சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள்

காலையிலேயே இதுவும் தயாராகி இருக்கவேண்டியது. ஆனால் ஏதோ நுட்பச்சிக்கல், சரி செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. ஆகவே தாமதம். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

தமிழ்மணம்.காம் முகப்புப் பக்கத்தில் உள்ள இடையூடாடும் பட்டியலில் புதிதாக பச்சை விளக்கு ஒன்று தெரியும். இந்த விளக்கு அணைந்திருக்கும் பதிவுகள் *தற்போதைக்கு* திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

சில முக்கியக் குறிப்புகள்:

கீழக்கண்ட காரணங்களால் பதிவுகள் திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கக்கூடும்.

(0. என் நிரல் எழுதும் திறனில் பாரத்தைப் போட்டு சொல்கிறேன், இந்தப் பச்சை விளக்கு உண்மையிலேயே பட்டியலில் உள்ளவற்றை சரியாகக் காட்டும் என்று நம்புகிறேன், ஆனாலும் பிழை இருக்கலாம். பிழைக்குத் தகுந்த படி அவரவர் தங்கள் மாதாமாதம் படியளக்கும் தவச தானியத்தில் குறைத்துக்கொள்ளலாம். அல்லது கொடுக்கும் கசையடியில் ஒண்ணு ரெண்டு கூட்டிக்கொள்ளலாம்.)

1. மூன்று மாதத்துக்குமேல் புதுப்பிக்கப்படாதவை

2. நுட்பக்காரணங்களால் திரட்டப்படமுடியாதவை

3. பிழையான/காலாவதியான யு.ஆர்.எல்.

4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.

இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும். ஆனால் அதற்குள் பக்கத்து அறைக்குப் போய்விட்ட என் மனைவி வக்கீலையே பார்க்கப்போய்விடாமல் இருக்க அந்த பகவான் கிருபையளிக்க வேண்டும்.

வீட்டில் 'கஜினி' படம் பார்க்க ஆசைப்பட்டார்கள், 'நண்டு' படமாவது விசிடியில் வாங்கிப் போட்டுக்காட்டவேண்டும்:(

காசி - clock 13:51:06 - புதன், 19.10.05 - பொது - 5991x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ளஇல்லாத பதிவுகள்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

-/பெயரிலி. சொன்னது:

காசி
பரீட்சைமுடிவு அறிவிப்புப்பலகைகளிலே பெயரைத் தேடின காலம் மாதிரி தேடிப் பார்த்தேன். என்னுடைய அலைஞனின் அலைகள்: குவியம் இனை (http://wandererwaves.blogspot.com...) பச்சைவிளக்கிலும் காணேன் சிவப்புவிளக்கையும் காணேன். பச்சைவிளக்கும் ஒளிமயமான எதிர்காலமும் கண்ணிலே தெரியவில்லை. பெயிலா? இது என்ன சோதனை ஐயனே. மஞ்சட்பத்திரிகையோ நீலப்படமோ பிங்க் பட்டியோ பதிவிலே இல்லையே ;-) என் கண்ணிலே குறைபாடில்லாவிட்டால், காரணம் 4 என்றால் பரவாயில்லை, காரணம் 1 என்றால் கண்டுகொள்ளவும்.

புதன், 19.10.05, 14:54:16 karthikramas சொன்னது:

அருணின் பதிவுக்கும் இவ்வாறு ஆகியுள்ளது. தற்செயலாக பிழையாக நடந்திருக்கும் என எண்ணுகிறேன். நானும் தமிழ்மண இணைப்பைக்கொடுத்துவிட்டேன். ஹி ஹி :-)

ஆகா.. அப்ப பெயரிலியை விளையாட்டுல சேத்துக்கலியா?

புதன், 19.10.05, 14:59:07 karthikramas சொன்னது:

//பரீட்சைமுடிவு அறிவிப்புப்பலகைகளிலே பெயரைத் தேடின காலம் மாதிரி தேடிப் பார்த்தேன்.//
எனக்கும் அதுவே ஞாபகம் வந்தது. நான் பாஸ் :-)

புதன், 19.10.05, 15:00:19 என்னெமோ போங்க சொன்னது:

காசிசாரே "" பதிவ ஏன் தூக்கீட்டிங்க?
நான் இன்னாசார் தப்பு பண்ணினேன்? :-( :-( :-(

தூக்கியதற்கு காரணம் நம்பர் (4) என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
சாரே நீங்களே அந்த பச்சை விளக்க ஆப் செய்யும் போது இந்த காரண நம்பரயும் போட்டால் என்னமாத்ரி ஆளுகளுக்கு வசதியாக இருக்கும்.

புதன், 19.10.05, 15:03:05 என்னமோ போங்க சொன்னது:

காசிசாரே "என்னமோ போங்க" பதிவ ஏன் தூக்கீட்டிங்க? :-( :-( :-( :-(
நான் இன்னாசார் தப்பு பண்ணினேன்?

தூக்கியதற்கு காரணம் நம்பர் (4) என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
சாரே நீங்களே அந்த பச்சை விளக்க ஆப் செய்யும் போது இந்த காரண நம்பரயும் போட்டால் என்னமாத்ரி ஆளுகளுக்கு வசதியாக இருக்கும்.

புதன், 19.10.05, 15:05:22 -/பெயரிலி. சொன்னது:

காசி
நண்பர் ஒருவர் வட அமெரிக்காவின் கீழே இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், -/ என்பதிலே தொடங்குவதால், வலைப்பதிவுகள் பட்டியற்றேர்விலே The Blogger Formerly Known As Blob இன் குறியீட்டுக்கு இட ஒதுக்கீட்டு கிடைக்கவில்லையென நினைக்கிறேன்.

புதன், 19.10.05, 15:14:38 பெயரிலியின் நண்பன் சொன்னது:

"ஆரபிக்கப் பட்டத்தேதிவாரியாக" (7 என்று ஒரு சதுரம் இருக்கிறதே அங்கே) கிளிக் செய்து பார்த்தால் உங்கள் பெயர் வருகிறது. ஒருவேளை "ப" கர வரிசையிலே -/ , பிரச்சிசெய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..

புதன், 19.10.05, 15:26:17 பெயரிலியின் நண்பன் சொன்னது:

பிரச்சினை அதுவல்ல பெயரிலி, உங்கள் RSS feed வருவதுதான் முக்கியம். அதுதான் குவியம் - 18 தமிழ்மணத்தில் வந்து விட்டதே!

புதன், 19.10.05, 15:28:55 பாலாஜி சுப்ரா சொன்னது:

விளக்கு அணைந்திருக்கும் பதிவுகளின் OPML கிடைக்குமா?

புதன், 19.10.05, 16:30:15 Anand சொன்னது:

காசி
இந்த பதிவின் மீதும் பச்சை விளக்கு இல்லை.
காரணம் அறியலாமா ?
http://anandvinay.blogspot.com/...

புதன், 19.10.05, 19:13:31 Vasanthan சொன்னது:

Dear kasi,
What happened to PODICHCHI?

புதன், 19.10.05, 21:33:43 டிசேபுரோ சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 22:02:07 ராம்வோச்சர் சொன்னது:

ராம்வோச்சர் குறித்த பின்னூட்டத்துக்கு எமது எதிர்வினையை கீழ்க்காணும் சுட்டியினூடாகச் சென்று காணலாம்
http://ramwatchintamil.blogspot.com/2005/10/blog-post.html...

நன்றி.

வியாழன், 20.10.05, 01:10:47 என்றென்றும் அன்புடன் பாலா சொன்னது:

I see GREEN (not RED) :-)

Importantly, I thank you and team for the immense efforts you all have put in building thamizmaNam and maintaining it.

வியாழன், 20.10.05, 02:12:34 அதிரைக்காரன் சொன்னது:

அன்பின் காசிக்கு,

எனது வலைப்பூவான வெட்டிப்பேச்சு உலகத் தமிழர்களுக்கு பல அரிய தகவல்களை வழங்கும் இலவசச் சேவையை வெட்டியாகச் செய்து வருகிறது. பட்டியலில் எந்தக்கலர் பல்பும் இல்லாமல் வெட்டியாக இருக்கிறது. இப்பதிவும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா?

தவறுதலாக நீக்கப் பட்டிருந்தால் சேர்க்க வேண்டுகிறேன். தெரிந்தே நீக்கப்பட்டிருந்தால் தயைகூர்ந்து காரணம் கூறுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.
உலகத்தமிழர்களின் வெட்டிப் பிரதிநிதி
அதிரைக்காரன்

வியாழன், 20.10.05, 02:35:17 Kasi சொன்னது:

நான் முன்பு குறிப்பிட்டபடி: //என் நிரல் எழுதும் திறனில் பாரத்தைப் போட்டு சொல்கிறேன், இந்தப் பச்சை விளக்கு உண்மையிலேயே பட்டியலில் உள்ளவற்றை சரியாகக் காட்டும் என்று நம்புகிறேன், ஆனாலும் பிழை இருக்கலாம்.// ஒரு பிழை இருந்தது. சரி செய்திருக்கிறேன், அதன் காரணமாக பல பதிவுகள் திரட்டிப்பட்டியலில் இருந்தும் பச்சை விளக்கு எரியவில்லை. ஆனந்த் விநாயகம், அருண் வைத்தியநாதன் உள்பட பல பதிவுகள் இதனால் திரட்டபடாததுபோலத் தெரிந்திருக்கலாம். பிழைக்கு பொறுத்தருள்க. அவற்றின் மறுமொழி நிலவரம், நட்சத்திரக் குறியீடு ஆகியவை தடங்கலின்றி இயங்கியதிலிருந்து, இவை விலக்கப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கலாம்.

அதிரைக்காரன், கவனக்குறைவாக உங்களது பதிவை விலக்கிவிட்டேன், மன்னிப்புக் கோருகிறேன். இப்போது சேர்த்துவிட்டேன்.

என்னமோ போங்க, (என்னம்மா பேரு இது?) எனக்கு தனிமடல் எழுதமுடியுமா? நன்றி.

மற்ற அனைத்து நண்பர்களுக்கும் தனியாக பதில் கொடுக்கமுடியாததற்கு மன்னிக்கவும். நேரவசதிப்படும்போது சொல்கிறேன்.

வியாழன், 20.10.05, 10:59:34 மரியகுமாரன் சொன்னது:

இடி,மின்னல் என்ற என் வலைப்பூ பட்டியலில் இருக்கிறது. ஆனால் பச்சை விளக்கோ மஞ்சல் விளக்கோ எறியவில்லை. (பெயரைப்பார்த்து அணைந்து விட்டதோ?)

மத துவேஷங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவன் என்ற உரிமையில் என் வலைப்பூவும் பட்டியலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் கிறிஸ்துவனாக இருந்த போழ்தும் பிற சமயங்களை தாக்கி எழுதியதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் கொள்கைகளின் சிறப்புகளை அடுத்தவர் மனம் புண்படாமல் சொல்லலாம்.

என் வலைப்பூவை தங்களின் திரட்டிப்பட்டியலிருந்து நீக்க தகுந்த காரணம் இருந்தால் வருத்தமில்லை. தவறுதலாக இருந்தால் மறுபரிசீலனை செய்யுங்கள்.

வியாழன், 20.10.05, 11:24:37 Kasi சொன்னது:

'இடிமின்னல்' சேர்த்துவிட்டேன். மூன்று மாதங்களாக எழுதாதவை நீக்கும்போது, தவறுதலாக இரண்டு மாதங்கள் என்ற கட்டளையை இட்டு, உடனே ரத்து செய்தேன். அப்போது உங்களுடையது விலக்கப்பட்டிருக்கலாம். மன்னிக்க.

வியாழன், 20.10.05, 11:45:20 என்னமோ போங்க சொன்னது:

//என்னமோ போங்க, (என்னம்மா பேரு இது?) எனக்கு தனிமடல் எழுதமுடியுமா? நன்றி.//

Dear Kasi ,
email sent to <kasi@thamizmanam.com>

வியாழன், 20.10.05, 11:56:37 என்னமோ போங்க சொன்னது:

Dear Kasi ,
email sent to <kasi@thamizmanam.com>

subject:
From "Ennamoo Poonga " about http:randakka.blogspot.com REMOVAL

வியாழன், 20.10.05, 11:57:29 cara சொன்னது:

ramanathan
have you seen other blogs from chinnavan, mugamoodi and others comments whipping and slashing kasi? I am sure you told them about hurt and pain. If a user can feel pain , imagine that of a provder

வியாழன், 20.10.05, 17:05:17 Mahesh சொன்னது:

Dear (Ms/Mr ) CARA,
I cant make it whether this a male name or a female name. Forgive me for this.

Could you please point where Mr Provider has been slashed and whipped ? Is asking questions called slashing ?
Is president of your country is Hitler?

வியாழன், 20.10.05, 17:29:13 இராமநாதன் சொன்னது:

cara அவர்களே,
சின்னவன், முகமூடி, குசும்பன் போன்றோரின் பதிவுகள் வெறும் கிண்டலே என்று நான் நினைத்து வருகிறேன். எனது பதிவுகள் உட்பட,பலவற்றை கிண்டல் செய்து வந்துள்ளனர். இதில் தவறேதும் இருப்பதாய் எனக்கு தெரிய/புரிய வில்லை.

நகைச்சுவை/நக்கல்/க்ரிட்டிஸிசத்தை அடக்க வேண்டிய சூழ்நிலையென்ன வென்பது எனக்கு புரியவில்லை.

நான் //மிகவும் hurting-ஆக இருக்கின்றன. // என்று எழுதியதற்கும் திரு. காசி அவர்கள் எழுதி செயல்படுத்தியதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும் இல்லையா'?

வியாழன், 20.10.05, 18:01:58 Jayashree Govindararan சொன்னது:

காசி அவர்களுக்கு,

தமிழ்மணத்தில் நான் உறுப்பினரோ, எனக்கென சொந்த வலைப்பதிவோ இல்லாதபோது இதுபற்றி கருத்துத் தெரிவிப்பது சரியா என்று பலமுறை யோசித்து, தொடர்ந்து இந்தத் தளத்தை உபயோகித்தவள்- வேறு தொழில்நுட்பங்கள் தெரியாததால் இந்தத் தளத்தை மட்டுமே வலைப்பதிவுகள் படிக்க தொடர்ந்து உபயோகித்து வருபவள் என்ற முறையில் என் கருத்தையும் சொல்லநினைக்கிறேன்.

நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்று யாரும் இங்கு சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை என்று திடீரென நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது... நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.

Contd...

வியாழன், 20.10.05, 22:51:05 Jayashree Govindararan சொன்னது:

........இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.

முன்பு ஒருமுறை குழுமங்களுக்கும் தமிழ்மணத்திற்குமான வித்தியாசத்தை யாரோ ஒருவரது பதிவில் எனக்குச் சொன்னீர்கள். தேடி எடுத்துப்போட எனக்கு நேரமில்லை என்றாலும் உங்களுக்கும் அது மறந்திருக்காது என்றே நம்புகிறேன். குழுமங்கள் இன்னும் இவ்வளவு மோசமாகவில்லை என்றுதான் தோன்றுகிறது.

Contd...

வியாழன், 20.10.05, 22:52:17 Jayashree Govindararan சொன்னது:

....
உங்கள் இந்தச் செயல் இனி தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதப்போகும் ஒவ்வொரு பதிவாளர்களையும் பதிவுகள் எழுதுவதற்கு முன்னும், புதிதாக சேர நினைப்பவர்களை, சேருவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவைப்பதாகவே இருக்கும். உங்கள் ரசனையோடு தங்கள் எழுத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பதாகவே அது இருக்கும்.

உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். ...லாம் ...லாம் ...லாம். மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் (காலணா திவச தம்படிக்குப் பிரயோசனமில்லாத) கருத்து! வருந்துகிறேன்!!!

உள்ளபடியே உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகக் குழுவினரின் சேவைக்கு ஒரு தீவிர வாசகியாக மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.

வியாழன், 20.10.05, 22:52:59 அன்பு சொன்னது:

ஜெயஸ்ரீ,

உங்கள் எண்ணத்தை வெகு அழகாக பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள்.
உங்கள் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது - நன்றி.

வியாழன், 20.10.05, 22:59:55 துளசி கோபால் சொன்னது:

இங்கே என்ன நடக்குதுன்னு புரியாம வாயடைச்சு நின்னுக்கிட்டு இருக்கேன். இவ்வளவு தீவிரமா முடிவு எடுக்கணுமுன்னா நம்ம காசிக்கு 'என்னவோ' நடந்திருக்கு. அது என்னன்னு தெரியாதவரைக்கும் காசியையே குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கறதும் நல்லாவா இருக்கு.

ஆனா, நம்ம ஜெயஸ்ரீ சொன்னாப்புலே சம்பந்தப்பட்டவுங்களுக்குத் தனிமடலிலே தெரிவிச்சு இருக்கலாம். 'விளக்கு எரியாதவங்க' மனசளவுலே காயப்பட்டுட்டாங்க.

ஏன் காசி இப்படி திடுதிப்புன்னு செஞ்சுட்டீங்க? நாமெல்லாம் ஒரே குடும்பமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே.(-:

வியாழன், 20.10.05, 23:17:32 inomeno சொன்னது:

/சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
/
hatsoff Jayasree !!

/ஏன் காசி இப்படி திடுதிப்புன்னு செஞ்சுட்டீங்க? நாமெல்லாம் ஒரே குடும்பமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே.(-: /

Thanks Thulasi !

வெள்ளி, 21.10.05, 00:03:25 அன்பு சொன்னது:

<i>ஏன் காசி இப்படி திடுதிப்புன்னு செஞ்சுட்டீங்க? நாமெல்லாம் ஒரே குடும்பமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே.(-:</i>

துளசிக்கா,
அப்படித்தான் நானும் நினைச்சுடடுருந்தேன்...
ஆனால் இப்போது பலரும் காசியைப்பற்றி எழுதும்போதுதான் அப்படி இல்லை என்று தோன்றுகிறது.
காசி, இங்கு நிலவும் பல பிரச்னைகளாலோ அல்லது அவர் சொல்லும் ஏதாவாது காரணத்தாலோ இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், அவரை நல்லவிதமாக தொடர்புகொண்டு கேட்கலாமே? அதைவிடுத்து இப்படி தரக்குறைவாக பலரும் பலவிதமாக எழுதுவதால் என்ன சாதித்துவிட முடியும்?

அவர் செய்த தன்னார்வ உதவியெல்லாம் விடுத்து, ஒரு நண்பனாக அல்லது குறைந்தபட்சம் ஒரு சகவலைப்பதிவாளராகவோ கூடவா மதித்து இதுபற்றி எழுதுபவர்கள் எழுதக்கூடாது!?

வெள்ளி, 21.10.05, 02:29:50 anurag சொன்னது:

உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமலே பலரும் பேசி வருகிறார்கள். நான் உட்பட பல வலைப்பதிவர்களும் பல மாதங்களாக கேட்டு வந்ததைத்தான் தற்போது காசி செய்திருக்கிறார். ஆனால் அத்தனை பழியையும் தானே சுமந்து கொண்டு!

வலைப்பதிவுகள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று பேசி வந்தவர்களெல்லாம் இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்றுதான் புரியவில்லை.

காணவில்லை காணவில்லை என்று புலம்பிய பலரது பதிவுகள் தமிழ்மணத்தில் இன்னும் திரட்டப்பட்டுதான் வருகின்றன. அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

எந்த வலைப்பதிவும் ஒரு பதிவோ அல்லது சில பதிவுகளோ வீணானதாக இருந்தால் நீக்கப்படுமென்று தோன்றவில்லை. ஒட்டு மொத்தமாக அத்தனை பதிவுகளுமே பிரச்சினைக்குட்பட்டதாக இருந்தால் மட்டுமே ஒரு வலைப்பதிவு திரட்டியில் இருந்து விலக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். வேறு யாருக்காவது மாறாக நிகழ்ந்திருப்பின் ஒரு நண்பராக, நம் குடும்ப அங்கமாக காசியை நினைத்து உரிமையுடன் கேட்கலாமே.

என்ன நிகழ்கிறது என்றே புரியாமல் யாரோ சிலர் கூறுவதை மட்டும் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள். உங்கள் பிரச்சினையை அவரது பதிவில் நேரடியாக எழுதிப் பார்ப்பதில் என்ன சிரமம்? தமிழ்மணம் என்ற திரட்டி மீதும் காசி என்ற நண்பர் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் அதைச் செய்யுங்கள். மற்றவர்கள் தொடர்ந்து காற்றில் கையை வீசி......

வெள்ளி, 21.10.05, 04:17:40 ஜோ சொன்னது:

அன்பு ,அனுராக் கருத்துக்கள் எனக்கு உடன் பாடாய் இருக்கிறது.

காசி போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் அவசர கதி கருத்துக்களும் கிண்டல்களும் , சொந்த முயற்சியில் பொது பயன் கொடுக்க நினைக்கும் யாருக்கும் சலிப்பையும் விரக்தியயும் தான் கொடுக்கும் . இது வரவேற்கத்தக்கதல்ல.

வெள்ளி, 21.10.05, 04:44:06 நேச குமார் சொன்னது:

காசி,

எனது இரு வலைப்பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளன. இஸ்லாம் பற்றிய வலைப்பதிவு மட்டுமல்லாது, நான் பொதுவாக எழுதி வந்த எண்ணச்சிதறல்கள் வலைப்பதிவும் நீக்கப் பட்டுள்ளது. நான் உங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்தது போன்று, எனக்கு தனிப்பட்ட முறையில் இதனால் வருத்தமோ, வேதனையோ இல்லை. மேம்போக்கிற்க்காக இதைச் சொல்லவில்லை, உள்ளத்தின் அடியாழத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். இவ்வலைப்பதிவுகளால் எனக்கு கிரீடம் கிட்டப் போவதில்லை, இருக்கிற கிரீடங்களே போதும் - இவ்வாழ்நாள் முழுவதற்கும்.

ஆனாலும் ஒரு சில வார்த்தைகள்.......

இந்த தமிழ்மணம் உங்களது முயற்சியால் உருவானது, குழுப் பங்களிப்பு இருந்தாலும் தமிழ்மணம் என்றாலே நீங்கள் தாம் நினைவுக்கு வருகின்றீர்கள். மிகக் குறைந்த காலத்தில், இந்த அளவுக்கு பிரபலமான, வசதியான, பலரையும் எழுத, வாசிக்கத் தூண்டிய ஒரு தளம்/குழு/திரட்டி யாக தமிழ்மணம் வளர்ந்தது, தன்னோடு சேர்ந்து பலரையும் தமிழையும் வளர வைத்தது. இந்தச் சாதனையின் கிரெடிட் முழுவதும் உங்களுக்கே.

இந்நிலையில் உங்களது கருத்துக்களை செயல்படுத்துவது குறித்து நான் விமர்சிப்பது முறையா என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன் - தவறென்றால் புறந்தள்ளுங்கள், சற்றே சிந்தித்தபின்.

தமிழ்மணம் வளர்ந்ததற்கு, வளர்வதற்கு, வாழ்வதற்கு - ஏன், இணையத்துக்கும் கூட இது பொருந்தும், காரணம் - இந்த மீடியாவிற்கே உரித்தான சில வசதிகள், சிறப்பு அம்சங்கள்தாம். அந்த சிறப்பம்சங்கள், வசதிகள் இல்லாத இணையம் காலப்போக்கில் வீழ்ந்துவிடும். லோக்கலைசேஷனை மறுத்த சமஸ்கிருதம் வீழ்ந்தது போன்று.

- தொடர்கிறேன்

வெள்ளி, 21.10.05, 09:19:57 நேச குமார் சொன்னது:

இணையத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமானதொன்று - இதில் இருக்கும் சுதந்திரம். இந்த சுதந்திரத்திற்குப் பின்னே பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக சென்சார்ஷிப் இல்லாதது, மறைவுத்தன்மை, அந்த மறைவுத் தன்மை தரும் பாதுகாப்பு போன்ற பலவித காரணங்கள்.

இந்த சுதந்திரம் பல சமயம் முறைகேடாகப் பயன்படுத்தப் படுவது உண்மைதான்(உஷா அவர்கள் சொல்லியுள்ளது போன்று). ஆனால், எங்கெங்கெல்லாம் சுதந்திரம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் அதை மிஸ்யூஸ் செய்வதும் இருக்கும். ஒழுங்கை ஏற்படுத்துகிறோம் என்று முயலும்போதெல்லாம் சுதந்திரம் தடைபடுவது தவிர்க்க இயலாததாகின்றது. சுதந்திரம் இல்லையேல் வளர்ச்சி, முன்னேற்றம் இல்லை ( ஆன்மீக முன்னேற்றம் குறித்து அடிக்கடி நான் இவ்விஷயத்தை நினைவு கூர்வதுண்டு).

இராமச்சந்திரன் உஷா ஒரு விஷயம் சொல்லியிருந்தார் - அதாவது இந்த உரசல்கள், சண்டைகளில் பலவித அபிப்ராய மாற்றங்கள் நிகழ்கின்றன என்று. என்னளவில் நான் பலமுறை இதை உணர்ந்திருக்கின்றேன். உதாரணமாக ஈழம்/ஈழத்தமிழர் பற்றிய விஷயங்கள். வெறும் இந்திய தேசிய உணர்வில் மிதந்து மேலோட்டமாக சிலவித அபிப்ராயங்களைக் கொண்டிருந்த என்னை மாற்றியது இந்த இணையம்தான். இணைய விவாதங்கள், சண்டைகள், சேற்றடித்தல்களையும் மீறி இந்த ஆறுவருடங்களுங்களில் நான் வளர்ந்தது அதிகம். பலவித விஷயங்களில் எனது கருத்துக்கள் பெரும் மாற்றமடைந்திருக்கின்றன, இணையத்தால். அதிலும் குறிப்பாக தமிழிணைய உலகத்தில் நிகழ்வது போன்ற கருத்து மோதல்கள் மற்ற இந்திய மொழிகளில் நிகழ்வதில்லை. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் எதோ ஒரு கருத்தே மேலோங்கி டாமினேட் செய்கிறது. இங்குதான் இந்த அளவுக்கு விவாதங்களும், மோதல்களும் நிகழ்ந்து, ஒரு தனி உலகமாக இயங்கிவருகிறது இந்த தமிழ் இணைய உலகு.

வெள்ளி, 21.10.05, 09:25:07 நேச குமார் சொன்னது:

தொடர்ச்சி....

இந்நிலையில், இம்முயற்சிகள் தமிழ்மணத்திற்கு நல்லதல்ல என்பது எனது அபிப்ராயம். தமிழ்மணம் இருதரப்பு/பலதரப்பு கருத்துக்களுக்கும் அனுமதி வழங்கிவரும் நிலையில் அது ஒரு சார்பாக செயல்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் நிற்காது. ஆகவே, தொடர்ந்து தமிழ்மணம் பழைய படியே இயங்குவது நல்லது எனத் தோன்றுகிறது. தமிழ்மணம் இதனால் வீழாதுபோனாலும், வளர்ச்சி தடைப்படும், தாமதப் படும் என்பது எனது அபிப்ராயம்.

மற்றபடி, நடத்தும் உங்களுக்குத்தான் இதன் முழுப்பரிமாணமும் தென்படும். பிரச்சினைகள், சங்கடங்கள் குறித்த முழு புரிந்துணர்வும் என் போன்றவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால், உங்களது முடிவு/எண்ணம் எப்படியிருந்தாலும், சரியே. வாழ்த்துக்கள்.

- நேச குமார் -

வெள்ளி, 21.10.05, 09:26:29 Pandi சொன்னது:

ஏன் காசி இப்படி திடுதிப்புன்னு செஞ்சுட்டீங்க? இவ்வளவு தீவிரமா முடிவு எடுக்கணுமுன்னா நம்ம காசிக்கு 'என்னவோ' நடந்திருக்கு. அது என்னன்னு தெரியாதவரைக்கும் ஆதரவு/எதிர்ப்பு குடுக்கிறது நல்லதில்ல. அதனால அப்பீட்டு ஆகிக்கிறேன்.

வெள்ளி, 21.10.05, 09:31:33 dharumi சொன்னது:

காசி அவர்களுக்கு,
இப்போதாவது நீங்கள் மெளனம் கலைப்பது நல்லதென்று நினைக்கிறேன்.
நீங்கள் இதுவரை செய்திருக்கும் நல்ல முயற்சிகள் இப்போது களங்கப்பட்டு நிற்பதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது.

நம் 'குடும்பம்' மீண்டும் ஒன்று சேர்ந்து, அதன்பின் நாம் எல்லோருமாகச் சேர்ந்து சட்ட திட்டங்களை உருவாக்கி, 'நல்லதொரு குடும்பமாகி' மேலும் வளர்வோமே.

விழுவது எழுவதற்கே...

வெள்ளி, 21.10.05, 11:13:04 Suresh - penathal சொன்னது:

dear friends.. this is NOT an advertisement; you may see it since my post is connected to this issue.

http://penathal.blogspot.com/2005/10/blog-post_20.html
my post here

வெள்ளி, 21.10.05, 11:53:26 M. Sundaramoorthy சொன்னது:

காசி,
'தமிழ்மணம்' முகப்பில் 'நீங்களே உங்கள் வலைப்பதிவை பட்டியலில் சேர்க்கலாம்' என்று உள்ளது. சிலர் தாமாகவே தமிழ்மணத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக 'பட்டியலில் நீக்கலாம்' என்ற வசதியையும் நேரம் கிடைக்கும்போது சேர்த்துவிடவும். தங்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழ்மணத்தில் வைத்திருப்பதாக வரும் கூச்சல்கள் அடங்கும்.

வெள்ளி, 21.10.05, 13:56:04 Kasi சொன்னது:

//சிலர் தாமாகவே தமிழ்மணத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக 'பட்டியலில் நீக்கலாம்' என்ற வசதியையும் நேரம் கிடைக்கும்போது சேர்த்துவிடவும்.//

பாடியலில் சேர்க்கைக்கு அளிக்கும்போதே:

இங்கே சேர்க்கப்படும் தகவலை மாற்றி அமைக்க பட்டியல் நிர்வாகிக்கு உரிமை உண்டு என்பதை அறிக. ஆபாசம்/திவிர அரசியல்/தனிமனித வெறுப்பு போன்ற (இவை உதாரணம் மட்டுமே) காரணங்களால், பட்டியலில் தொடர்ந்து பங்குபெறும் தகுதியை இழந்ததாக நிர்வாகியால் கருதப்படும் எந்த வலைப்பதிவையும் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும் நிர்வாகிக்கு முழு உரிமை உணடு. நீங்களாக உங்கள் தகவல்களை பட்டியலில் இருந்து நீக்க விரும்பினால், மின்னஞ்சல் மூலமாக நிர்வாகிக்கு தெரிவிக்கலாம். மேலும், செய்தியோடை வழியாகத் தகவல்களைத் திரட்டவும், அவற்றை பொதுநோக்கத்திற்காக இந்தத்தளத்தில் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் காட்டவும் அனுமதி அளிக்கிறீர்கள்.

இந்தத் தகவல்களில் தனிமனிதருக்கான பிரத்தியேகமானவை ஏதும் சேர்க்கப்படாததால் உங்கள் அடையாளம், தனிஉரிமை ஆகியவற்றுக்கு எந்த பந்தமும் நேர வாய்ப்பில்லை.

என்று அறிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 21.10.05, 14:10:20 Kasi சொன்னது:

மேலும் terms of use-ல்:
terms of use

For the attention of Bloggers

Blogger’s information presented here are for the purpose of news reporting only. Blogger’s copyright, if any, are not violated in such a display of headline and/or preview, which is in accordance with the doctrine of ‘fair use’. (Refer: http://www.copyright.gov/title17/92chap1.html#107 for US Copyright Office’s explanation).

thamizmanam.com reserves the right to list any blog submitted based on its own norms of acceptance. Anyone wishing to delist his/her blog is requested to write an email to thamizmanam.com administrator (adm at thamizmanam.com). However, the right of decision over such request, and over the amount of time it takes to implement the same are reserved with thamizmanam.com. Since it is beyond the means of thamizmanam.com to verify the right of ownership of the blog concerned, such requests for submission or removal will be decided based on merits of the case and available information, and the decision of thamizmanam.com is final.

thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com’s decison is final. Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law.

என்றும் இருக்கிறது. கொஞ்சம் அடுத்தவரைச் சுட்டும் முன் செய்யவேண்டிய வீட்டுப்பாடத்தை ஒழுங்காக செய்யட்டும்.ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பியவர்களுடைய பதிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஒரு மின்னஞ்சல் காத்திருப்பில் இருக்கிறது.

வெள்ளி, 21.10.05, 14:14:59 நல்லடியார் சொன்னது:

5.சமயம் பற்றிய நேர்மறையான பதிவுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அடுத்தவர் சமயத்தை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் எழுதப்படும் பதிவுகள் தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கிவைக்கப்படும்.

சகோதரர் காசிக்கு,

பிறர் மத/நம்பிக்கை துவேஷப்பதிவுகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்ற உங்களின் தனிப்பட்ட கருத்தை ஆதரிப்பதோடு அதனை வலியுறுத்தி தங்களுக்கு தனிமடலிட்டவன் என்ற உரிமையில் என் நிலையையும் விளக்க விரும்புகிறேன்.

தமிழ்மணத்தில் சாதாரண வாசகனாக வலம் வந்த நான், இஸ்லாமிய எதிர்ப்புவாத (நேசகுமார், ஆரோக்கியம் போன்ற) பதிவுகளுக்கு பதில் சொல்லும் முகமாகவே எதிரொலி என்ற பெயரில் வலைப்பூ பதிந்து வந்தேன்.

என் மதம் சார்ந்த நம்பிக்கைகளில் அவதூறும் துவேஷமும் தலை விரித்தாடியதை சகிக்க முடியாமல்தான் நான் முடிந்தவரை கண்ணியமாக பதில் கொடுக்கத் தொடங்கினேன். நானும் என் சமூகமும் விரும்பும் நம்பிக்கை துவேசிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது என்னால் பொழுதுபோக்கு,சினிமா, அரசியல் என போலியாக எழுத இயலவில்லை. இவற்றில் எழுத முடியவில்லை என்பதை விட எழுதாமல் இருக்க அத்தகைய துவேசப்பதிவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்பதே உண்மை.

இதர ஊடகங்களில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம் பதில் கொடுக்காமல் மெளனமாக இருந்துவிட்டு, தமிழ்மணத்தில் முன்வந்தது தமிழன் என்ற தார்மீக உரிமையிலும், இதுவரை சகோதரர்களாய் பழகி வரும் சகதமிழனை இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்தி பிரிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் அவாவிலும்தான் என்பது தவிர்த்து வேறு காரணம் இல்லை.

என் நம்பிக்கை மீதான துவேசங்களை உண்மையக் கொண்டு விளக்கும் முகமாகவே குர்ஆன், ஹதீஸ் கொண்டு என் கருத்துடன் பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து எழுதி வந்தேன். மேலும் அடுத்த மதத்தையும் இதுவரை விமர்சிக்கவில்லை என்றும் உளமாற நம்புகிறேன்.

ஆகையால் துவேசம் என்ற அளவுகோள் என் வலைப்பூவுக்கு பொருந்தாது என்பது என் தாழ்மையான கருத்து.

...தொடர்கிறது

சனி, 22.10.05, 01:26:47 நல்லடியார் சொன்னது:

...தொடர்ச்சி

4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.

தள நிர்வாகி என்ற முறையில் உங்கள் முடிவில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. என் வலைப்பூ தங்கள் திரட்டியிலிருந்து நீக்கப்பட்டதிலும் வருத்தமில்லை. மேலும் தற்காலிக ஏற்பாடுதான் என்று சொல்லி இருப்பதாலும், இன்னும் சிறப்பாக செயல்படுத்த பகவான் உங்களுக்கு கிருபை செய்ய வேண்டுகிறேன்! என் நிலையை தெளிவுபடுத்தி உங்களுக்கு நானிட்ட விரிவான தனிமெயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பதிலிடுங்கள்.

மற்றபடி இன்னும் பல விடயங்களை தமிழ்மணம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம். ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போது அடைக்கப்பட்டு விட்டதால் உங்களின் பதிவில் பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். தேவைப்பட்டால் தொடருவேன்.

அன்புடன்,
உங்கள் சகோதரன்
நல்லடியார்

சனி, 22.10.05, 01:27:54 aravindan neelakandan சொன்னது:

Dear Kasi,
i fully appreciate and agree with your decision to remove my blog from your service. As i donot want to pollute your secular garden with the blogs of a Hinduthvite like me, i request mr.kasi to also remove the following blogs of mine from thamizmanam:
ecovellanmai.blogspot.com
parinamam.blogspot.com

thank you for allowing me to use your services till these days.

regards

s.aravindan neelakandan

சனி, 22.10.05, 02:15:50 dharumi சொன்னது:

http://dharumi.weblogs.us/2005/10/22/...

சனி, 22.10.05, 07:50:02 தாணு சொன்னது:

எனது பதிவு `காக்க காக்க' இந்த பதிவின் பின்னூட்டமாக எழுதியது. ரொம்ப நீளமாயிருந்ததால் தனி பதிவாக்கிட்டேன்

சனி, 22.10.05, 13:17:32 பச்சை விளக்குக்கன் சொன்னது:

ஒரு நடிகர்/தயாரிப்பாளர் " நடிகைகள் எல்லாம் விபச்சாரிகள் " என்று பேட்டி கொடுத்தார்.
அதை எதிர்த்து "குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டார்கள் இந்த தமிழ்மணத்தில்
( நிர்வாகிகளும், இப்போது தணிக்கை முறைக்கு ஜாலரா தட்டும் பலரும் ).

ஆனால் இந்த பதிவுக்கும் மட்டும் நான் ஓட்டு போட வேண்டுமாம. இந்த நியாத்தை என்ன சொல்வது. மொத்தம் 15 ம் மேற்பட்ட பதிவுகள் வந்து இருக்கின்றன. அனைத்தின் நோக்கமும் நடிகைகள் விபச்சாரிகள் என்று தெரிவுபடுத்தவே.

இந்த ஜால்ராக்களின் Selective censorship பை என்ன வென்று சொல்வது ?

சனி, 22.10.05, 21:36:55 ரமணி சொன்னது:

காசி;"ஆனாலும் பிழை இருக்கலாம். பிழைக்குத் தகுந்த படி அவரவர் தங்கள் மாதாமாதம் படியளக்கும் தவச தானியத்தில் குறைத்துக்கொள்ளலாம். அல்லது கொடுக்கும் கசையடியில் ஒண்ணு ரெண்டு கூட்டிக்கொள்ளலாம்.''

ஹூம். இந்த வார்த்தைகள் காசி அவர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதைக்காட்டுகிறது. ஏன்யா, ஒரு மனுசன் தன் உழைப்பை கொட்டிக்கொடுத்து, லாபம் எதுவும் எதிர்பார்க்காமல், தமிழ் இணையத்தில் பரவ ஒரு வலைத்தளத்தை உருவாக்கி கொடுத்தா, நிறைய பேர் அதை ஒருத்தரை ஒருத்தர் திட்டித்தீர்க்கறதுக்கும், கிண்டல், கேலி, வெட்டிப்பேச்சுக்கும் உபயோகப்படுத்திக்கிட்டு, இப்ப அவர் ஒரு தற்காலிக முடிவு எடுத்திருக்கும்போது, காச்மூச்னு கத்தறீங்களே. நன்றி கெட்ட உலகமடா இது!!

ஞாயிறு, 23.10.05, 02:34:17 மதுமிதா சொன்னது:

அன்பு காசி,

குழந்தை பிறந்த உடன்,ஒரு வயதாகும் போது என ஒவ்வொரு நிலையிலும் சுற்றத்தார் குழந்தையைக் குறித்து என்ன வேண்டுமானாலும்,எதை வேண்டுமானாலும் என்று குழந்தைக்கு நல்லது,தீயது இது இது என எல்லாவற்றையும் பேசுவார்கள்.அவற்றில் குழந்தைக்கு எது தேவையோ அதனை மட்டும் ஏற்றுக் கொண்டு குழந்தையை போஷிப்பாள் தாய்
குழந்தையின் நல் வளர்ச்சியினை மட்டுமே கவனத்தில் கொண்டு,எந்த பலனையும் எதிர்பாராது.

நீங்கள் தாயினைப்போல் தமிழ்மணத்திற்கு கடமையினை செய்துள்ளீர்கள்.

தமிழ்மணம் நண்பர்களை,எழுதும் பயிற்சியினை,பதிவு செய்யும் முறையினை கற்கும் திறனை என அள்ளித்தந்த நன்மைகள்

ஏராளம்.

பொறுப்பினை எடுத்துக் கொண்டு,ஒரு நாள் கூட செய்து முடிக்க இயலாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்,
அறியாமையினால்.

நல்லது என்று படுவதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் நன்மைக்கே.
தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கே.

மதுரபாரதி போன்றோரின் பதிவுகள் மூன்று மாதங்கள் எழுதவில்லை என்பதால் நீக்கப்பட வேண்டுமா?
அதற்கு வேறு ஏதேனும் வழிவகை செய்ய இயலுமா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அன்புடன்
மதுமிதா

ஞாயிறு, 23.10.05, 03:28:51 anurag சொன்னது:

//மதுரபாரதி போன்றோரின் பதிவுகள் மூன்று மாதங்கள் எழுதவில்லை என்பதால் நீக்கப்பட வேண்டுமா?
அதற்கு வேறு ஏதேனும் வழிவகை செய்ய இயலுமா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.//

செயலற்றிருக்கும் பதிவுகள் திரட்டியின் பளுவை வெறுமனே அதிகரிப்பதால் தற்காலிகமாகத்தானே நீக்கப்படுகிறது. மீண்டும் பதிவு எழுதப்படும்போது அறிவிப்பு கொடுத்தால் உடனே சேர்க்கப் பட்டு விடுமே.

ஞாயிறு, 23.10.05, 03:43:49 BALA சொன்னது:

http://balaji_ammu.blogspot.com/2005/10/blog-post_22.html...

ஞாயிறு, 23.10.05, 04:18:21 ரவிசங்கர் சொன்னது:

காசி, திரட்டி effciencyஐ அதிகரிப்பது குறித்த உங்கள் முடிவுகளை வரவேற்கிறேன். இதில் சர்வாதிகாரம் எல்லாம் ஒன்றும் இல்லை. வண்டி நிறைய பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கவிழ்வதை விட அளவாக பயணிகளை ஏற்றி நன்றாக பயணம் போவது நன்று. நீங்களே சொன்னது போல், பிற்காலத்தில் வகைப்பிரிப்பு வசதி வந்தால் அப்பொழுது தற்சமயம் 4வது காரணம் காட்டி நீக்கப்பட்ட சிலப்பதிவுகளை சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்புறம், இந்த 3 மாதக் கணக்கு பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். வலைப்பதிவு உரிமையாளர் போடும் புதுப்பதிவு மட்டும் தான் கருத்தில் கொள்ளப்படுமா இல்லை அவருடைய பழைய பதிவுகளில் யாரேனும் பின்னூட்டம் இட்டால் கூட அப்பதிவு activeஆக இருப்பதாக கணக்கில் கொள்ளக் கூடுமா..மற்றபடி, மத, சாதி துவேஷ, ஆபாச வலைப்பதிவுகளை நீக்கி விடுவதில் உடன்படுகிறேன்..இவற்றை எல்லாம் விலக்கி நல்ல பதிவுகளை கண்டுபிடிப்பது பெரும் பாடாக இருந்து வந்தது

ஞாயிறு, 23.10.05, 06:19:58 சங்கரய்யா சொன்னது:

அன்புடைய காசி,
இந்த குழப்பங்களைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களின் மீதுதான் எத்தனை சொல்லடிகள், வருத்தமாக இருக்கிறது, வேறென்ன செய்வது?

ஞாயிறு, 23.10.05, 08:24:03 இப்னு ஹம்துன் சொன்னது:

அன்பு காசி அவர்களே!
நேற்று வரை பச்சை விளக்கிலிருந்த என் வலைப்பூ, நெற்று புது பதிவிட்டப் பின்னும் பட்டியலிடப்படவில்லை. இன்று பச்சை விளக்கையும் காணோம். தயை கூர்ந்து கவனியுங்களேன்.
-IBNU HAMDUN
http://ezuthovian.blogspot.com...
THANKS

புதன், 26.10.05, 13:38:30 anurag சொன்னது:

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

தமிழ்மணத்தில் தமிழ்ப்பதிவுகள் சுட்டி!!!

புதன், 26.10.05, 15:48:20

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it