சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
சில எண்ணங்கள்
சில எண்ணங்களை விளக்கமாக எழுதலாம் என்று நினனத்திருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. எனவே வேறு ஒரு நண்பருடனான மடல் பரிமாற்றத்துக்காக எழுதிய சிலவற்றை இங்கே பொதுவில் வைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மேலும் எழுதுவேன்.
> இப்பொழுது ஏற்படும்
> சலசலப்புக்கு காரணம் "காசியா
> இப்படி" என்று எழுந்த ஒரு
> அதிர்ச்சிதான்.
அட அட, என்ன ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டான் இந்த ஆள், அந்த அதிர்ச்சியில்
அவர்கள் பாவம் வார்த்தை வெளியில்வராமல் நிலைகுலைந்துபோனார்கள் அல்லவா?
ஓ..அப்படி இல்லையா? ஆமாம், அப்படியில்லைதான். காசிக்காகப் பரிந்துபேசுபவர்கள்
வார்த்தைகளையும் பாருங்கள். 'இதுதாண்டா போனஸ்' என்று தர்ம அடி போடுபவர்களின்
வார்த்தைகளையும் பாருங்கள், காசியை நம்பி ஏமாந்துபோனவர்கள் இப்படித்தான்
பேசுவார்கள் என்பது எல்லாருக்கும் சம்மதமானால் எனக்கும் சரியே.
> புறக்கணிப்பு
> என்பது மிகக்கொடுமையான
> தண்டனை என்பது (சின்ன
> கவுண்டர் க்ளைமாக்ஸ் ஞாபகம்
> இருக்கிறதா?)
முதலில் இந்தப் புறக்கணிப்பு என்பதே சரியானதா? தமிழ்மணம் வேறு தமிழ்
வலைப்பதிவுகள் வேறு என்பதை எத்தனை நூறு முறை தொண்டைதண்ணீர் வற்றக்
கத்தியிருப்பேன். காசியா இப்படி என்று ஒருவர் அதிர்ச்சியடையும் அளவுக்குக்
காசியின் மேல் துவேஷம், மன்னிக்கவும், பரிச்சயம்
இருந்தால் இந்த விஷயம்
அவர்களுக்குத்தெரியாதா? உங்களுக்குத் ஒன்று தெரியுமா? இன்று நடப்பதெல்லாம்
என்னமோ யாருமே எதிர்பாராததாக சித்தரிக்கப்பட்டாலும், இது முழுக்கமுழுக்க பரிணாம
வளர்ச்சிதான், அடுத்து நடக்கவேண்டிய ஒன்றுதான் என்பது சரியாக ஒருவருடம்
முன்னமேயே, சென்ற தீபாவளிக்கே நாஸ்ட்ரடாமஸ், இல்லை, காசி ஆறுமுகம் சொன்னதுதான்.
இங்கே பாருங்கள்:
=============================
//தமிழ்மணம் போன்று புதிய தளங்கள் அதைவிட மேம்பட்ட ஆற்றல்களுடன் உருவாக
வாய்ப்பிருக்கிறது என்பது என் நம்பிக்கை. எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்று
இருப்பதைப் போலல்லாமல் கருத்தொற்றுமை, கருப்பொருள், அரசியல், போன்ற காரணங்களால்
பல குழுக்களாகவும் வலைப்பதிவுகள் குழுமவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது
தமிழ்மணம் மட்டுமில்லை, எந்த ஒரு ஒற்றைத்தளமும் வலைப்பதிவுகள் முழுமைக்கும் ஒரே
வாசலாக இருக்கமுடியாது, இருந்தாலும் அது பரவலான சுதந்திரமான வளர்ச்சிக்கு
வழிவகுக்காது போகவும் வாய்ப்பிருக்கிறது. // - தமிழோவியத்துக்காக பாஸ்டன்
பாலாஜி கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள். தமிழோவியம் தீபாவளி மலரில்
வெளியானது. http://kasi.thamizmanam.com/?item=147
=============================
இன்னும் பல திரட்டிகள் வரட்டும், தமிழ்வலைப்பதிவுகள் வளரட்டும். ஒரு திரட்டியை
நம்பியா வலைப்பதிவு? என்னை இப்படி ஒரு திரட்டியை நம்பி வலைப்பதிவு
ஆரம்பிக்கவேண்டியிருந்தால் அந்தப் பக்கமே போயிடுக்கமாட்டேன். அது
வலைப்பதிவுகளின் மிக மிக அடிப்படை அம்சமான சுதந்திரத்துக்கே உலை வைக்கும் செயல்
அல்லவா? இதில் எங்கிருந்து வந்தது புறக்கணிப்பு?
> மத ரீதியான பதிவுகளைத்தவிர
> புறக்கணிப்பவரின் தகுதி
> கேள்விக்குள்ளாக்கப்படும்
> என்பது நிதர்சனம் என்றாலும்
> புறக்கணிப்பு தந்த
> அதிர்ச்சியை அவர்கள்
> மட்டுமல்ல அடுத்தவர்களாலும்
> ஜீரணிக்க முடியவில்லை.
முகமே இல்லாதவர்களுக்கு எங்கேயிருந்து வரும் இந்த மாதிரியான நிலை? மத
ரீதியானவற்றைத்தவிர இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் முகமிலிகளே. அவர்கள்
அடுத்தவர்களுக்கு அதிர்ச்சியைத்தர எடுத்துக்கொண்ட ஆயுதம் தானே முகமூடி. இந்த
ஆயுதத்துக்கு இரு புறமும் கூர்மை நண்பர்களே![]()
> இன்று
> இவர்களுக்கு நாளை நமக்கா
> என்று ஒரு எண்ணம் என்னையும்
> சேர்த்து
> பெரும்பான்மையினருக்கு
> வந்தது.
வரட்டும். 'காசியா இப்படி' என்று காசிக்குக் (சிலரின் வார்த்தகளில்) கோயில் கட்டி
வைப்பவர்களுக்குத்தெரியும் காசியின் நடுநிலைமை, 'கிடைச்சாண்டா மச்சான்,
போட்டுத்தாக்கு' என்று இன்று சாடுகிறார்களே, அவர்களைப் பற்றி நான் ஏன்
கவலைப்படவேண்டும்?. இது ஒன்றும் தன்னிச்சையான சர்வாதிகாரியின் இடமல்ல என்பது
கட்டாயம் என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும், எனக்காக மறைத்த கத்தியுடன்
தெருமுனையில் நின்றவர்களைப் பற்றி எனக்கு பயமுமில்லை, வருத்தமுமில்லை.
> கேவலப்படுவதை காட்டிலும்
> நாமாகவே விலகிப்போவது
> கௌரவம் என்பது எனக்கும் வந்த
> எண்ணம்தான்.
இங்கேயும் ஒன்று சொல்லவேண்டும் நண்பரே, யாஹூ குழுமங்களில் இருந்து வந்தவர்களின்
குழுமனப்பான்மையே இதற்குக் காரணம்.
சில வரையறைகள்:
1. தமிழ்மணம் குழுவல்ல
2. தமிழ்மணத்தில் யாரும் உறுப்பினர் அல்லர்
3. தமிழ்மணத்தில் யாரும் இணைந்துகொள்வதில்லை
thamizmaNam has no members. No one joins thamizmanam. No one registers
themselves to be members, they only submit thier details for LISTING. FOR
THAT MATTER NO ONE LEAVES ALSO! The blogs are only listed. So any blog can
get listed in any number of lists/aggregators. YES! it will be difficult to
understand for the mafia members, but that is the truth. When you build a
website you submit your blog to search engine. You don't register, do you?
No body registers in thamizmanam and thamizmanam does not gather any
personal details about the bloggers, including email. There is no way
thamizmanam can correspond with bloggers! In fact I have about 20 emails of
bloggers in my address book. thats all! In fact there is no way anyone can
verify a blog entry is submitted for listing by the blog owner. Even though
it is not mandatory to remove anyone's blog from thamizmanam, I do it upon
requests, only not to avoid unncessary hassle. So thamizmanam can continue to list any blog.
It requires a lot of understanding to know how these things
work. சிற்றிதழ் மனோபவாத்தில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் விளங்காது.
There is a forum in thamizmanam strictly for matters related to blogging and
thamizmanam activities. This forum has membership, registration, blah
blah... But there is no link between this forum and thamizmanam's main
activities.
> அனைவரின் அனுமானங்களும்,
> விருப்பங்களும்,
> வெறுப்புக்களும் இந்த
> சமயத்தில் வெளிவந்தன. இவன்
> காலி அவன் காலி என்று ஆபாசமாக
> எழுதிக்கொண்டார்கள்.
அந்தக்காலத்து
ஆனந்தவிகடனில் ஒரு ஜோக்:
- என்னப்பா நேத்து ராத்திரி உங்க வீட்டில் ஒரே சத்தம்?
- ஓ... அதுவா. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஒரே சண்டை.
- அப்புறம் என்னாச்சு?
- அப்புறமென்ன ரணகளம்தான். அவ என்னைய அடிக்க, திரும்ப, என்னை அவ அடிக்க, ஒரே
கைகலப்புத்தான்.
மேலோட்டமாய்ப் பார்த்தால் இருவரும் அடித்துக்கொண்டமாதிரி இருந்தாலும்
அடித்ததென்னாவோ ஒரே ஆள்தான் அடிவாங்கியது இன்னொரு ஆள்தான். அதேபோல இருக்கிறது
இந்தப் பொதுமைவாதம்: 'இவன் காலி அவன் காலி என்று ஆபாசமாக எழுதிக்கொண்டார்கள்.' -
யார் காலி என்று யார் ஆபாசமாய் எழுதிக்கொண்டார்கள்? காசியை தர்ம அடி போடும்
அணியினர்தானே. மற்றவர்களின் ஆபாசத்தை (மனம் பிறழ்ந்த போலி டோண்டுவை
விட்டுப்பார்த்தால்) காட்டமுடியுமா?
--------------------------
மற்றபடி business as usual at thamizmanam. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search சில எண்ணங்கள்
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
M. Sundaramoorthy சொன்னது:காசி,
சிறு விளக்கத்துக்கு நன்றி! தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகள் வெடித்தாகிவிட்டது. அடுத்து எண்ணெய்க் குளியல் தான். பலகாரமெல்லாம் சாப்பிட்டு முடிந்தபிறகு ஒருநாள் பேசுகிறேன். ![]()
தீபாவளி வாழ்த்துக்கள்!
ஞாயிறு, 23.10.05, 22:51:15 ராம்கி சொன்னது:எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி காசி!
//சிற்றிதழ் மனோபவாத்தில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் விளங்காது//
)
காசி,
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் தீபாவளி நல்வாழ்த்துக்களும்...
திங்கள், 24.10.05, 00:07:39 inomeno சொன்னது://> புறக்கணிப்பு
> என்பது மிகக்கொடுமையான
> தண்டனை என்பது (சின்ன
> கவுண்டர் க்ளைமாக்ஸ் ஞாபகம்
> இருக்கிறதா?)
முதலில் இந்தப் புறக்கணிப்பு என்பதே சரியானதா? தமிழ்மணம் வேறு தமிழ்
வலைப்பதிவுகள் வேறு என்பதை எத்தனை நூறு முறை தொண்டைதண்ணீர் வற்றக்
கத்தியிருப்பேன். காசியா இப்படி என்று ஒருவர் அதிர்ச்சியடையும் அளவுக்குக்
காசியின் மேல் துவேஷம், மன்னிக்கவும், பரிச்சயம் இருந்தால் இந்த விஷயம்
அவர்களுக்குத்தெரியாதா? //-Kasi
கீழ் கண்டவர் என் மனதின் எண்ணத்தை பிரதிபளிக்கிறார்.இவரைப் போன்றவர்களின் நியாயமான ஆதங்களையும் தாங்கள் கொஞ்சம் கண்டுக் கொண்டு இருந்திருக்களாம்.
Jayashree Govindararan:
இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
-inomeno
திங்கள், 24.10.05, 00:12:37 Alex Pandian சொன்னது:காசி,
தீபாவளி வாழ்த்துக்கள். சில/பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட இருப்பீர்கள் என நினைக்கிறேன். குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளியை எஞ்சாய் செய்யுங்கள். சுமார் 1 வருடத்திற்கும் மேலாக
தன் பணியை சீராகச் செய்துவரும் தமிழ்மணம் தளத்திற்கும் சில நாட்கள் தீபாவளி விடுமுறை கொடுத்தால், நன்று. தமிழ்மணத்தின் வாசகர் பக்கத்திற்கு அடிக்ட் ஆகியிருக்கும் பலருக்கும் தமிழ்மணத்தின் (உங்கள் மற்றும் குழுவின்) தொண்டு புரியும்.
- அலெக்ஸ்
திங்கள், 24.10.05, 00:19:38 anurag சொன்னது:தீபாவளி!!!
நான் ஏற்கனவே பட்டாசு வெடிச்சுட்டேன்.
)
அன்புள்ள காசி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சமீபத்துலே நடந்துபோன நிகழ்ச்சிகளிலே எனக்கு சிலது புரிஞ்சமாதிரியும் சிலது புரியாத மாதிரியும் இருக்கு.
நம்ம அலெக்ஸ் பாண்டியன் சொன்னதுபோல பலரும் இப்ப தமிழ்மணத்துக்கு அடிக்ட்டாகத்தான் இருக்கோம். இதுலேயே ஒரு சந்தோஷம் இருக்குன்றதை யாரும் மறுக்கமுடியாது காசி.
திங்கள், 24.10.05, 01:38:02 dharumi சொன்னது:காசி,
வாழ்த்துக்கள் - தீபாவளிக்கும்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
மற்றபடி business as usual at thamizmanam.
yes only the meaning of usual has changed for some bloggers.
perhaps this is the first diwali where you heared more crackers
than ever before.
Hi Kasi,
What about genuine bloggers like Aravindan? He is not a Mukamudi. You seem to be under pressure from some secoolaristic elements. Sorry, they are Christians. It will be too late before you realize this.
Arunmozi
Thanks for giving link to Technorati.
Regrds,
inomeno
மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
22:03:58 - ஞாயிறு, 23.10.05 -


