் என்னை அதன்பால் ஈர்த்தன.

சில வாரங்கள் சோதனைக்குப் பின்னர், 2004 பெப்ரவரி 14ஆம் நாள், முழுமையாக நியூக்ளியஸில் இயங்கும் இந்தத் தளத்திற்குப் பெயர்ந்தேன். இந்த நேரத்தில் நானும் வலைப்பதிக்க உதவியாக இருந்த மேலும் சிலரை/அமைப்புகளை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

ஆயிரம் நன்றிகள் நண்பர்களே!

அறிவிப்பு:
இந்தத் தளத்தில் பதிப்பிக்கப்படும் கருத்துகள் யாரையும் புண்படுத்தவோ, அவமதிக்கவோ அல்ல. யாருடைய காப்புரிமை பெற்ற படைப்புகள் இங்கு உரிமைமீறிப் பயன்பட்டிருப்பதாக தெரிந்தால், அதை என்னிடம் தெரிவித்தால் நன்றியுடன் அவற்றை எடுத்துவிடுவேன்.

மறுமொழி இடுபவர்களின் கருத்துக்கு முழுப் பொறுப்பு அவர்களைச் சாரும்.

மேலும் இங்கு பதிப்பிக்கப்படும் என்னுடைய ஆக்கங்களை மறுபதிப்பு செய்வதானால் எனக்கு ஒரு வரி சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


வாழ்க வளமுடன்!

அன்புடன்,
-காசி ஆறுமுகம்
ஏப்ரல் 29, 2004

About This Site: Kasi's Blogs (Tamil)

I started blogging in September 2003. I came to know about blogging from Dr. N. Kannan's post in e-suvadi yahoo group. The focus and encouragement given by Thisaigal e-zine for blogging in Tamil started the fire in me.  For about two months, I used rediffblogs.com service. As many visitors commented on its speed (or the lack of it :)),   blogspot.com service became my vehicle since November 2003. Even though it was much better, still I had to depend on external services for add-on features.

Thamizha! team's Mugunth introduced Nucleus CMS, a open source free software. The advantages in localizing it into Tamil, and installing in my own site attracted me towards it. After a few weeks of trials, I moved into this own site powered by Nucleus CMS Tamil version.< /a> I would like to recall those great people/organizations that helped me do all this:


Thanks a Ton, Folks!

Attention:
Content posted in this site is not intended to hurt or disrespect anyone. In case any content violate anybody's copyright, please bring it to my attention. I will be happy to remove it at once

Posters of comments are responsible for what they post.

And, if anyone wants to republish my writings from this site, please just drop a line to me.

Cheers!

Loving,
-Kasi Arumugam
April 29, 2004