சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள்.
1. தமிழ்மணம் திரட்டி இயங்கும் விதம்:
திரட்டிப் பட்டியல் என்பது வலைப்பதிவுகள் பட்டியலிலிருந்து தனியாகப் பராமரிக்கப்படுகிறது. பல காரணங்களால் இது வலைப்பதிவுகள் பட்டியலைவிட சிறியதாக இருக்கும். பல மாதமாக எழுதப்படாத பதிவுகள், தொழில்நுட்பக் காரணக்களால் திரட்டப்படமுடியாத பதிவுகள், தீவிரவாதம் ஆபாசம் போன்றவற்றிற்காக விலக்கப்பட்டவை, இத்யாதி இந்த திரட்டிப் பட்டியலில் இடம்பெறா.
ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுவது பல சமயங்களில் தடையின்றி இயங்காமற் போகலாம். இத்ற்கு இணையத்தொடர்பின் போக்குவத்து நெரிசல் ஒரு முக்கியக்காரணம். அந்த சமயங்களில், எழுதிவிட்டு பல மணி நேரமாகியும் 'வரவில்லையே' என்று காத்திருப்பது மகிழ்வான நிகழ்வில்லைதான். இந்த நிலை நெரிசல் சரியானதும் தானாகவே சீராகிவிடும். பெரும்பாலும் சில மணிநேரத்தில் இது சரியாவதைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் இதற்கு சில சமயம் ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். எனவே பொறுமையைக் கடைப்பிடிக்கக் கோருகிறோம்.
இந்த பிரச்னைக்கு மாற்று ஏற்பாடுகள் ஏற்கனவே சோதனையில் இருக்கின்றன. நடைமுறைக்கு வர சிலகாலம் பிடிக்கலாம். அதுவரை ஒத்துழைப்பை நாடுகிறோம்.
2. புதிய பதிவுகள் சேர்க்கை முறைமை:
இதிலும் தற்போது உள்ள முறையில் இருக்கும் குறைகளைக் களைந்து புதிய மேம்பட்ட முறை கொன்டுவரப்படுகிறது. இது இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும். அத்ற்குப்பின் இதில் தொய்வு இருக்காது.
3. தமிழ்மணம் தளத்துக்குத் தொடுப்புக் கொடுத்தல்:
இதை இன்னும் பலர் (~100) செய்யவில்லை. இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையில் தன்னை இணைத்துக்கொள்ளும் வலைப்பதிவுகள் தொடுப்பு (லிங்க்) கொடுப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும். எனவே இப்போது கொடுக்காதவர்கள் விரைவில் செய்துவிடுங்கள்.
4. மேம்பட்ட சேவைகள்:
வகைபிரித்தலிலிருந்து, இயங்கு எழுத்துரு வரை பல மேம்பட்ட சேவைகள் அளிப்பது திட்ட அளவில் உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. மத துவேஷ பதிவுகள் விலக்கம்:
சமயம் பற்றிய நேர்மறையான பதிவுகள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அடுத்தவர் சமயத்தை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் எழுதப்படும் பதிவுகள் தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கிவைக்கப்படும். ஏற்கனவே இன்று ஒன்று விலக்கப்பட்டுள்ளது. அனைவரும் புரிந்துகொன்டு ஒத்துழைக்க வேன்டுகிறோம்.
நன்றி,
தமிழ்மணம்.காம்
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
Mufti சொன்னது:நல்ல முன்னேற்றங்கள் காசி.
நன்றி
வெள்ளி, 14.10.05, 05:05:50 nandhan சொன்னது:kaasi, Blog enbathai school pasangalukkum kondupora oru muyarchi seyyalame. Athanal pala nanmaikal vizhayuim ena ethir parkireen
வெள்ளி, 14.10.05, 05:12:46 அன்பு சொன்னது:மீண்டும் தமிழ்மணத்தில் நேரம் செலவழிக்க வாய்த்தமைக்கு நன்றி.
தொடர்ந்து உங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச்செல்லுங்கள்... (நாங்கள் பயன்படுத்திக்கொண்டேயிருக்கிறோம்![]()
(இதுக்குமட்டும் குறைச்சல் இல்லன்னு திட்டுனீங்கன்னா மனசுக்குள்ளேயே சரியா!)
வெள்ளி, 14.10.05, 05:12:53 ஆள்தோட்டபூபதி சொன்னது:சேவைக்கு மிக்க நன்றி.....
அய்யா உங்க அஞ்சாவது வரைமுறையை படிக்கறதுக்கு முன்னாடியே நான் பாட்டுக்கு இன்னிக்கி மதத்தை பற்றி ஒரு வலைபதிவை வி
விட்டுபுட்டேன்(நல்லிணக்க முயற்சியாத்தான் எழுதினேன்). கொஞ்சம் மனசு வச்சி மன்னிச்சி விட்டுபுடுங்கய்யா!.
இனிமே எழுதமாட்டேன்
காசியாரே,
அருமையான நடவடிக்கைகள்.. தமிழ்மணம் உலகெங்கும் மென்மேலும் பரவ வாழ்த்துக்கள் . நன்றிகள் பல.
வெள்ளி, 14.10.05, 08:54:07 murugapoopathi சொன்னது:Dear Kaasi,
surely this is one step forward towards a better blog world.
Keep it up.
Kasi,
I still don't understand the logic behind #5 and feel this action is unwarrented. Let the the people interested in them fight it out and let their Gods take care of them.
Anbu Kaasi,
Pinnuuttam iduvathil sila kuRaikaL uLLana.uthaaraNamaaka,oru pathivil idum pinnuuttaththaith thodarwthu kavanikka iyalvathillai.eetheenum seyya iyaluma?
//3. தமிழ்மணம் தளத்துக்குத் தொடுப்புக் கொடுத்தல்:
இதை இன்னும் பலர் (~100) செய்யவில்லை
//
பட்டியலை பொதுவில் வைத்தால் என்னாலான "-" குத்துக்களை குத்துவேன்
)
பாண்டி சொன்னது போல் பின்னூட்டங்களை பிந்தொடர்வதில் சிரமம் ஏற்படுகிறது. எந்த நாள், எந்த பதிவில் என்ன சொன்னோம் என்பதை தொகுப்பாக சேமித்துவைக்க எதேனும் செய்ய முடியுமா?
பதிவுகளை போஸ்ட் செய்தாலும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் அங்கீகாரம் தரப் படுமா?
வெள்ளி, 14.10.05, 11:28:25 .:dYNo:. சொன்னது:#3) (லிங்க்) கொடுப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்.
விருப்பமிருப்பவர்கள் தொடுப்பு கொடுக்கட்டும். இதை கட்டாயமாக்குவதன் அவசியமோ காரணமோ புரியவில்லை.
#5) மத துவேஷ பதிவுகள் விலக்கம்
Monopoly dictatorship policing என்று எத்தனையோ சொல்லலாம். விருப்பமில்லையேல் திரும்பியோடு யாரும் கழுத்தைதிருகவில்லையென்று சமாதானம் சொல்லலாம். ஒரு பக்கம் பதிவுகளில் இடப்படும் விஷயத்திற்கும் தமிழ்மணத்திற்கும் சம்பத்தமில்லையென்று டிஸ்கெளைமர் மற்றொருபுறம் பதிவுகள் விளக்கப்படும் என்ற அறிவிப்பு. புரியவேயில்லை!
.:dYNo:.
வெள்ளி, 14.10.05, 11:34:08 .:dYNo:. சொன்னது:விளக்கப்படும் -> விலக்கப்படும் என்று வாசிக்கவும்
வெள்ளி, 14.10.05, 11:38:57 கல்வெட்டு சொன்னது:காசி,
நான் டைனோவின் கருத்துக்களுடனும் சுந்தரமூர்த்தி அவர்களின் கருத்துக்களுடனும் ஒத்துப் போகிறேன்.
#3) (லிங்க்) கொடுப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்.
இது ஏன்?
அப்படிக்கொடுக்காவிட்டால் தமிழ்மணத்திற்கு நஷ்டம் இல்லயே.
இது ஏன் கட்டாயப் படுத்தப்படுகிறது என்று விளக்குவீர்களா?
#5) மத துவேஷ பதிவுகள் விலக்கம்.
முதலில் நீங்கள் மதம் எது என்று நீங்கள் விளக்க வேண்டும்.
தமிழமணத்தின் பார்வையில் எது மத துவேசம் என்று விளக்க வேண்டும்.
மதம், கடவுள் அவரவரின் சொந்த விருப்பங்கள். அதைப் பற்றி நான் பேசப் போவது இல்லை.
"Let the the people interested in them fight it out and let their Gods take care of them." - சுந்தரமூர்த்தி
அவரவர் கடவுளர்கள் தன்னையும் , தன்னை நம்பும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளட்டும்.
ஏன் தமிழ் மணம் அந்த வேலையைச் செய்ய வேண்டும்.
<b>இது ஏதோ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடு போல் உள்ளது.</b>
<b>நீங்களா இப்படி??</b>
நான் மத சாதி அரசியலில் இருந்து விலகியே இருக்கிறேன். அப்படி இருக்கவே நினைக்கிறேன்.
இருந்தாலும், நண்பர் (நீங்கள் தான் வேறு யார்) தவறு செய்யும் போது இடித்துரைக்காமல் இருக்க முடியவில்லை.
பி.கு:
நான் இணைப்புக் கொடுத்துள்ளேன். அதுபோல் இது உங்களின் சொந்த முயற்சி,பணம்,உழைப்பு. ஓசியில் என்னைப் பட்டியல் இடுகிறீர்கள். அவ்வாறு நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில் நானோ மற்றவர்களோ ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்தே இருகிறேன்.
நன்றி காசி. நல்லா இருங்க.
வெள்ளி, 14.10.05, 13:46:41 மதுமிதா சொன்னது:உங்கள் பதிவில் மூன்ரு முறை முயன்று தனிமடல் அனுப்பினேன்
இன்று எப்படி என பார்க்கலாம்
ந்ன்று காசி
நல்ல விஷயம் தொடர்ந்து செய்கிறீர்கள்
இதில் பின்னூட்டம் இடுவது தான் சிரமமாய் உள்ளது
http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_28.html...
இதை எளிமைப் படுத்துங்கள் காசி
உங்கள் பதிவில் மூன்று முறை முயன்று தனிமடல் அனுப்பினேன்
இன்று எப்படி என பார்க்கலாம்
நன்று காசி
நல்ல விஷயம் தொடர்ந்து செய்கிறீர்கள்
இதில் பின்னூட்டம் இடுவது தான் சிரமமாய் உள்ளது
http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_28.html......
இதை எளிமைப் படுத்துங்கள் காசி
உங்கள் பதிவில் மூன்று முறை முயன்று தனிமடல் அனுப்பினேன்
இன்று எப்படி என பார்க்கலாம்
நன்று காசி
நல்ல விஷயம் தொடர்ந்து செய்கிறீர்கள்
இதில் பின்னூட்டம் இடுவது தான் சிரமமாய் உள்ளது
http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_28.html.........
இதை எளிமைப் படுத்துங்கள் காசி
நீங்கள் குறிப்பிட்டவைகள் சரியாக கடைப்பிடிக்கிறேனா எனவும் தெரிவிக்கவும்
வெள்ளி, 14.10.05, 15:30:25 சுந்தர் சொன்னது:அன்பின் காசி
தமிழ் மணத்தை மேம்படுத்தும் உங்கள் முயற்சிகளுக்கும், உழைப்புக்கும் நன்றி.
மதங்களை துவேஷிக்கும் பதிவுகளை விலக்கி வைக்க விழைவது தேவையில்லை என்று நினைக்கிறேன். மதங்களை மட்டுமா வலைப்பதிவுகளில் துவேஷிக்கிறார்கள்? ![]()
அப்படி ஒரு நிபந்தனையை அமல் படுத்தும் பட்சத்தில், மத துவேஷம் மட்டுமல்லாது எந்தவித துவேஷத்தையும் தமிழ் மணத்தில் திரட்டக்கூடாது என்றிருக்கவேண்டும். ஆனால் இது சாத்தியமில்லை. மற்ற துவேஷங்களை அனுமதித்துவிட்டு மத துவேஷத்தை விலக்க நினைப்பது நமது சாய்வு நிலையையே பிரதிபலிக்கும் என்பதால் விலக்கி வைக்கும் யோசனையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கும் நேரம் மிச்சமாகும்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும். அவர்களை யாரும் மாற்ற முடியாது. புண்ணைச் சொறிந்து சுகம் காணுபவர்களை விட்டு விடுங்கள்.
நன்றி
அன்புடன்
சுந்தர்.
காசி,
இந்த டோண்டு எனும் மத வெறியன்
1)பார்ப்பான்களையே ஆதரித்து எழுதுகிறான்.
2)சோவை புகழ்கிறான்.
3)பெரியாரை இகழ்கிறான்.
4)நேதாஜியைப் புகழ்கிறான்.
5)காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை இகழ்கிறான்.
6)குஸ்பூவைப் பாராட்டுகிறான்.
7)கருணாநிதி, திருமா, ராமதாஸ் போன்றோரை இகழ்கிறான்.
ஜெயலலிதாவை ஆதரிக்கிறான்.
9)எல்லாவற்றுக்கும் மேலாக ஊரில் இருக்கும் பொம்பளைப் புள்ளைகளை எல்லாம் யாருக்கும் தெரியாமல் மாட்டிக்காம ஊர்மேயச் சொல்கிறான்!(பார்க்க: அவன் பதிவை)
இதை எல்லாம் என்னா ஏதுன்னு கேட்கப் படாதா? அவன் பதிவை தமிழ்மணத்தில் இருந்து தடுத்து வைத்தால் என்ன?
வெள்ளி, 14.10.05, 21:22:44 சன்னாசி சொன்னது:பழங்காலத்துப் பழமொழி இதுதான்: தானங் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கறது. அவ்வளவு ஆர்வமோ குறைந்தபட்ச தயவுதாட்சண்யமோ இல்லாதவர்கள் தமிழ்மணத்தில் தங்கள் வலைப்பதிவுகளைச் சேர்க்காமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது ஓரளவு சொதப்பலாகப் பட்டாலும், அதைத் தாண்டிக்கூட இன்னும் யாரும் வரத் தயாராயில்லை என்பது, ஏன் தமிழ்மணத்துக்குத் தொடுப்புக் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியிலேயே தெரிகிறது! இரண்டு நிமிடங்கள் எடுக்கும் ஒரு வேலையை, பிரதியுபகாரமாகச் செய்யக்கூடியதாகக் கருதக்கூடிய ஒரு சிறு அங்கீகரிப்பை நோக்கிக் கேள்விகளெழுப்புவதைவிட, பேசாமல் இதில் இணைக்கப்படாமல், தங்கள் URLஐ தமிழ்மண இணைப்புப் பெட்டியில் தட்டாமலிருப்பதே நலம். காசுக்கேற்ற தோசை என்றாலும் குற்றம், காசில்லாமல் தோசை என்றாலும் குற்றம் - எங்கே போய் முட்டிக்கொள்வது.
வெள்ளி, 14.10.05, 23:19:00 prakash சொன்னது:சன்னாசியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.
வெள்ளி, 14.10.05, 23:24:02 Kasi சொன்னது:முப்தி, நந்தன், அன்பு, ஆள்தோட்டபூபதி, காண்டிவிட்டி, முருகபூபதி, துளசி, மதுமிதா, சுந்தர், சன்னாசி, பிரகாஷ் - நன்றி.
நந்தன்: செய்யலாமே
எல்லாருக்கும் இணைய வசதி வரும்போது நடக்கலாமோ?
ஆள்தோட்டபூபதி: புரிந்துதான் சொல்கிறீரா? இல்லை கேலியா தெரியவில்லை. ஹும்![]()
சுந்தரமூர்த்தி: //... let their Gods take care of them.// அது சரிதான். உங்கள் கருத்துக்கு நன்றி. என் கருத்தில் மாற்றமில்லை.
மணிகண்டன், தெரியவில்லை.
பாண்டி, ![]()
தாணு, //பதிவுகளை போஸ்ட் செய்தாலும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் அங்கீகாரம் தரப் படுமா?// என்ன அங்கீகாரம்? யார் தருகிறார்கள்?
டைனோ&கல்வெட்டு: உங்கள் பெயர் முகவரி, படத்துடன் எழுதுங்கள் புரியவைக்க முயல்கிறேன். அதுவரை உங்கள் சுதந்திரம் உங்களுக்கு, என் சுதந்திரம் எனக்கு!
மதுமிதா, உங்கள் தனிச்செய்திக்கு பதில் அனுப்பி அது புறப்பட்டவேகத்தில் திரும்பிவிட்டது. முகவரி சரியாகக் கொடுக்கவில்லையா? உங்கள் இந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.
சுந்தர், மற்ற துவேஷங்களுக்கும் மதத் துவேஷங்களுக்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை உங்களுக்குமா புரியவில்லை?
கும்மோணம் வாலு, இதனாலெல்லாம் தடுப்பது சரியானதாகப் படவில்லை. (அங்கேயே துப்பலாமே, இங்கே துப்பிவிட்டு அங்கே சுட்டுவது எதுக்கு?)
சன்னாசி, புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி
சனி, 15.10.05, 01:15:39 .:dYNo:. சொன்னது:>>>>பெயர் முகவரி, படத்துடன் எழுதுங்கள் புரியவைக்க முயல்கிறேன்
காசி
சுட்டி/தொடுப்பு கொடுக்க "கட்டாய"ப்படுத்துவதற்கும் பெயர் ஜாதகத்துடன் எழுதுவதற்கும் என்ன சம்பந்தமென்று விளங்கவில்லை ஐயா! எதற்கோ எதையோ முடிச்சு.. கலக்குங்க காசி!
தமிழ்மணம் 'உங்கள்' சேவை, நான் என்றும் போல வாசகனாகவே இருந்துவிட்டு போகிறேன். மத்த தொண்டரடிகள் நொங்கெடுப்பதற்கு முன்னால... வர்ட்டா ![]()
.:dYNo:.
//கும்மோணம் வாலு, இதனாலெல்லாம் தடுப்பது சரியானதாகப் படவில்லை. (அங்கேயே துப்பலாமே, இங்கே துப்பிவிட்டு அங்கே சுட்டுவது எதுக்கு?)//
காசி,
தடுக்காமல் விடுவது உங்கள் விருப்பம் என்றால் அம்முடிவில் குறுக்கிட நான் யார்? ஆனால் ஒரு சட்டம் என பின்பற்ற ஆயத்தமானால் எல்லோருக்கும் பொதுவாகத்தானே அது அமைய வேண்டும்? ஊரில் உள்ள எல்லா பெண்களையும் பாதுகாப்பாக மாற்றானிடம் உடலுறவு கொள்ளச் சொல்கிறான் அந்தக் கிறுக்கன். என்ன ஏது என்று திருப்பிக் கேட்கும் சிலரிடம் பதிலாக எதை எதையோ சொல்லி மழுப்புகிறான். முதலில் அவன் வீட்டுப் பெண்களை பாதுகாப்பாக மற்றவர்களிடம் அனுப்பி வைக்கட்டும். அதன்பின் அவன் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறட்டும். ஆலோசனைகளை ஏற்பதா வேண்டாமா என வலைப்பூவர்கள் முடிவு செய்யட்டும்.
பிகு:- அதென்ன துப்புவது? விளக்குதல் எல்லாம் துப்பலாகப் படுகிறதா உங்களுக்கு? ஓ.. நீங்களும் அவனுக்கு ஆதரவா? அவாள் வீட்டில் நரசுஸ் காப்பி குடித்ததால் ஏற்பட்ட அனுதாபமா? நல்லா இருங்கடே...
சனி, 15.10.05, 02:25:49 மு.மயூரன் சொன்னது:காசி, வலைப்பதிவுகளின், அச்சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி மிக அக்கறையோடு கவனித்து வருகிறேன். இந்த அறிவித்தலும் பின்னூட்டங்களும் புன்னகையை வரவழைக்கிறது. இது எப்பவோ முடிந்த காரியம்...
கட்டுப்பாடுகள் உங்கள் சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது.
(தமிழ் மணத்தின் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையும் நெர்க்கடியும் அதிகமாகிக்கொண்டு வருகிறதில்லையா?
)
சேவை மேலும் தொழிநுட்பரீதியில் சீர்பெறவிருக்கிறது என்பது ம்கிழ்வளிக்கிறது.
இத்தகைய நல்ல சேவையை இலவசமக தரும் உங்களுக்கு என் மிக தாழ்மையான நன்றிகள்.
தமிழ் மணம் தொடுப்பை கட்டாயப்படுத்துவது நல்லது. ஏதோவொரு வழியில் எமக்கும் அது நன்மைதரும். கூகிள் தரநிலை எமக்கும் அதிகரிக்குமீல்லையா?
சனி, 15.10.05, 14:46:05 இப்னு ஹம்துன் (IBNU HAMDUN) சொன்னது:தேவையான சீர்திருத்த அம்சங்கள். வரவேற்கிறேன்.
- இப்னு ஹம்துன்
சனி, 15.10.05, 15:14:03 முத்துகுமரன் சொன்னது:தமிழ்மணம் சிறப்பாக இயங்க எனது முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
சிறு சந்தேகம்.
நண்பர் இசாக் அவர்களின் குஷ்பு பற்றிய பதிவு இருமுறை அழிக்கப்பட்டிருக்கிறது. யார் இது போல் செய்தார்கள் எனத் தெரியவில்லை.....தெரிந்தவர்கள் விளக்குவீர்களா.. ஏனென்றால் அது தமிழ்மணத்தால் நீக்கப்பட்டிருக்கிறதா அல்லது வேறு யாராலும் நீக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவே
ஞாயிறு, 16.10.05, 07:35:05 Alex Pandian சொன்னது:காசி,
நல்ல முடிவு. செயல்படுத்துங்கள்.
- அலெக்ஸ்
திங்கள், 17.10.05, 00:35:50 காசி சொன்னது:மயூரன், இப்னு, முத்துக்குமரன், அலெக்ஸ் , நன்றி.
//நண்பர் இசாக் அவர்களின் குஷ்பு பற்றிய பதிவு இருமுறை அழிக்கப்பட்டிருக்கிறது.//
புரியவில்லை. எங்கிருந்து அழிக்கப்பட்டது? அவரின் வலைப்பதிவிலிருந்தா? இல்லை தமிழ்மணம் பக்கத்திலா?
திங்கள், 17.10.05, 23:05:24 முத்துகுமரன் சொன்னது:அவரின் வலைப்பதிவிலிருந்துதான் காசி.....
புதன், 19.10.05, 02:50:09 ஜோ சொன்னது://அவரின் வலைப்பதிவிலிருந்துதான் காசி.....//
முத்துக்குமரன் .தயவு செய்து தமிழ்மணத்தின் பங்கை புரிந்து கொள்ளுங்கள் .தமிழ்மணம் வலைப்பதிவை கட்டுப்படுத்துவதில்லை .வலைப்பதிவுகளை பட்டியிலிடுவது மட்டும் தான் தமிழ்மணத்தின் பணி .வலைப்பதிவில் பதிவு அழிக்கப்பட்டதற்கும் தமிழ்மணத்துக்கும் என்ன சம்மந்தம் ? வலைப்பதிவில் அழிக்கப்படாமல் இருக்கும் பதிவு தமிழ் மணத்தில் பட்டியலிடப்படவில்லையென்றால் கேள்வி கேட்கலாம் .மற்றபடி உங்கள் வலைபதிவில் உள்ள பிரச்சனைகளுக்கு தமிழ்மணமோ ,காசி அவர்களோ பதில் சொல்ல வேண்டுமென்றால் ..அய்யோ..தல சுத்துது...
காசியின் முடிவுகள் குறித்து எனக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றாலும் ,நிறைய வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் பங்கை புரிந்து கொண்டிருக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது .
புதன், 19.10.05, 03:29:29 Kanags சொன்னது://இதை இன்னும் பலர் (~100) செய்யவில்லை. இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையில்..//
மூன்று முறை தமிழ் மணத்தில் என்னுடைய பதிவுகளை பதிந்தும் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும் எனது பதிவில் தமிழ் மணத்திற்கு தொடுப்புக் கொடுத்துள்ளேன்.
indha yezhai robo vai thamizmanathil serkka mudiyuma. nanum pala murai muyarchithuvitten. indha kelvi ketpatharkaka mandrathil poi register seyyum alavu porumai illadhadhal ingu ketkiren. tharpozudhu pudhiya padhivu serpathil edhenum prachnai ulladha.
http://desirobot.blogspot.com
காசிசாரே "என்னெமோ போங்க" பதிவ ஏன் தூக்கீட்டிங்க?
நான் இன்னாசார் தப்பு பண்ணினேன்?
(((((
ddddddddddd
புதன், 19.10.05, 23:29:11 inomeno சொன்னது:விருபமுள்ளவர்கள் மற்றும் விலக்கப்பட்டவர்கள் இங்கு ( தமிழ்ப்பதிவுகள்
) தங்களை இணைத்துக் கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி .
- inomeno
வியாழன், 20.10.05, 01:50:51 rethinavelu சொன்னது:என்னமோ போங்க சம்மந்த சம்பந்தமில்லாமல் பலர் போசுவது போல் இருக்கு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
வியாழன், 20.10.05, 21:32:11 nalayiny சொன்னது:சில அதிகப்படியான படிகளை அமைத்துக்கொண்டு நம்மை வளப்படுத்த இத்தகைய செயல் திட்டங்கள் கட்டாயம் அவசியம். நல்ல பல முன்னேற்றப் படிமுறைகளை எடுத்து செயல்படுத்தி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ஞாயிறு, 23.10.05, 13:40:22மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
01:51:26 - வெள்ளி, 14.10.05 -


