சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

ஒரு அறிவிப்பு:

தமிழ்மணம் திரட்டியின் பழுவைக் குறைக்கும் விதமாக, பல மாதங்களாக புதுப்பிக்கப்படாத பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கொண்டவையும். மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகளும் திரட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பதிவுகள் திரட்டுவது, அறிவிக்கப்பட்டுள்ள '20 நிமிடத்துக்கு ஒருமுறை' இனி நடக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் அவ்வப்போது இந்த திரட்டிப்பட்டியலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கும். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
-காசி

காசி - clock 20:40:52 - செவ்வாய், 18.10.05 - பொது - 6583x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

PK Sivakumar சொன்னது:

Kasi, can you please give the list of blogs that have been removed from Thamizmanam. Though Thamizmanam is built using your extensive efforts and enthusiasm, I see it as a sign of autocratic behaviour by Thamizmanam nirvaakikal. Also, Thamizmanam is projected from a common person to the President of India as a forum for all Tamil bloggers. In such a case, I am against removing anyone unless that person crossed all limits and wrote vulgarly in a consistent way. If you have technical issues, removing members is not a solution. Who decides about who writes usefully or not?

If you are going to reply that its your personal property, kindly disregard this comment. If you are going to say that it is a service to Tamil community, lets keep all our actions and reasons for them in the open. Lets not victimise anyone based on our prejudices or give an impression to others that we are victimising them. Expecting an immediate reply.

Thanks and regards, PK Sivakumar

செவ்வாய், 18.10.05, 20:59:18 Ramesh சொன்னது:

Where I can find the list ? Is there a link mainitained ?

செவ்வாய், 18.10.05, 21:15:42 promise-this-is-not-a-spam சொன்னது:

Kasi Let me translate the above feedback in English in Tamil for you:
Why did you remove Kusumban's blog!!

செவ்வாய், 18.10.05, 21:16:50 Kasi சொன்னது:

//I see it as a sign of autocratic behaviour by Thamizmanam nirvaakikal.//

Only one info: If any autocratcy is seen it is my own. Nirvaakikal have no role to play.

செவ்வாய், 18.10.05, 21:21:15 promise-this-is-not-a-spam சொன்னது:

காசி. குசும்பனுடைய கடைசி பதிவு சந்திரமதியினுடைய பதிவுகளைக் கிண்டல் செய்வதாக இருந்தது. அதன்பின்னாலேயே இது நீக்குப்பட்டதோ என்ற எண்ணத்திலேயே மேற்கட்ட கேள்வி வந்திருக்கின்றதெனத் தோன்றுகின்றது. சந்திரமதி ஓர் ஆரம்ப உறுப்பினராக இருந்து தொடக்கிய மரத்தடியிலிருந்து அவரை விலகும்வண்ணம் உள்நுழைந்த அமீனாக்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வழக்கம்போல நியாயம் தர்மம் நீதிப்போர்வைகளின் அடிப்படையிலே எழுவது வியப்பில்லை.

நீதியின் பெயரினாலே நானும் முகமூடியும் கேட்கிறோம்: "எதற்காக குசும்பனின் பதிவு நீக்கப்பட்டது?"

செவ்வாய், 18.10.05, 21:35:23 PK Sivakumar சொன்னது:

So far Kasi has not told that Kusumban blog is one of the removed. However, promise-this-is-not-a-spam says Kusumban blog is removed. It shows either that person knows what goes on inside Thamizmanam or trying to spread some rumors. Anyway, If Kusumban blog is removed, I am not writing it in support of him alone. This question is in support of anyone who got affected by this. Thats why I asked Kasi to give me the list and reason for removing each one.

Regarding Maraththadi, anyone can become a member and ask questions openly there. So, I ask "promise-this-is-not-a-spam" to do so if he/she has any senses.

Kasi has replied that if its autocracy thats only by him. Point taken. I hope he would reply for my other questions too. Thanks.

Thanks and regards, PK Sivakumar

செவ்வாய், 18.10.05, 21:42:27 முகமூடி சொன்னது:

// நானும் முகமூடியும் // இன்னா பினாமி ஸ்பாம் நைனா... என்ன கேக்காமயே என்ன கூட்டணி சேத்துகிட்ட... நீதியின் பேர்ல வேற கேள்வி கேட்கிற... நான் என்ன மேற்படி கட்சிகாரன்னு நெனச்சிட்டீரா?

நான் (அ)நீதியின் பேர்ல இல்லாம சாதாரணமா கேட்கிறேன் : "எதற்காக குசும்பனின் பதிவு நீக்கப்பட்டது?"

செவ்வாய், 18.10.05, 21:59:34 promise-this-is-not-a-spam சொன்னது:

as usual nice twisting try buddy
// promise-this-is-not-a-spam says Kusumban blog is removed. It shows either that person knows what goes on inside Thamizmanam or trying to spread some rumors.//

or simply s/he has seen mugamoodi's post in manRam.
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=657#657...

//Regarding Maraththadi, anyone can become a member and ask questions openly there. So, I ask "promise-this-is-not-a-spam" to do so if he/she has any senses./

I see that. However, if you ever gain your sense in your life, please come back and read what has written above, and what you have replied. "சந்திரமதி ஓர் ஆரம்ப உறுப்பினராக இருந்து தொடக்கிய மரத்தடியிலிருந்து அவரை விலகும்வண்ணம் உள்நுழைந்த அமீனாக்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வழக்கம்போல நியாயம் தர்மம் நீதிப்போர்வைகளின் அடிப்படையிலே எழுவது வியப்பில்லை." Anyone with a coherant thinking or an open mind to discuss the what I wrote will understand exactly that I am not talking about becoming member and asking questions.

Thanks kasi for replying his question. An intelligence decision. You saved yourself from a lot of trouble I wonder why these questions did not arise when you posted your last post on the similar issue, where dyno asked the questions.

செவ்வாய், 18.10.05, 22:00:29 Kumaran சொன்னது:

Dear Kaasi,

Can you please let everyone know the list of blogs removed from Thamizmanam? Or atleast you can leave a comment on the respective blogs telling that their blog has been removed for that particular reason.

I am not going to argue about whether this is a good decision or not, even though I feel against it. You may have your own reasons for doing this and you may decide not to disclose the reasons. But I guess it is a minimum courtesy for the bloggers to let them know that their blogs have been removed due to this Arivvippu.

Thanks and regards,
Kumaran.

செவ்வாய், 18.10.05, 23:49:39 சிறுசு சொன்னது:

நீதி(க்கட்சி)யின் சார்ப்பாய் நானும் கேட்கிறேன்..

( உடனே நீ என்ன முதலியாரா !! என்று கட்சி சேர்த்துடாதீங்கோ !! )

என்ன ஆச்சு நம்ம குசும்பரின் பதிவுகளுக்கு ??
திடீரென காணாம போயிட்டார் !!!

புதன், 19.10.05, 00:18:47 promise-this-is-not-a-spam சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 00:29:19 promise-this-is-not-a-spam (original) சொன்னது:

--நீக்கப்பட்டது--

புதன், 19.10.05, 00:54:33 ரமணி சொன்னது:

ரொம்ப நாளா நான் எதிர்பார்துக்கொண்டிருந்த முடிவை தைரியமா எடுத்திருக்கீங்க. ரொம்பநாளா எழுதாததுனால என் பதிவு நீக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.

புதன், 19.10.05, 00:54:55 promise-this-is-not-a-spam (original) சொன்னது:

//I leave to the readers' own interpretation on the intention of the poster, who posted the third post under the same net-name I used earlier.//
read the FOURTH post

புதன், 19.10.05, 00:59:44 inomeno சொன்னது:

/மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகள்/

இது எந்த வகையில் தவறு என சொல்ல முடியுமா?
பி.கே.சி சொன்னது போல் இது தங்கள் தனிப்பட்ட சொத்து என நீங்கள் சொன்னால்,இதுவரை தாங்கள் அளித்த சேவைக்கு நன்றி கூறி இதோடு என் கேள்வியை முடித்துக் கொள்கிறேன்.

புதன், 19.10.05, 01:00:28 Anonymous சொன்னது:

இது உங்கள் தனிப்பட்ட சொத்து என்று நினைத்தீர்களானால் எங்கும் போய் நீங்கள் தமிழ் ப்ளாக்கர்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளாதீர்கள்.

புதன், 19.10.05, 01:05:30 அன்பு சொன்னது:

ஒரு சிரமமான முடிவை மனத்திறத்துடன் எடுத்திருக்கின்றீர்கள், பாராட்டுக்கள்.

பல பதிவுகள் முகம்சுழிக்கும் வகையிலும், மனச்சாட்சியில்லாமலும், பொதுவில் எழுதுகிறோம் என்ற உறுத்தலில்லாமலும் வருவதால் அதைக்கட்டுப்படுத்துவது வரவேற்கத்தக்க முயற்சி. ஆனால், அதை எந்த அளவுகோள்கொண்டு பிரிப்பது என்பதுதான் கேள்விக்குறி. தமிழ்மணத்தின் நிர்வாகிகளோ வேறு தன்னார்வம் கொண்டவர்களின் ஆலோசனையின் பேரிலேயோ இது நடந்திருந்தாலும், இதுபோன்ற குழப்பங்கள் இன்னும் அதிகமாக வரத்தான் செய்யும். நீங்களும் இதை எதிர்பார்த்துத்தான் பிறர் தலையீடில்லாமல் உங்கள் முடிவை அறிவித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

அதேபோல், நீங்கள் நீக்கப்பட்ட வலைப்பதிவுகளின் பட்டியலை இங்கிட்டாலும் - ஆளாளுக்கு எங்களுடைய கருத்துக்களை சொல்வோமே தவிர, தீர்வொன்றும் ஆகப்போவதில்லை. ஆனாலும், என்னுடைய தனிப்பட்ட விருப்பம்:
வலைப்பதிவர்கள் தன்னுடைய பதிவு தமிழ்மணத்தில் இருக்கிறதா இல்லையா என்று சென்று பார்ப்பதைவிட, நீக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவிப்பு வேண்டுமானால் அனுப்பலாம். அவர்கள் தன்னுடைய பதிவு ஏன் நீக்கப்பட்டிருக்கக்கூடாது என்ற தன்னிலைவிளக்கம் வேண்டுமானால் தனியாக உங்களுக்கோ, அல்லது இங்கோ இடலாம்... ஆனாலும் அதற்குத்தீர்வென்ன, யார் முடிவெடுப்பது?
அதே போல், இது ஒரு தொடர்முயற்சி என்றே நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள் - அதனால் 'இவன் பதிவை ஏன் நீக்கல?', 'அவன் பதிவை மட்டும் ஏன்...?' என்று இனி முழுநேர வேலையாகப்போகிறது. மேலும் பதிவு சரி - பின்னூட்டத்தில் இதுபோன்ற கருத்து வரும்போது என்ன செய்வது!?

தமிழ்மணத்தின் கர்த்தா நீங்கள் என்றாலும், அதை அனைவருக்கும் ஒரு சேவையாக பொதுமைப்படுத்தியதால் ஒவ்வொருவரும் தமிழ்மணத்தைப் பொதுவானது என்றே பார்க்கின்றனர் - பெரும்பாலோனர் அதை நல்லவழியிலும், சிலர் இங்கேயே சிறுநீர் கழித்தும் விடுகின்றனர்.

அதனால் உங்கள் ஒழுங்குபடுத்தும் முயற்சியை திறம்பட தொடருங்கள். வாழ்த்துக்கள்.

புதன், 19.10.05, 01:31:17 rayakaran (tamilarangam) சொன்னது:

எனது பதிவில் பாலியல் சார்ந்ததும், வர்த்தகம் சார்ந்த விளம்பரங்கரள திட்மிட்டு தமிழ் மன்ற பதிவின் ஊடாக சிலா ஈடுபடுகின்றனர். நான் அவற்றை நீக்கி வந்தேன். இதை கவணத்தில் கொள்ளவம். இதன் ஈமெயில் உடாக கொண்ட முழு விபரம் உள்ளது.

புதன், 19.10.05, 02:27:48 என்றென்றும் அன்புடன் பாலா சொன்னது:

Kasi,
Considering the amount of hatred and ill will generated in recent times, I think yours is a positive step for curtailment of such activities. As anbu suggested, I think it would be appropriate if you could send a message to the concerned if his/her blog or posting has been removed from thamizmaNam.

புதன், 19.10.05, 02:42:34 PK Sivakumar சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 02:57:23 தமிழ்வாணன் சொன்னது:

அன்பின் காசி அண்ணா,

எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கொண்டவையும். மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகளும்
நீக்கப்படுவதாக அறிவித்திருக்கீறீர்கள்.

எதிர்மறையான விமர்சனங்களை கொண்டவையென எவை கருதப்படுகின்றன என்பது பற்றி எனக்கு விளங்கவில்லை. ஆனால் மதநம்பிக்கைகளை விவாதிப்பது மட்டுமே நோக்கமான பதிவுகளை நீக்குவதில் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.
அனைத்து மதங்களுமே சொல்லுகின்ற நெறிகளை பின்பற்றி நல்ல சமுதாயத்துக்கு எழுத்தாளர்கள் வழிகாட்டவேண்டும். மதரீதியான விடயங்களை மதத்துக்குள் விவாதிக்கலாம். அதிலே திருத்தங்களை முன்மொழியலாம். ஆனால் மற்ற மதங்களை சுட்டிக்காட்டி அவற்றை கேலி செய்வது ஏற்க கூடியதல்ல.

ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டும். உதாரணமாக தமிழர் புனிததலங்களில் தமிழில் வழிபாடுகள் செய்யபடவேண்டும் என விவாதிப்பது ஆரோக்கியமானது என கருதுகிறேன்.

புதன், 19.10.05, 03:53:08 ஊமைக் கிழவன் சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 03:57:55 ravi srinivas சொன்னது:

I think that the blogger whose blog you propose to remove should be given a notice first and the reason why it is likely to be removed. It is difficult to arrive at a criteria for removing a blog. However bloggers who propogate hatred or incite violence or wantonly indulge in character assasination or use the blog for spreading rumors and
false information cannot expect that you should include their blogs also in the feed.
Freedom of expression does not mean that one can behave irresponsibily and get
away with that. You can have a panel to periodically examine blogs and their
contents.Since you are offering it as a facility to all without any commercial motive
there is nothing wrong that you have some expectations from other bloggers on
content etc. So please make the process of removing blogs more objective and
transparent.

புதன், 19.10.05, 04:46:52 P.V.Sri Rangan சொன்னது:

காசி,வணக்கம்!உங்கள் முடிவானது ஆரோக்கியமா அல்லது ஆரோக்கியமில்லையாவென்பது குறித்து எனக்குப் பிரச்சனையில்லை.

ஆனால் பதிவுகளைத் தூக்குதல் என்பது தவிர்க்கப்படவேண்டியது.இதுக்குப் பல காரணங்களை என்னால் முன்வைக்க முடியும்.

ஒன்று காழ்புணர்வைக் கொட்டித்தீர்ப்பதென்றாலும் அதனூடாகக் கருத்துக்களைச் சென்றடையும் நபர்கள் நல்லதைப் பெறவும்-பெறுவதின் வாயிலாக் தமது கருத்தாளுமையை வளர்க்கவும் 'விவாதம்'எதுகுறித்தும்-அப்பாவின்காதலி-அம்மாவின் காதலன் குறித்தும் விவாதம் தொடரணும்.

இதைமட்டுப்படுத்தப்போய் பின் கருத்துக்களுக்கே சாவு மணியடிப்பதில் முடியும்.

இது நோய்கான அறிகுறி.

மதங்களுக்குள் அடிபாடு இன்று நேற்றா தொடர்ந்தது?அது மனிதவாழ்வு தொடரும்வரை தொடரும்.இதைக் காசி நிறுத்திவிடுவதால் தமிழ்மண வெளியில் நிறுத்திவடுவதாக!இதை எங்ஙனம் புரிவதென்றால் கருத்தாடலென்ற பண்பை வெறும்'தூய்மை வாதக்'கண்கொண்டு பார்க்காது மனிதனை அவன்(ள்) மனம் திறந்து பேச வைப்பதென்று எடுப்பதாகும்.

இன்றைய உலக நடப்பில் இந்த கருத்துகளுக்குத் தூக்கு வழங்கும் மனத்தை ஏற்க முடியாது.

இது அதிகாரத்துவ -தூய்மைவாதச் சகதியில் உங்களைத; தள்ளப்போகின்றது.

எனது அநுபவத்தில் கூறுகிறேன் இதை.ஈழத்தில் எண்பதுகளில் சமூகப்பிரச்சனைகளுக்கு இயக்க அரசியல்ப் பிரிவு உறுப்பினன் என்ற தமிரோடு நான் ஆற்றிய சமாதனச் செயற்பாடு இறுதியில் மின்கம்பத் தண்டனை வரைச் சென்றது.

இது வேண்டாம்.

எல்லோரும் நூறு பூக்களை மலர வடுவோம்.

அதுள் மல்லிகையும் வரட்டும்,எருக்கலையும் வரட்டும்.

இதனால் எமது தமிழ் மணம் அழுக்கடைகிறதே என்றால் உலகம் இவையெல்லாவற்றோடுதாம் இயங்கிகிறது.

உங்கள் முயற்சி ஆரேராக்கியமான வழிக்கு வழிசமைக்கா என்பதற்கு அடி ஆர்த்தி'ரோசா வசந்'தின் பதிலிட்ட பின்னூட்டே சாட்சி!அது இதோ:
'''காசி அவர்களே இந்த மாதிரி இவர்களின் குழாயடி சண்டைக்கு ஒரு முடிவே இல்லையா? '''
By அடி ஆத்தி, at 10/19/2005 6:42 PM
அன்புடன்

ப.வி.ஸ்ரீரங்கன்

புதன், 19.10.05, 06:17:00 PK Sivakumar சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 07:17:50 VM சொன்னது:

காசி அவர்களே,
தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரைத்த 25 பகுதியில் தற்போது 17 மட்டுமே வருகிறது

புதன், 19.10.05, 07:51:14 கொழுவி சொன்னது:

ஆஹா.. இனி இந்தச் சண்டைகள் ஓயும் வரை நான் என் பதிவில் எதவும் எழுதுவதில் பயனேதும் இல்ல.. ஏன்னா யாரும் அங்க வரமாட்டாங்க! அதனால இவன் ஏதும் எழுதலைன்னு தூக்கிடாதீங்க... ப்ளீஸ்....

புதன், 19.10.05, 07:53:11 kirukan சொன்னது:

I favour this move... Though I welcome criticism (Religion, Movies or any subject), some blogs have crossed their limit long back (dont ask how you measure this limit... This is my scale).

In fact, I am terrified to see some blogs which really hurt my sentiments.

At some point we need some control... I think its the right time.

புதன், 19.10.05, 08:15:23 Padma Arvind சொன்னது:

காசி
பேச்சு சுதந்திரம், தனிமனித உணர்வுகளை புண்படுத்தாவரைதான் அனுமதிக்கபடுகிறது. எனக்கு உரிமை உண்டு என்பதற்காக அடுத்தவரின் கருத்துக்கள் அல்லாமல் தனிமனித தாக்குதலை தொடரும் போது அது சட்ட சிக்கல்களில் சிக்கி கொள்ள கூடும். தனி மனிதர், அவரின் குடும்ப உறுப்பினர்கள என்று எல்லோர் மீதும் வன்முறை செய்வது கண்டிக்கபட வேண்டிய ஒன்று.
ஒருவரின் உரிமைக்காக பலரை வன்முறைக்கு ஆளாக்குவது சரியில்லை. முழு பொறுப்பையும் நீங்களே ஏற்றதற்கும் என் பாராட்டுக்கள் காசி. கட்டுப்பாடு இல்லாமல் மரியாதை காக்கும் நேர்மை நம்மிடம் இன்னும் வரவில்லை என்பதால்தான் சட்டம், காவல் என்ற அத்தனையும். வரும் என்ற நம்பிக்கை உண்டு.

புதன், 19.10.05, 08:27:38 Srikanth சொன்னது:

Kasi,

This is not a move in the right direction. You own/run thamizmanam, however, there is a certain amount of public trust that you are holding. That public trust does not include with it the mandate to be the sole arbiter of what is appropriate and what is not.

Thus far, the criteria for determining what is appropriate is vague. Nor is it democratic. It introduces a sense of uncertainty and false prestige to the community.

Your intentions were probably good in instituting this move, but there is a lack of clarity in it's execution. I urge you to take it back.

Srikanth

புதன், 19.10.05, 08:49:51 muthu சொன்னது:

Since iam very new to blogging i cannot comment..but one suggestion.....why not put seperate area for religious postings and hatred messages...those who are interested can read those..it need not be recommended by readers and it need not come up in the index page

புதன், 19.10.05, 09:05:01 reader சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 09:17:19 DJ சொன்னது:

காசி, தொடர்ந்து மூன்று மாதங்களாய் எழுதாதவர்களைத் திரட்டியிலி இருந்து விலக்குவது என்பதைத் தவிர பிற காரணங்களை ஏற்றுக்குகொள்ள முடியாது போல இருக்கிறது. , மதம் சார்ந்த பதிவுகளையோ மற்றக் காழ்ப்புணர்வுப் பதிவுகளையோ அவ்வளவாக வாசிக்காததால் (சிலர் இப்படித்தான் எழுதுவார்கள் என்று ஒன்றிரண்டு பதிவுகளை வாசித்துவிட்டுப் பிறகு அந்தப்பக்கம் போவதில்லையாதலால்) இவை குறித்துப் பேசத் தயக்கம் இருப்பினும், இந்தப் பதிவுகள் அனைத்துமே நாம் வாழும் சமூகத்தின் அடையாளங்கள்தானே.,..வக்கிரமாயோ காழ்ப்புணர்வாய் இருந்தாலும் (அதற்காய் அவற்றை ஒப்புக்கொள்கின்றேன் என்று அர்த்தம் இல்லை). சில வருடஙகளுக்கு முன், இப்படி தணிக்கை செய்யத்தொடங்கித்தான் திண்ணை அங்கே விவாதத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்த பலரை இழக்கவேண்டி வந்தது. . மற்றப்படி உங்களதும் மற்ற நிர்வாகிகளினதும் உழைப்பையும் செலவிடும் நேரத்தையும் மிகவும் மதிக்கின்றேன் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன். நான் சொல்ல விரும்பியதை சிறிரங்கன் தெளிவாய்க் கூறியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். .

புதன், 19.10.05, 09:29:49 vaamanikandan சொன்னது:

matter enkitta illai...ana vitta thuukiduvaaro nu irukku.....
ethayavathu pottu vaikkiren!

புதன், 19.10.05, 09:36:25 reader சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 09:40:22 அசோக் சொன்னது:

வருத்ததக்க முடிவு

புதன், 19.10.05, 10:09:53 M. Sundaramoorthy சொன்னது:

Kasi,
I spoke against removing few blogs (presumably blasphemous) from thamizmanam. Wiith due respect and appreciation for your efforts, time, and material resourses in creating this wonderful resource worldwide, and thanks to your team for maintaining it, I request you not to micromanage. It is not good for the healthy growth of this resource and the present action will only start its downward spiral. Please restore the active blogs without much delay and it is also important to announce which blogs were removed even if they were inactive.

Sundaramoorthy

புதன், 19.10.05, 10:21:53 கல்வெட்டு சொன்னது:

வருந்தமான முடிவு.

புதன், 19.10.05, 11:40:47 இணையகுசும்பன் சொன்னது:

காசி மற்றும் ஏனைய தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

எனது இணைய குசும்பன் பதிவு தமிழ்மணத் திரட்டியில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை- பகுதி, மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் பகுதி மற்றும் இன்று புதிதாய் எழுதப்பட்டவை 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது பகுதிகளிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. முகமூடி என்பவர் மன்றத்தில் காணவில்லை : குசும்பன் (http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=657#657...) என்று எழுப்பிய கேள்விக்கு தற்சமயம் வரை காசி & கோ'விடமிருந்து பொறுப்பான பதிலில்லை. எனது பதிவில் பின்னூட்டமாக திருமிகு. துளசிகோபால் "உங்களைத் தூக்கிட்டாங்களாமே உண்மையா?" (http://kusumban.blogspot.com/2005/10/blog-post_112966329586225770.html#c112968630367130905... )என்று வினவினார். அப்போதுதான் காசியின் "ஒரு அறிவிப்பு" (http://kasi.thamizmanam.com/?item=206#commentform...) பதிவினைப் பார்த்தேன். அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று காசி அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்மண மன்றத்திலே குசும்பனைக் காணோமென்று முகமூடி என்ற பதிவில் எழுதுபவர் ஏற்கெனவே பதிந்து விட்டார். எனவே எனது கருத்துகளை எனது வலைப்பூவிலேயே பதிகின்றேன் (தமிழ்மணத்தால் திரட்டப்படாவிடினும்). இப்பதிவே பின்னூட்டமாய் தொடுப்புடன் காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலும் வைக்கப்படும்.

முகமூடியின் கேள்வி பதிந்து 14 மணி நேரமாகிவிட்டது. இன்னும் 10 மணி நேரம் காசி & குழுவினர்க்கு அவகாசம் தருகின்றேன். எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும், அதற்கான காரணிகளையும் தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இன்றிரவு 19 Oct 05 10:30 EST (8:00 PM IST) வரை எனக்கு பதில் கிட்டாவிடில் (மின்னஞ்சல் முகவரி: podankho@yahoo.com) எனது அடுத்த நடவடிக்கை இருக்குமென்பதையும் அறியத்தருகின்றேன்.

நன்றி,
இணையகுசும்பன்.

புதன், 19.10.05, 12:11:23 M. Sundaramoorthy சொன்னது:

Kasi,
Take a look at this FAQ regarding moderation.

புதன், 19.10.05, 12:33:14 M. Sundaramoorthy சொன்னது:

Sorry, there was a typo previous comment. The link did not show
http://www.eyrie.org/~eagle/faqs/mod-pitfalls.html

புதன், 19.10.05, 12:36:09 தாணு சொன்னது:

காசி,
உங்கள் முடிவு சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருந்தாலும் அதை அமல் படுத்த எடுத்துக்கொண்ட விதம் கொஞ்சம் அவசர அடியாகத் தெரிகிறது. வழி தவறுபவர்களுக்கு நேர் பாதை வர ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு, தோல்வியாகும் பட்சத்தில் இரண்டாம் நிலையாக உங்கள் முடிவு இருந்திருக்கலாம்.
பதிவுகளை வரன் படுத்தலாம்-உங்கள் பாணி வரவேற்கத்தக்கதே!ஒருவரின் பதிவிற்கு வேறு ஒருவரின் பதிவில் வக்கிரமாக பின்னூட்டமிடுபவர்களைத்தான் முதலில் துரத்த வேண்டும்.
குழப்பம் வந்தால்தான் எழுத்து நாகரீகமும் வளரும் .

புதன், 19.10.05, 13:09:40 maasilan சொன்னது:

சென்ஸார் போர்ட் தலைவர் காசி அவர்களே
முதலில் உங்களின் பதிவில் வரும் பின்னூட்டங்களை சென்ஸார் செய்யவும் முயற்சிகலாமே.

இதிலேயே ஆபாச , எதிர்மறை பின்னூடங்கள் இருக்கின்றன. அது நீக்கவாது நீங்கள் முயலாம்.
அதை விட்டு...

புதன், 19.10.05, 13:24:38 karthikramas சொன்னது:

நிச்சயமாக தமிழ்மணத்தின் முன்னேற்றத்தின் பேரில்தான் இம்முடிவுகளை எடுத்திருப்பார் என்று படுகிறது. அப்படித்தான் முழுமையாக நான் நம்புகிறேன். ஆனால் சம்பந்தப்பட்ட அந்நாளைய பதிவை மட்டும் நீக்கியிருக்கலாம். மொத்தமாய் பதிவரின் பதிவையே நீக்குவது அவ்வளவு சரியாக படவில்லை. அல்லது ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கலாம்(தனியாகவேனும்).
பதிவை நீக்குவது தனது அதிகாரத்தை காண்பிப்பப்பதாக் மட்டுமே காட்சிஅளிக்கிறது அந்த வித்ததில் செய்யப்படாமால் ஒரு அவசர எதிர்வினையாய் உடனடியாக செய்யப்பட்டது என்று நான் நம்பினாலும்.

குசும்பர் , நட்பாக பேசாமல் நடவடிக்கை அது இது என்றெல்லாம் பேசாமல் சாதரணாமாக புரிந்து கொள்ள முயற்சிசெய்ய வேண்டும். சமீபத்தில் அவர் இட்ட , மதியின் பதிவாகிய சுரா மறைவு குறித்து ஜோக்கடிக்க எதுவும் இருப்பதாக எனக்குப்படவில்லை. குசும்பர் தன்னை கொஞ்சம் சுய விமர்சனம் செய்வது நலம். ஆனலும் அவரது எல்லாப் பதிவுகளையும் இது போல் சொல்ல மாட்டேன். என்னைக் கேலி செய்து எழுதினால் கூட. ஆனால் ஒருவரி மறைவுக்கு அனைவரும் தகவலுக்காக நன்றி சொல்லும்போது அது குறித்து நக்கலடிக்க வேண்டும் என்றால் ஒரு மிகவும் கீழ்த்தர புத்தியுள்ளவராக இருக்க வேண்டும் அல்லது வன்மம் ஏறிய இதயம் வேண்டும். குசும்பர் அப்படி இல்லாதிருப்பார் என்று நினைக்கிறேன்.

மதம் பற்றிய பதிவுகளை நீக்குவது சரியான முடிவாக தெரியவில்லை, வேண்டுமெனில் சர்ச்சைக்குரியது என்று தமிழ் மண நிர்வாகிகள் நினைத்தால் , (மதப் பதிவு) என்று பக்கத்திலே சிறிய அறிவுப்பு ஒன்றை பதிவரின் பெயர் அருகில் தரலாம்(எளிதானதாக இருந்தால்).

இந்த இடத்திலெயே தமிழ்மணத்துக்கும் , காசிக்கும், நிர்வாகிகளுக்கும் அவர்களது சேவைக்காக நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

புதன், 19.10.05, 14:50:43 karthikramas சொன்னது:

சுமூ, நீங்கள் கொடுத்த சுட்டியை படிக்கவில்லை(நேரமில்லை) அதனால் அது குறித்து எதுவும் நான் சொல்லவில்லை. தகவலுக்காக சொல்கிறேன்,

புதன், 19.10.05, 14:53:38 என்னெமோ போங்க சொன்னது:

காசிசாரே "என்னெமோ போங்க" பதிவ ஏன் தூக்கீட்டிங்க?
நான் இன்னாசார் தப்பு பண்ணினேன்? :-( :-( :-(

புதன், 19.10.05, 14:56:37 nambi_ca சொன்னது:

Kasi,
I appreciate your effort in bringing Tamil blog community together. But your censorship steps indicate that time has arrived for Tamil bolggers to move beyond Thamizhmanam.

Thanks again for your effort so for.

*cheers*
Nambi

புதன், 19.10.05, 16:16:59 PKSivakumar சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 20:50:12 PKSivakumar சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 20:50:58 S.Kichu சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 22:57:10 Dondu சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 23:36:20 PK Sivakumar சொன்னது:

நீக்கப்பட்டது

புதன், 19.10.05, 23:55:33 inomeno சொன்னது:

விருபமுள்ளவர்கள் மற்றும் விலக்கப்பட்டவர்கள் இங்கு ( தமிழ்ப்பதிவுகள்
) தங்களை இணைத்துக் கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி .

வியாழன், 20.10.05, 01:49:17

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it