சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
கோவை வலைப்பதிவர்/இணைய நண்பர் சந்திப்பு
அழைப்பை ஏற்று வந்து கலந்துகொண்ட வலைப்பதிவர்கள் (பாலாக்கள், பிரகாஷ், ராஜா) நான்கு பேருக்கும், வலைப்பதிவரல்லாத சிவகுமார் (தமிழ்பயணி.காம் இணையதளம் நடத்துபவர்) மற்றும் என் நெடுநாள் நண்பர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரனுக்கும் நன்றி. முக்கியமாக நாமக்கல்லிலிருந்து இதற்கென (4 மணிநேரம் ஒருவழி) பயணித்துவந்த ராஜாவின் ஆர்வம் பாராட்டத்தக்கது.
அனைவரும் இன்றையதேதியில் தீவிர வலைப்பதிவரல்லாததாலோ, முதன்முறையாக சந்திப்பதாலோ 7 மணிக்கு தொடங்கிய சந்திப்பில் 9 மணிவரை தமிழ் இணையம்/வலைப்பதிவு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. பொதுவான விதயங்களும் அறிமுகமுமாகவே பொழுது கழிந்தது. சிவகுமார் விடுப்புப் பெற்று சென்றும் விட்டார். பிறகே தமிழ் இணையம் பற்றிப் பேச்சு திரும்பியது. அதில் முக்கியமாக ஒரு விதயம் நெடுநேரம் விவாதிக்கப்பட்டது. அதாவது தமிழ் குறியேற்றம், யுனிகோடு, தரநிர்ணயம் சம்பந்தமாக தமிழக அரசின் முனைப்பை தூண்டும் விதமாக நேரமும், ஆர்வமும், அறிவும் உள்ள தமிழிணையப் பயனாளர்கள் தன்னார்வப் பணியாக எடுக்கவேண்டிய சில கூட்டுமுயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முயற்சிகளை பொதுவில் 'சொல்வதைவிட' 'செய்வதில்' உள்ள முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. முயற்சிகள் நடப்புக்கு வரும்பொது மேலும் விளக்கமான தகவல்கள் வெளியாகலாம்.
இரவு 12 மணியளவில் பாலமுருகன் விடைபெற்றும், மீண்டும் மீண்டும் காப்பியை உறிஞ்சியபடி மீதி ஐவரும் 1:30 வரை பேசினோம். பேசியவரை நிறைவாகவும், இன்னும் பலதையும் பேச நேரம் போதவில்லையே என்ற ஏக்கத்துடனும் சந்திப்பு நிறைவுபெற்றது. ராஜாவும் பிரகாஷும் இன்னும் விளக்கமாகப் பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
படங்கள்:
சுபாஷ் சந்திரன், 'சோடாபாட்டில்' பாலா, 'கலெக்டர்' பாலா
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search கோவை வலைப்பதிவர்இணைய நண்பர் சந்திப்பு
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
பாலாஜி சுப்ரா சொன்னது:
நன்றி ![]()
சில முகங்களை தெரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி காசி.
ஆமா, சாப்பாட்டு விவரம் ஒண்ணும் சொல்லலே(-:
என்றும் அன்புடன்,
துளசி
//மீண்டும் மீண்டும் காப்பியை உறிஞ்சியபடி // ஆறுதலுக்காக சொல்றீங்க அப்படித்தானே?
திங்கள், 03.10.05, 00:18:43 suratha சொன்னது://தமிழக அரசின் முனைப்பை தூண்டும் விதமாக //
//முயற்சிகளை பொதுவில் 'சொல்வதைவிட' 'செய்வதில்' உள்ள முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. முயற்சிகள் நடப்புக்கு வரும்பொது மேலும் விளக்கமான தகவல்கள் வெளியாகலாம்.//
காத்திருக்கிறோம்.
திங்கள், 03.10.05, 00:57:25 gnaniyar சொன்னது:எப்படி சந்தித்துக்கொள்கிறீர்கள்..? எப்பொழுது சந்தித்துக்கொள்வதாக விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று சொல்லவேயில்லையே நண்பா..?
சந்திக்கும்பொழுது எல்லா வலைப்பதிவினருக்கும் மின்னஞ்சலில் செய்தியை பரப்பிவிட்டால் சந்திப்பதற்கு வசதியாக இருக்கும். அடுத்தமுறை அங்ஙனம் செய்வீர்களா..?
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
திங்கள், 03.10.05, 04:12:20 raj சொன்னது:Nice post!I just want to clear up all the rumours you might have heard.Dear colleagues, a friend of mine here in California is setting up a company that is a mixture between eBAY and Friendster called DOMEAFAVORBUDDY.COM As part of a giveaway promotion they are giving away an Ipod Nano and other Mp3 players. FREE. Spread the word. The company offer is designed that the more people that sign up, the more free prizes they give away. You can register at http://www.domeafavorbuddy.com...
Thanks your humble geek friend
பாபா, ![]()
துளசி, சாப்பாடு ஓண்ணும் பெரிசா இல்லை. சாதாரணம்தான். படம் எடுத்து வைக்கலையே.
ராம்கி //மீண்டும் மீண்டும் காப்பியை உறிஞ்சியபடி // ஆறுதலுக்காக சொல்றீங்க அப்படித்தானே?
ஒண்ணும் புரியலையே!
சுரதா, விரைவில் எழுதுகிறோம்.
ஞானியார், மின்னஞ்சல் அனுப்புவது சாத்தியமில்லை. யாருடைய மின்னஞ்சலும் இங்கே இல்லை. அது சரியான அணுகுமுறையும் இல்லை. இந்த சந்திப்பு குறுகிய அவகாசத்தில் நடந்தது. நீங்கள் கோவையிலா இருக்கிறீர்கள்?
திங்கள், 03.10.05, 12:02:52 சு. க்ருபா ஷங்கர் சொன்னது:அனைவரும் இன்றையதேதியில் தீவிர வலைப்பதிவரல்லாததாலோ, முதன்முறையாக சந்திப்பதாலோ 7 மணிக்கு தொடங்கிய சந்திப்பில் 9 மணிவரை தமிழ் இணையம்/வலைப்பதிவு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. பொதுவான விதயங்களும் அறிமுகமுமாகவே பொழுது கழிந்தது.
கேக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
வலைப்பதிவுகளப்பத்தி பேசறதுக்கு இனிமே என்ன இருக்கு? அதான் ஊர்கூடி தேர் இழுத்து கடைசில பாழுங்கணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே. ![]()
அதான் ஊர்கூடி தேர் இழுத்து கடைசில பாழுங்கணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே.
க்ருபா என்ன ஆச்சு? யாரை யார் புடிச்சுத் தள்ளினாங்க?
செவ்வாய், 04.10.05, 01:25:08 (station bench)ramki சொன்னது:Veru thiravam ethuvum illai enru engaLukku uRuthi seythal?
செவ்வாய், 04.10.05, 03:49:52 ராம்கி சொன்னது://அன்றிரவு கோவையிலே 'நம்ம நண்பருடன்' முன்னிரவு வரை ' தாக சாந்தி'.... // இது பிரகாஷின் பதிவு. நீங்கள் காபி என்கிறீர்கள்..அதுதான் எங்கள் அனைவ்ருக்கும் ஆறுதல் சொல்லத்தான் அப்படி சொல்கிறீர்களோ என்று கேட்டேன்.
செவ்வாய், 04.10.05, 12:24:13 Kasi சொன்னது:ராம்கி ![]()
இப்ப புரிஞ்சுது உங்க சந்தேகம். 'அன்றிரவு' அதே இரவாக இருக்கவேண்டிய அவசியமில்லைதானே. ('நம்ம நண்பர்'கூட அவராகவே இருக்கவேண்டியதில்லை
)
"பாழி"ன்னா விவசாய நகரம்னு பொருள். பாழும்ங்கணம்னா, விவசாயத்தை நினைவு கூறும் கணங்கள்னு அர்த்தம். ![]()
//அதான் ஊர்கூடி தேர் இழுத்து கடைசில பாழுங்கணத்துல தள்ளிவிட்டுட்டாங்களே.//
ஏம்பா சங்கரு, இட்லிவடையின்னு முகமூடிப்பேர்ல எளுதி ஒண்ணும் நிமித்த முடியலியா..
சரியான ஒதவாக்கரையா இருக்கியே
என்னங்க இந்திரஜித், இட்லிவடை வலைப்பதிவுல முகமூடிப்பேர்ல நான் எப்போ பின்னூட்டம் குடுத்தேன்?
ஞாயிறு, 09.10.05, 10:48:27மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
13:36:37 - ஞாயிறு, 02.10.05 -


