சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

கோவைப் பகுதி தமிழ் இணைய/வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பு

கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் (அல்லது வார இறுதிக்கு வருகைதரும்:-D) தமிழ் இணைய/மென்பொருள்/வலைப்பதிவு ஆர்வலர்கள் நேரில் அளவளாவ ஒரு வாய்ப்பாக ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கோவைக்கு சொந்த வேலையாக வந்திருக்கும் ஐகாரஸ் பிரகாஷ்,  கோவையிலிருந்து தூரமாகவே இருந்தாலும் பங்கேற்க பெரும் ஆர்வமுள்ள நாமக்கல் ராஜா, பல நாளாய் தமிழில் வலைப்பதிக்காவிட்டாலும் (அதென்ன அயல்நாட்டில் இருந்த போது முடிந்தது, தாய்நாட்டிற்கு வந்தபின் முடிவதில்லை?'- என்னையும் சேர்த்துத்தான்!) நிகழ்வுகளைக் கவனித்துவரும் சோடாபாட்டில் பாலா,  படங்களால் மனதைத்தொட்ட கலெக்டர் பாலா, இவர்களுடன் கோவைக்கு வந்து 4 மாதம் ஆகியும் இன்னும் வலைப்பதிக்காமல் ஒளிந்துகொண்டிருக்கும் அடியேனும்;-) இப்போதைக்கு உறுதிசொல்லியிருக்கிற நண்பர்கள்.

இன்னும் கோவைப்பகுதியில் இருந்து தமிழ் இணையத்தில் வாசகராக, குழுக்களில் உறுப்பினராக, வலைப்பதிவராக பங்கேற்கும், எனக்குப் பெயர் தெரியாத நண்பர்கள் வேண்டி விரும்பி அழைக்கப் படுகிறார்கள்.

இடம்: மேட்டுப்பாளையம் சாலை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள காசியின் இல்லம்.
நேரம்: அக்டோபர் 1 சனிக்கிழமை மாலை 6 முதல் 10 வரை (அவரவர் வசதிபோலக் கலந்துகொள்ளலாம்). மேலும் விபரங்களுக்கு 98941 11554 என்ற செல்பேசியில் அழைக்கலாம்.

இணையத்தில் மட்டுமே அறிந்த நண்பர்களை நேரில் பார்க்கவும், புது நண்பர்களை அறிந்துகொள்ளும் ஆவலுடனும் இருக்கிறோம்.

காசி - clock 04:34:18 - வெள்ளி, 30.09.05 - பொது - 3804x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search கோவைப் பகுதி தமிழ் இணையவலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பு

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

செல்வராஜ் சொன்னது:

இது ரொம்ப அநியாயம். ஒரு வாரம் கழித்து வைத்திருக்கலாம். நானும் வந்திருப்பேன். ஐகாரஸ்காரர் அதுக்குள்ள ஊர விட்டுப் போயிடுவாரோ? சரி. போனாப் போகுது. உங்கள் சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்.

வெள்ளி, 30.09.05, 05:12:09 Kannan சொன்னது:

ஆ! நான் ஞாயிறு மதியம் கோவை வருகிறேன் :-(

// சரி. போனாப் போகுது. உங்கள் சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள். //
நானும் அங்கனமே வாழ்த்துகிறேன்.

வெள்ளி, 30.09.05, 05:17:21 இளவஞ்சி சொன்னது:

காசியாண்ணா.. கலக்குங்க! நம்பநாள இந்தவாரம் வரமுடியாதுன்றது ஒருபக்கம் பொகையா இருந்தாலும் இந்த சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்!

பெங்களூரு மக்கள் யாராவது இந்த மாதிரி ஏற்பாடு செஞ்சா நான் வந்து சிற்றுண்டி சாப்பிட்டு சிறப்பிகத்தயார்! :)

வெள்ளி, 30.09.05, 05:20:08 ராசா சொன்னது:

:-( நம்ம எங்கயாவது வெளியூர் போற சமயத்துல தான் இப்படி நல்லதெல்லாம் நடக்கும்..
வாழ்த்துக்கள் (கொஞ்சம் வயத்தெரிச்சலுடன்) ;-)

வெள்ளி, 30.09.05, 05:24:39 சுப்ரமணியன் - ரூட்ஸ் - கோவை சொன்னது:

என்ன சார் - இப்படி திடீரென்று - அதுவும் சனிக்கிழமையில் - அலுவலகத்தில் அவசர வேலை - இல்லாவிட்டால் கட்டாயம் வருவேன் - சந்திப்பை பற்றிய விவரங்களை கட்டாயம் தமிழ் மணத்தில் வெளியிடவும் - வாழ்த்துக்கள்.

வெள்ளி, 30.09.05, 05:36:47 அன்பு சொன்னது:

மக்களே இதுவரை படமாகவே பார்த்து வந்த ரவா தோசை அப்புறம் என்னவோ கேக்னு போட்டாரே... இப்போ நேரில் சாப்பிடும் வாய்ப்பு. அதனால் சுத்துப்பட்டுல இருக்கிற அத்தனை பேரும் தவறவிட்டுடுதீங்கோ!

வாழ்த்துக்கள்... நல்லா கூடிப்பேசி, எங்களுக்கு எதாவது சொல்ல இருந்தா இங்க எழுதுங்க.

அப்புறம் பிடுங்கின நட்டுன மரம் இப்போ செட்டாயிடுச்சுதானே...!? நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

வெள்ளி, 30.09.05, 06:02:15 Kasi சொன்னது:

Selva, Ilavanji, Raasa, Subramaniam,

Let us have Part-2 next week if you all commit!

Kannan, When are you coming again?

Anbooooooo :D

வெள்ளி, 30.09.05, 06:36:25 Kannan சொன்னது:

காசி,

அடுத்த கோவைப் பயணம் பற்றி எதுவும்
திட்டமில்லை.

வெள்ளி, 30.09.05, 07:04:58 Padma Arvind சொன்னது:

காசி: அப்பாடி வனவாசம் முடிந்ததா? மீண்டும் முன் போல எழுதுவீர்களா இல்லை இது ஒரு சந்திப்பு அறிவிப்பு மட்டும்தானா?

வெள்ளி, 30.09.05, 08:38:23 சிவ குமார் சொன்னது:

அன்பு நண்பரே நானும் வர முயற்ச்சிக்கி‍றேன். இயலும் என்றே நினைக்கிறேன்.

வெள்ளி, 30.09.05, 10:36:20 சங்கரய்யா சொன்னது:

சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்

வெள்ளி, 30.09.05, 10:46:13 karthikramas சொன்னது:

எல்லோரும் காசியை வலைபதிய வைக்க ஏதாவது செய்துவிட்டு வாருங்கள். குறைந்தது நல்லா வாருங்கள். :-)

வெள்ளி, 30.09.05, 10:58:30 dharumi சொன்னது:

மதுர மட்டும் எங்க ஆறு மாதிரி 'dry' ஆகவே இருக்கே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு இப்படி ஒரு சோதனையா...?

உங்கள் 'சங்கத்திற்கு' வாழ்த்துக்கள்.........

வெள்ளி, 30.09.05, 12:35:50 தாணு சொன்னது:

கொஞ்சம் முன்னாடி தெரிந்திருந்தால் ப்ளான் பண்ண வசதியாக இருந்திருக்கும். ஈரோட்டிலிருந்து மாலை வருவது சிறிது சிரமம். போனில் தொடர்புகொள்ள முயல்கிறேன்.

தாணு.

வெள்ளி, 30.09.05, 12:37:50 ராம்கி சொன்னது:

காசி, விழா சிறக்க வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சொல்லுங்கள்.

வெள்ளி, 30.09.05, 14:09:39 Thangamani சொன்னது:

//எல்லோரும் காசியை வலைபதிய வைக்க ஏதாவது செய்துவிட்டு வாருங்கள். குறைந்தது நல்லா வாருங்கள். //

:)

வெள்ளி, 30.09.05, 17:30:58 காசி சொன்னது:

பத்மா, எழுதணும் என்ற ஆவல் வருகிறது. ஒருபுறம் அரட்டைக்கச்சேரிகள் உள்குத்து/வெளிக்குத்துடன் முகமூடிப்பட்டாளங்கள், மறுபுறம் ஆழமோ ஆழமான பதிவுகள், இதெல்லாம் பார்த்தால் குழப்பமாகவே இருக்கிறது. ஆனாலும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்தால்தால் எழுத்துப் பழக்கமாகும் என்பதற்காகவாவது எழுதுவேன். நன்றி.

சிவகுமார், போனில் தொடர்புகொள்ளுங்கள்.

சங்கரய்யா, தருமி, ராம்கி, நன்றி.

கதிர்காமஸ்;-) //குறைந்தது நல்லா வாருங்கள்.// இதென்ன சாமி புதுக்கரடி?

தாணு, அடுத்தமுறை பகலில் வைப்போம், வசதியாக இருக்கும்.

தங்கமணி :)

வெள்ளி, 30.09.05, 22:58:02 மதி கந்தசாமி சொன்னது:

சந்திப்பு வர இயலாதவர்கள் ஊடுருவி தொந்தரவு தர நினைத்தால் டீஜே/தங்கமணியின் இஷ்டதேவதையை காவலுக்கு வையுங்கள். ;)

மக்களே, சந்தோஷமா இருங்க.

என்ன பேசினீங்க, சாப்பிட்டீங்க(அந்த கேக்குத்துண்டு போட்டோ வேணும். சொல்லிட்டேன்! - அன்பு நான் சொன்னது சரிதானே!!) அப்புறம் யார் யார் கலந்துக்கிட்டாங்க என்பதற்கு அத்தாட்சியாக புகைப்படங்கள் எல்லாம் நாளைக்கு வரணும்.

-மதி

சனி, 01.10.05, 00:37:02 G.M.Sivaprakash - ROOTS சொன்னது:

Congrats All the best.Congrats All the best. Congrats All the best. Congrats All the best.
Congrats All the best.Congrats All the best. Congrats All the best. Congrats All the best.
Congrats All the best.Congrats All the best. Congrats All the best. Congrats All the best.
Congrats All the best.Congrats All the best. Congrats All the best. Congrats All the best.
Congrats All the best.Congrats All the best. Congrats All the best. Congrats All the best.

சனி, 01.10.05, 01:15:27 arul சொன்னது:

இங்க நாங்க ஏதோ ஊர்ல கஷ்டப்படணும். நீங்க சொந்த ஊர்லயே இருப்பீங்க. இதுல கொண்டாட்டம் வேறயா. ஒரு நாளைக்கு நாங்களும் வராமயா போயிருவம். அப்ப கவனிச்சுகிறேன். அதுவரைக்கும், எல்லோரும் நல்லா அநுபவிங்க. போட்டோவும் போடுங்க.
அருள்

சனி, 01.10.05, 05:37:26 துளசி கோபால் சொன்னது:

அன்புள்ள காசி,

உங்க வலை மாநாடு(!) நல்லபடியா நடந்திருக்கும். எல்லாம் விவரமா ( தீனி உள்பட) எழுதுங்க. இங்கேயும் நியூஸி மாநாடு நல்லாத்தான் போச்சு. ரெண்டு, ரெண்டே ரெண்டு வலப்பதிவாளர் சந்திச்சாலும், அது இங்கே வெறும் சந்திப்பு இல்லை. மாபெரும் மாநாடு.

யாரு கண்டா, ஒருவேளை பின்னாளில் அரசியலுக்குப் போறப்ப பயன்படாதா?:-)

என்றும் அன்புடன்,
துளசி.

சனி, 01.10.05, 21:07:40 இஸ்மாயில் கனி சொன்னது:

விழா சிறப்புடன் நடைப்பெற வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி
சவுதி அரேபியா

ஞாயிறு, 02.10.05, 02:18:31 இரத்தினவேலு சொன்னது:

என்ன பேசினார்கள் என்ன முடிவெடுத்தார்கள்
கொஞ்சம் சொல்லுங்களேன்

ஞாயிறு, 02.10.05, 03:50:13 vaamanikandan சொன்னது:

அப்பு...நான் கோபிச்செட்டிபாளையம் தான் அப்பு....

என்ன பண்ணுறதுங்க இப்போ இங்கமாட்டிகிட்டேன்....வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 02.10.05, 08:17:14 Kasi சொன்னது:

மதி,

இப்படியெல்லாம் மிரட்டினா எப்படி? சுருக்கமான ஒரு பதிவு போட்டிருக்கேன். கொஞ்சம் படம் உண்டு அவ்வளவுதான்.

GMS நன்றி. அருள், எப்ப வருவீங்க, சும்மா கரடி விடாமல்;-) அடுத்த முறை வரும்போது ஒரு குரல்கொடுங்க, ஜமாய்க்கலாம்.

துளசி, என்ன இருந்தாலும் உங்க மாநாடு அளவுக்கு இல்லதான்:P
(அப்படியே ஆண்டு நிறைவுக்கும், 200 ரன்னுக்கும் வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்)

இஸ்மாயில் கனி. நன்றி.

இரத்தினவேலு, அடுத்த பதிவில் சுருக்கமா இருக்கு

வா. மணிகண்டன், ஐதராபாத்தில் சந்திப்பு ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு?

அனைவருக்கும் நன்றி.

ஞாயிறு, 02.10.05, 13:45:10 losangelesram சொன்னது:

என்
கை விரல்கள்
கணினிப் பலகையோடு
அயல்நாட்டில்
சற்றே அயர்ந்திருந்தாலும்

எண்ணங்கள் என்னவோ
கோவையில் தான்!

(மு. மேத்தா மன்னிப்பாராக!)

ம்ம்ம். அசத்துங்க, காசி!

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

ஞாயிறு, 02.10.05, 20:41:10 காசி சொன்னது:

அன்புள்ள எல்லேராம்,

கவிதை புல்லரிக்குது:-)

வாழ்த்துக்கு நன்றி.

(எப்படியோ பதில் எழுதாம விட்டுப்போச்சு க்ஷமிக்கணும் சாரே.)

செவ்வாய், 04.10.05, 01:29:16

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it