சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்

சென்ற ஆண்டு செப்டம்பரில் தமிழ் வலைப்பதிவுகளின் நிலை பற்றியும், அறிவியலாளர், சமூகத்தோடு தொடர்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் கவிதைகள் எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததத்ற்கான ஒப்புகையோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் பெருமையடிப்பும் தமிழ்மணம் தளத்துக்கு விளம்பரவாசமும் தெரியலாம், ஆனாலும் உதவியாளரை விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. பிறந்தநாள் காணும் அப்துல் கலாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நண்பர்கள் அவரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்பது கண்டு இதை பொதுவில் சொல்லத்தோன்றியது. அவ்வளவுதான்.  (ஒரு நினைவூட்டு மடலும் அனுப்பினேன், அத்ற்கும் பதில் இல்லை. நான் அனுப்பிய முகவரி: presidentofindia@rb.nic.in

எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன்


Message is in Unicode(UTF-8) Tamil. English translation follows Tamil.
-------------------------------------------------
 அன்புள்ள மேதகு குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு,
 
தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த என் பெயர் காசி(லிங்கம்) ஆறுமுகம். பணிநிமித்தமாக அமெரிக்காவில் தற்போழுது வசிக்கிறேன். 200க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவாளர்கள் (bloggers) சமுதாயத்தின் ஒரு பிரதிநிதியாக இந்த மடலை எழுதுகிறேன்.
 
'வலைப்பதிவுகள்' என்று தமிழில் அழைக்கப்படும் வெப்லாக்ஸ் (Web logs, in short, BLOGS) இன்றைய இணையத் தொழில்நுட்பம் சாதித்துக்காட்டியிருக்கும் இன்னொரு கருத்துப் பரிமாற்றப் புரட்சி எனலாம். இன்றைக்கு 12 லட்சம் வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் இருப்பதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்திய மொழிகளில் கணிமை(Computing) இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் இந்தி உள்பட மற்ற இந்திய மொழிகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவையாகவே வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன.  தமிழில் வியக்கத்தக்க வகையில் சென்ற ஒரு வருட காலத்தில் சுமார் 200 வலைப்பதிவுகள் தோன்றி சமூகவியல், அறிவியல், இலக்கியம், அரசியல், வணிகம், விளையாட்டு, கணினியியல், மனையியல், பொழுதுபோக்கு என்ற பலவகைக் கருத்துக்களங்களில்  தினமும் 25 புது விஷயங்களாவது எழுதப்படுகின்றன. 
 
இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இத்தகைய வலைப்பதிவு முயற்சிகளை ஒருங்கிணைத்து ஒரு வலைவாசல்(web portal) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வலைப்பதிவுகளுடன் பட்டியலோடு, செய்தியோடை தொழில்நுட்பத்தின் உதவியால் (Newsfeed aggregation technology) இந்த வலைப்பதிவுகளில் புதிதாக என்ன எழுதப்பட்டுள்ளன என்ற விபரமும் திரட்டப்பட்டு, காணக்கிடைக்கிறது. அந்தத் தளத்தின் முகவரி: http://www.thamizmanam.com/
 
இன்றைக்கு பெரும் சிந்தனையாளர்கள், அரசியல், சமூக, அறிவியலார்கள் தங்கள் சிந்தனைகளை நேரடியாக எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வலைப்பதிவுகளை திறன்மிக்க கருவியாகப் பயன்படுத்திவருகிறார்கள். உதாரணமாக அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலின் இரு போட்டியாளர்களும் கீழ்க்கண்ட வலைப்பதிவுகள் மூலம் தங்கள் பிரசாரத்தை கையாளுகிறார்கள்:
ஜான் கெர்ரி:  http://blog.johnkerry.com/
ஜார்ஜ் புஷ்: http://www.georgewbush.com/blog/
 
இன்றைக்கு கணினித்தொழில்நுட்பத்தில் முன்னோடியான மைக்ரோசாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் வலைப்பதிவுகளை ஆதரித்து, அவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பேசியதன் சுட்டி: http://news.bbc.co.uk/2/hi/technology/3734981.stm
 
பாரம்பரியம் மிக்க இந்திய நாளிதழ் தி ஹிந்துவின் தலையங்கம்:  http://www.hindu.com/2004/08/10/stories/2004081000891000.htm
 
ஆங்கிலத்தோடு போட்டிபோடமுடியாத இந்திய மொழிகளில் கணிமை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. பயன்பாடு வளரவளரவே அவற்றில் மென்பொருட்கள், தர நிர்ணயங்கள், கருவிகள் ஆகியவை வளரமுடியும். பயன்பாட்டின் வளர்ச்சியை ஒரு அரசோ, தனிப்பட்ட சில நிறுவனங்களோ மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அது ஒரு பரவலான பன்முகப்பட்ட நிகழ்வாக இருக்கவேண்டும். இந்தக் குறையை நிவர்த்திக்க வலைப்பதிவுகள் ஒரு மிகமிக இன்றியமையாத சாதனம் என்றால் அது பொய்யில்லை.
 
தொழில்நுட்பம், சமூக வளர்ச்சி,  சுதந்திரம், இறையாண்மை ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட தங்களுக்கு இந்த முயற்சிகளை எடுத்துக்காட்டவே இந்த மடல். கட்டாயம் நீங்களும் ஒரு நாள் ஒரு வலைப்பதிவைத் துவக்கி உங்களை விடிவெள்ளியாகப் பார்க்கும் பலகோடி இளைஞர்களுடன் நேரடியான கருத்துப் பரிமாற்றம் செய்வீர்கள் என்று அசையாத நம்பிக்கை எனக்கு உண்டு. அத்தகைய தருணத்தில் தமிழிலும் ஒரு வலைப்பதிவைத் துவக்கி எங்களுடன் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டால் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேது!
 
இந்த முயற்சிகளில் ஈடுபடும் வலைப்பதிவாளர்களுக்கு தாங்கள் செய்தி ஏதும் அளித்தால் மிகவும் மகிழ்வோம்.
 
மிக்க அன்புடன்,
-காசி ஆறுமுகம்.
http://kasi.thamizmanam.com/
 
Present address:
 
xxxxxxx (removed)
Webster, NY 14580
USA
 
Permanent address:
xxxxxxx (removed) 
Coimbatore 641029.
 
-----------------------------------------------------------------------
 
English Translation:
 
-----------------------------------------------------------------------
 
Honourable dear Mr. President,
 
I am Kasilingam Arumugam, native of Coimbatore district of Tamilnadu, presently in USA on official duty, writing on behalf of the 200-strong Tamil Bloggers' community.
 
Weblogs, in short, Blogs, are revolutionizing the way knowledge and information is shared in the world wide web. It is estimated that there are some 1.2 million blogs in English today. As computing in Indian Languages is yet to gather momentum, there are only a handful of blogs written in any Indian language other than Tamil, including Hindi. It is an amazing fact that there are around 200 blogs in Tamil today, with some 25 posts everyday written on Social issues, Science and Technology, Literature, Politics, Business, Sports, Computing, Entertainment and whatnot.
 
Honourable dear Mr. President,
 
I am Kasilingam Arumugam, native of Coimbatore district of Tamilnadu, presently in USA on official duty, writing on behalf of the 200-strong Tamil Bloggers' community.
 
Weblogs, in short, Blogs, are revolutionizing the way knowledge and information is shared in the world wide web. It is estimated that there are some 1.2 million blogs in English today. As computing in Indian Languages is yet to gather momentum, there are only a handful of blogs written in any Indian language other than Tamil, including Hindi. It is an amazing fact that there are around 200 blogs in Tamil today, with some 25 posts everyday written on Social issues, Science and Technology, Literature, Politics, Business, Sports, Computing, Entertainment and whatnot.
 
Tamil blogs have evolved into a next level, through a new webportal that integrates these efforts. Here one can see the list of blogs and a brief preview of what has been written in these blogs till 15 minutes ago. All this is possible through the newsfeed aggregation technology. You may visit http://www.thamizmanam.com/ to have a glimpse of what happens in Tamil Blogosphere.
 
Influential people who can impact a change in the lifes of others like intellectuals and thinkers in the fields of Politics, Social and Technology use weblogs as a means of direct, simple and authentic means of communicating their ideas. For example, the two major contenders in the American Presidential election effectively use blogs in their campaign. Their blogs are here:
 
Here is what the pioneer of information technology, Mr. Bill Gates says on blogs:  http://news.bbc.co.uk/2/hi/technology/3734981.stm
Here is en editorial appeared recently in The Hindu newspaper: http://www.hindu.com/2004/08/10/stories/2004081000891000.htm
 
Struggling to compete against the mighty English, Indian lanaguage computing is at a very beginning stage. It can grow fast only when the usage spreads, and more and more content is available. Only then, required software, standards, tools and techniques can develop. A government or a few organizations alone cannot make this happen. Broader, multi-faceted effort is required to make this happen. Weblogs serve a very useful purpose in this context. 
 
As a person who is an enthusiastic strong believer of  the power of Technology, need for Social Upliftment, Freedom and soveriegnity, you would appreciate the role of weblogs. This letter is intended to highlight these efforts. I strongly believe that oneday you will ceratainly use weblogs as a means of communicating your ideas to the millions of youths who look forward to you as their hope for the future. I will be immensely happy if you could also share your ideas in Tamil, by having a Tamil blog.
soveriegnity, you would appreciate the role of weblogs. This letter is intended to highlight these efforts. I strongly believe that oneday you will ceratainly use weblogs as a means of communicating your ideas to the millions of youths who look forward to you as their hope for the future. I will be immensely happy if you could also share your ideas in Tamil, by having a Tamil blog.
 
May we, the Tamil bloggers, request you to share your ideas  on this new development, and where we should go from here?
 
Thank you very much for your valuable time.
 
sincerely,
-Kasi Arumugam
 
Present address:
 
xxxxxxx (removed)
Webster, NY 14580
USA
 
Permanent address:
 
xxxxxxx (removed)
Coimbatore 641029.
 
 
காசி - clock 23:01:26 - வெள்ளி, 14.10.05 - பொது - 3737x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

Nambi சொன்னது:

"பாரம்பரியம் மிக்க இந்திய நாளிதழ் தி ஹிந்துவின்"
What nonsense is this?

I have nothing to comment about the content.

Nambi

வெள்ளி, 14.10.05, 23:48:04 dharumi சொன்னது:

காசி,
"You are lucky to have a real 'online President'" என்று ஒரு அமெரிக்காகாரர் சொன்னதாக பத்திரிகை ஒன்றில் படித்ததாக நினைவு.
நானும் சில மாதங்களுக்கு முன்பு <a href ="http://dharumi.weblogs.us/2005/05/04/12...">ஒரு மெயில் அனுப்பினேன்</a>. No acknowledgement so far! ஒரு automated பதிலாவது அனுப்ப முடியுமே, எல்லா மெயில்களுக்குமே!

அதேபோல், என் மெயிலின் கருத்துக்கள் உடன்பாடாயிருந்தால் அந்த மெயிலையோ, அல்லது அதே பொருளிலோ மெயில்கள் அனுப்பும்படி நம் தமிழ்மண பதிவர்களைக் கேட்டிருந்தேன். சாரா என்பவர் அதே மெயிலை அனுப்பியிருந்தார். அவ்வளவே.

ஆயிரம் இருந்தாலும் இன்று நம் நாட்டு public figures-ல் நான் மிகவும் மதிக்கும் பெருந்தகை அவரே.

ref: http://dharumi.weblogs.us/2005/05/04/12...

சனி, 15.10.05, 01:07:09 Kasi சொன்னது:

நம்பி,

அரசியல் தவிர்த்த தி ஹிந்து தலையங்கங்கள் இன்றும் என் மரியாதைக்குரியனவையே. நூற்றாண்டு தாண்டிய ஹிந்துவை 'பாரம்பரியம் மிக்க' என்று குறிப்பிட்டதில் என்ன 'நான்சென்'சைக் கண்டீர்கள் என்று விளக்குவீரா?

தருமி,

அப்பாடா, நான் தனியனில்லை என்ற மகிழ்ச்சி! நன்றி. உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

சனி, 15.10.05, 01:20:57 அரவிந்தன் நீலகண்டன சொன்னது:

அன்புள்ள காசி,

பார்த்தேன். எனது அனுபவத்தை கூற விரும்புகிறேன். ஒரு முறை குடியரசுத்தலைவர் இணையதளத்தில் சந்திராயன் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தெரியும்படியாக ஒரு அறிவியல் வெகுஜனத்தொடர்பினை இஸ்ரோ கொடுக்கவேண்டும் என அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். சரியாக ஒரு மாதத்திற்குள் எனது வீட்டு முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. இஸ்ரோ சந்திராயன் தொடர்பாக பொதுமக்கள் அறிவதற்காகவும் மாணவர்கள் அறிவதற்காகவும் வெளியிட்டுள்ள அனைத்து பிரசுரங்களையும் அனுப்புமாறு குடியரசுத்தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்ற தகவலின்படி அவை எனக்கு அனுப்பப்படுவதாக ஒரு மூத்த இஸ்ரோ அதிகாரியின் கடிதத்துடன். அவற்றினை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு ஏற்பட்ட இனிமைக் குறைவான அனுபவம் ஏதாவது பிழையாக இருக்கலாம். குடியரசுத்தலைவரின் இணைய பக்கங்களிலிருந்தே அனுப்பி பாருங்கள். அங்கு நாம் அனுப்புவது நம்மைக்குறித்த அதிக தகவல்களுடன் செல்வதால் நமது குடியரசுத்தலைவர் நம்பகத்தன்மையுடன் எதிர்வினையாற்ற முடிவதாக இருக்கும் என நினைக்கிறேன்.

சனி, 15.10.05, 11:30:05 Padma Arvind சொன்னது:

காசி
முக்கிய தலைவர்களுக்கு பத்திரிக்கை தொடர்பு அதிகாரி போலவே மக்கள் தொடர்பு அதிகாரியும் அவரின் கீழ் பணியாற்றும் பல அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்களில் யாரேனும் முக்கியம் இல்லை என்று ஒத்தி வைத்திருக்கலாம்.
இங்கேயும்( அமெரிக்காவில்) குடியரசு தலைவருக்கு மக்கள் தொடர்பு கொண்டால் அவரின் அலுவகத்திலிருந்து உடனே பதில் எழுதுபவர்கள் இவர்கள் தான்.

சனி, 15.10.05, 12:03:51 பத்ரி சொன்னது:

நான் குடியரசுத் தலைவருக்கு எழுதிய மின்னஞ்சல்களுக்கும் பதில்கள் வந்ததில்லை. மஹாராஷ்டிரா சட்டம் ஒன்றுக்கு அவர் இன்னமும் கையெழுத்திடவில்லை, ஏன் என்று கேட்டு எழுதியிருந்தேன். பின் இரண்டு முறைகள் சில சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி கேட்டிருந்தேன்.

அவரது இணையத்தளம் மீது நம்பிக்கை போய்விட்டபடியால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

ஆனால் அவர் தான் கொடுக்கும் அத்தனை பேச்சுக்களையும் ஆவணப்படுத்தி வைத்திருப்பது உபயோகமானது. அவரது தளத்தைத் தொடர்ச்சியாகப் படிக்கிறேன்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் இதுவரை எழுதியுள்ள அஞ்சல்கள் பதில் எதையும் எனக்குப் பெற்றுத்தந்ததில்லை.

திங்கள், 17.10.05, 01:28:08 அன்பு சொன்னது:

அன்பு காசி,

இந்தப்பதிவை (ஏனோ) இன்றுதான் வாசித்தேன். அதிபரின் கவனத்துக்கு வலைப்பதிவை எடுத்துச்செல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஏனோ பத்மா கூறுவதுபோல்தான் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதிபர் நேரிடையாக மின்னஞ்சலை வாசித்து, பதில் எழுதுகிறாரா என்று சரியாகத்தெரியவில்லை. ஆனால், பலருக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அதிபர் தானே கைப்பட எழுதியனுப்பியிருப்பதை பத்திரிக்கை வாயிலாக படித்தே வருகிறேன். வேண்டுமென்றால் பிரதியெடுத்து தபாலிலும் அனுப்பிப்பார்க்கலாம்.பத்ரி எழுதியிருக்கும் விடயங்கள் பெரிய இடத்து மேட்டர்:) அதனால் பதில் அனுப்பாமல் இருந்திருந்திருக்கலாம். உங்களுடைய மின்னஞ்சல் கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் வாழ்த்துக்கடிதம் வந்திருக்கும்.

மற்றப்படி நேற்று ஒரு செய்தித்தாளில் GoogleEarthக்கு அவருடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாகப்படித்தேன்.

மற்றப்படி என்னுடைய அனுபவத்தில், இங்கு ஒரு அமைச்சரை மின்னஞ்சல் மூலமே தொடர்புகொண்டு வேண்டிய உதவியை மின்னஞ்சல் மூலமே ஏற்பாடு செய்து கொடுத்தார். இப்போதும் மின்னஞ்சல் அனுப்பினால் ஒரு மணி நேரத்துக்குள் பதில் கிடைக்கும்.

ஆனால், முன்னர் ஒருமுறை இந்தியசுகாதார அமைச்சருக்கு (திரு. அன்புமணி அவர்களுக்கு அல்ல...) மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன், பதிலேதும் இல்லை. அதனால் பெரும்பாலும் உதவியாளார்கள் இருப்பதால், அவர்களைச் சென்றடைவதில்லை என்பதே, என் கணிப்பு.

திங்கள், 17.10.05, 02:59:17 nambi_ca சொன்னது:

Kasi,
It is not necessarily to be great anything over 100 years old. Hope you agree with this.

I would really like to know how The Hindu reflected Tamilians views/interest as a mainstream news paper. We all know its stand on Ezham issue and how it chickened out when fellow editor was tortured as a terrorist.

May I know its role during defining moments of TamilNadu history over the past 100 years? To name a few:

- Stand on Justice party
- View on Rajagopalan’s cast based Education system
- E.Ve.Ramasamy’s self respect movement
- Hindi agitation

So I am not completely convinced about that adjective “parambariyam mikka’ The Hindu. May be it is appropriate to add another adjective to ‘parambaraiyam’, and then I have no issues at all.

Excuse me for drifting away from you main discussion.

*cheers*
Nambi

திங்கள், 17.10.05, 16:19:05 காசி சொன்னது:

அ. நீலகண்டன், உங்கள் அனுபவம் மகிழ்ச்சியளித்தது, ஆச்சரியப்படுத்தவில்லை. அவரைப்பற்றிய நம் எதிர்பார்ப்புகளுக்கேற்பவே இருந்தது. என் அனுபவமும் இங்கே பகிரப்பட்டுள்ள தருமி, பத்ரி போன்றோர் அனுபவமும் அப்படி இல்லை. உங்கள் ஆலோசனைக்கு நன்றி. ஆனால் இது அவ்வளவு துரத்திப் போய் அவரிடம் சொல்லியே ஆகவேண்டிய விதயம் இல்லை. எனவே அனுப்ப உத்தேசமில்லை. அடுத்தமுறை எதாவது அவருடன் தொடர்புகொள்ளவேண்டியிருந்தால் செய்கிறேன்.

பத்மா,
அவராலேயே எல்லா மடல்களையும் படிக்கமுடியும் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை. 100 கோடி மக்களின் பிரதிநிதிக்கு இது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி என்று பொதுவில் வைத்தபின், எவரை எங்கு நியமித்தால், என்ன அறிவுரைத்தால், வரும் மின்னஞ்சல்களைக் கையாள முடியுமோ, அதைச் செய்யவேண்டிய கடமை அவருக்கோ அல்லது அவரின் அலுவலகத்தை நிர்வகிப்பவருக்கோ வந்துவிடுகிறது. அதன்பேரில் வரும் விமர்சனத்துக்கும் அவர் ஆளாகிறார். அதில் எந்த விலக்கும் அளிக்கும் சாத்தியம் இல்லை. உங்கள் தகவலுக்கு நன்றி.

பத்ரி, அன்பு,
அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டத்ற்கு நன்றி.

நம்பி,
'உண்மை', 'என் கருத்து', 'பொதுவாக நடப்பிலிருக்கும் கருத்து', இவை மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இவற்றில் எந்த இடத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அதைப் பயன்படுத்துவதே சரியான அணுகுமுறையாக எனக்குப் படுகிறது. நன்றி.

திங்கள், 17.10.05, 20:27:08

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it