சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

'குரோர்பதி-2'ல் ஒரு அறிந்த முகம் - 'கலெக்டர்' பாலா

bala-kbc2
நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான 'கோன் பனேகா க்ரோர்பதி - 2' நிகழ்ச்சியில் பல ஆச்சரியங்கள். முகமறிந்து கைகுலுக்கி பழகிய நண்பர் ஒருவர் அங்கே உற்சாகம் ததும்பும் சிரித்த முகத்துடன் அமிதாப்புக்கு எதிரில் அமர்ந்து பங்கேற்கும்போது, ஏதோ நாமே அங்கே உட்கார்ந்து உலகம் பூராவும் காண போட்டியில் பங்கேற்பதுபோல ஒரு உணர்வு. நம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவரும், கலைநயம் மிகுந்த நிழற்படங்களை எடுப்பவரும், அவற்றை இங்கே பகிர்ந்துகொண்டு நம்மை மகிழ்விப்பரும், பழகுவதற்கு இனிய நண்பருமான பாலமுருகன் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

கலந்துகொண்டதோடு எதற்கும் படபடப்பு அடையாமல், சரியான பதில்களாகக் கூறவே, கிட்டத்தட்ட அந்த முழு ஒரு மணி நேரமும் அவரது கேள்விபதில் அமர்வே ஒளிபரப்பானது. நேற்றைய நிகழ்ச்சியில் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வென்றிருக்கிறார். இன்னும் அவரது அமர்வு அடுத்த வாரமும் தொடரும். அதில் அவர் இன்னும் பல மடங்கு பரிசு வென்றிருப்பார் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

பாலாவின் அனுபவங்களை நம் தமிழ் வலைப்பதிவு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகோள்விடுத்தபோது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அடுத்த வாரம் எத்தனை லட்சங்களை வென்றார் என்று பார்ப்போம். அதோடு, பாலா தன் பொது அறிவைப் பெருக்கிக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகள், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்போருக்கான ஆலோசனைகளோடு, பரிசுத்தொகையை எப்படி செலவிட எண்ணியுள்ளார் என்றும் அவரிடம் கேட்டு எழுதுகிறேன்.

மேலும் மேலும் சிகரங்களைத்தொட பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

படம் உதவி: http://app.indya.com/kbc2/vote_episode57.asp

பாலா எதிர்கொண்ட கேள்விகள், முன்னேறிய பாதை பற்றிய வர்ணனைக்கு: (episode57 இன்னும் வலையேறவில்லை, முன்னேற்பாடாக சுட்டியை இட்டு வைக்கிறேன்) http://kbc2.indya.com/kbc2/episode/ep.html

காசி - clock 09:24:03 - ஞாயிறு, 18.12.05 - பொது - 6481x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search குரோர்பதி2ல் ஒரு அறிந்த முகம் கலெக்டர் பாலா

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

karthikramas சொன்னது:

பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 18.12.05, 13:24:18 தங்கமணி சொன்னது:

மகிழ்ச்சி. பாலாவுக்கு வாழ்த்துக்கள்

ஞாயிறு, 18.12.05, 13:35:42 சிங். செயகுமார் சொன்னது:

வாழ்த்துக்கள் பாலா!

ஞாயிறு, 18.12.05, 13:39:14 இரத்தினவேலு சொன்னது:

வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்

ஞாயிறு, 18.12.05, 14:07:43 enRenRum anbudan BALA சொன்னது:

Kasi,
Thanks for the info. and heartiest congrats and wishes to Collector BALA

ஞாயிறு, 18.12.05, 16:54:51 mookku sundar சொன்னது:

Convey my Congrats to our Bala

ஞாயிறு, 18.12.05, 19:15:18 அன்பு சொன்னது:

தகவலுக்கு நன்றியும், நண்பர் பாலாவுக்கு வாழ்த்துக்களும்.

ஞாயிறு, 18.12.05, 20:02:56 Mukundan சொன்னது:

Great Show Bala... Proud ACCETian Mukundan (1980-84 batch), California, USA

செவ்வாய், 20.12.05, 08:18:17 எம்.கே.குமார் சொன்னது:

மனமார்ந்த வாழ்த்துகள் பாலா அவர்களுக்கு.

செவ்வாய், 20.12.05, 09:35:19 தமிழ்பயணி சொன்னது:

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எனது மகிழ்வையும் வாழ்த்துகளையும் பாலாவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். முடிவை அறிய ஆவலாய் உள்ளேன்.

செவ்வாய், 27.12.05, 11:32:11

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it