சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

தமிழ்மணம் - 365

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்மணம் வலைவாசல் தொடங்கி இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த ஒரு வருடத்தில் 20,000 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இன்று பட்டியலில் உள்ள பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 150-லிருந்து 700ஐத் தொட்டுவிட்டது. (இவற்றில் சுமார் 500 மட்டுமே திரட்டிப்பட்டியலில் உள்ளன.) இந்த வலைவாசல் முதல் 6 மாதங்களாக நாளொரு மேனியும் பொழுதொரு மாற்றமுமாக வளர்ந்தே இன்று நாம் காணும் இந்த வடிவத்தைப் பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களாகப் பெரிய அளவில் முன்னேற்றங்கள் நடக்கவில்லை என்பதில் உங்களைப்போலவே எனக்கும் மனத்தாங்கல்கள் உள்ளன. ஆனால் கடந்த 2 வாரங்களாக சில முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். இதன்மூலம் மீண்டும் உத்வேகத்துடன் தமிழ்மணம் வலைவாசல் மேம்படுத்தப்படும், பல புதிய அமைப்பு/வசதி மாற்றங்கள் இனி வரும் வாரங்களில் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 4 மாதங்களாக என்னோடு தோள்கொடுத்து தமிழ்மணம் நிர்வாகப்பணிகளில் உதவி வரும் செல்வராஜ், மதி கந்தசாமி மற்றும் பரிமேலழகர் ஆகியோருக்கு நம் அனைவர் சார்பாகவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பைப் பயனபடுத்திக்கொள்கிறேன்.

சில நாட்களாக சமயம் சார்ந்த விதயங்களில் ஒருவர் மற்றவரின் கடவுளரைத் தாக்கி எழுதுவது சற்று தரம் தாழ்ந்து வருவதைக் காண நேரிடுகிறது. இத்தகைய பதிவுகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட பதிவுகள் தமிழ்மணம் சேவையிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அத்தகைய நிலைக்கு தள்ளவேண்டாம் என்றும் சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்த உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தமிழ்மணம் சார்பாக நன்றி.

அன்புடன்,

-காசி

காசி - clock 03:54:42 - செவ்வாய், 23.08.05 - பொது - 2500x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search தமிழ்மணம் 365

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

chandravathanaa சொன்னது:

மனமார்ந்த நன்றி காசி.

உங்கள் பணியினூடு தமிழ்மணம் மேலும் வளர்ந்து
தமிழ் இணையஉலகில் தனியிடத்தைப் பிடிக்க வாழ்த்துக்கள்.

செவ்வாய், 23.08.05, 04:15:15 prakash சொன்னது:

happy birthday thamizmanam..

செவ்வாய், 23.08.05, 04:15:24 சுபமூகா சொன்னது:

தமிழ்மணம் மேன்மேலும் மணம் சேர்த்துக் கொள்ள வாழ்த்துகள்.

செவ்வாய், 23.08.05, 04:20:57 Suresh சொன்னது:

Happy Birthday thamizmanam!

so I have completed one year of blogging too!

செவ்வாய், 23.08.05, 04:30:25 Suresh சொன்னது:

Happy Birthday thamizmanam!

so I have completed one year of blogging too!

செவ்வாய், 23.08.05, 04:30:42 Suresh சொன்னது:

Happy Birthday thamizmanam!

so I have completed one year of blogging too!

செவ்வாய், 23.08.05, 04:31:00 Suresh சொன்னது:

Happy Birthday thamizmanam!

so I have completed one year of blogging too!

செவ்வாய், 23.08.05, 04:31:25 Hold at 9000 சொன்னது:

Have enjoyed reading thamizmanam. Happy Birthdy...

செவ்வாய், 23.08.05, 04:33:29 VM சொன்னது:

GReat News and hope tamizmanam will reach more heights.
Kasi & Team,
Congrats and thanks so much for co-ordinating..
Appreciate your effort!

VM

செவ்வாய், 23.08.05, 04:41:37 Jagadhees சொன்னது:

Happy Birthday Thamizmanam !!!

செவ்வாய், 23.08.05, 04:49:29 Salahuddin சொன்னது:

Kasi & team,

Thanks for your wonderful service to the Tamil blogging community.
Happy Birthday Thamizmanam!

செவ்வாய், 23.08.05, 04:51:43 கோபி சொன்னது:

காசி மற்றும் நிர்வாகிகளுக்கு,

வாழ்த்துக்களும் நன்றிகளும்!!

ஆண்டு விழா காணும் தமிழ்மணம் மேன்மேலும் பல புதிய வசதிகளுடன் வளர வாழ்த்துக்கள்..

செவ்வாய், 23.08.05, 04:56:36 P.V.Sri Rangan சொன்னது:

அன்பு நிறைந்த காசி அவர்கட்கு,வணக்கம்!தங்களதும் மற்றும் அனைத்து தமிழ் மண நுட்பவியலாளருக்கும் நாம் நன்றியை முதலில் தெருவித்துக் கொள்கிறோம்.உங்களின் இந்தப் பெருந்தன்மையான சேவை மென் மேலும் தொடர எம்மால் வாழ்தமட்டுமே முடியும்.
நிறைந்த நன்றியுணர்வோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

செவ்வாய், 23.08.05, 05:21:12 பரணீ சொன்னது:

பிறந்த நாள் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

செவ்வாய், 23.08.05, 05:22:04 துளசி கோபால் சொன்னது:

மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிர்வாகிகளுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

நல்லா இருங்க!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

செவ்வாய், 23.08.05, 05:32:13 Valavan சொன்னது:

வாழ்த்துக்கள்

செவ்வாய், 23.08.05, 05:41:22 தேசிகன் சொன்னது:

வாழ்த்துக்கள் காசி.
அன்புடன்
தேசிகன்

செவ்வாய், 23.08.05, 05:44:33 வசந்தன் சொன்னது:

முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

செவ்வாய், 23.08.05, 05:57:36 Jayanthi Sankar சொன்னது:

மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
காசி மற்றும் குழிவினரின் பொன்னான சேவை தமிழுக்கும் தமிழ் மணத்துக்கும் செய்திருக்கும் நன்மை பெருமிதத்தைக் கொடுக்கிறது !
எல்லோருக்கும் மிக்க நன்றி.

செவ்வாய், 23.08.05, 06:04:37 வெங்கட் சொன்னது:

காசி - வாழ்த்துக்கள். தமிழ்மணம் இப்பொழுது நம் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டிருக்கிறது. அசாத்திய உழைப்பும் ஊக்கமும் பாராட்டப்படவேண்டியவை. குழுவினருக்கும் நன்றிகள். - வெங்கட்ட

செவ்வாய், 23.08.05, 06:12:40 சுதர்சன் சொன்னது:

குழந்தைக்கு முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் எல்லோரின் ஆயுளையும் தாண்டி தமிழ்மணம் மணம் வீசிக் கொண்டிருக்க வாழ்த்துகிறேன்.

காசி, சமய தாக்குப் பதிவுகள் பற்றி உங்கள் கருத்துதான் என் கருத்தும்.

செவ்வாய், 23.08.05, 06:19:05 நந்தலாலா சொன்னது:

அன்புள்ள காசி,
வணக்கம்.
உங்களுக்கும், தங்களின் பங்களிப்பை தந்து தமிழ்மணத்தை வளர்த்து வரும் அனைவருக்கும், தமிழ்மணத்தின் பயனீட்டாளன் என்றவகையிலே நன்றியும் வாழ்த்துக்களும்!
நந்தலாலா.

செவ்வாய், 23.08.05, 06:25:39 ரம்யா நாகேஸ்வரன் சொன்னது:

மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நல்ல சேவை தொடரட்டும். எங்களைப் போன்றவர்கள் cyber space ஸில் சந்தித்து கொள்வதற்கும், கருத்து பரிமாற்றம் நிகழ ஒரு அரிய சூழலை ஏற்படுத்தி கொடுத்ததற்கும் மிக்க நன்றி.

செவ்வாய், 23.08.05, 06:25:55 அழகப்பன் சொன்னது:

என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றது தமிழ்மணத்தை வாசிக்கத் தொடங்கிய பின்புதான். வாய்ப்பமைத்துக் கொடுத்த காசி மற்றும் நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்.

தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தை இனி நடக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். நடப்பதையும் ஓட்டத்தையும் ரசித்து மகிழ கூடவே நானும் ஓடிவர மிகவும் ஆவலுடன் உள்ளேன்.

செவ்வாய், 23.08.05, 07:06:22 தர்சன் சொன்னது:

வாழ்த்துக்கள்

செவ்வாய், 23.08.05, 07:09:21 ந.இரத்தினவேலு சொன்னது:

வணக்கம்
ஒரு வலை பதி்விற்கு பிண்ணுட்டடம் இட்டால் அற்கு அந்த வலைபதிவர் பதில் கொடுத்ததும் பிண்ணுட்டாடமிட்டவருக்கு மின்னஞ்சல் வரவைக்க முடியுமா?
முடிந்தால் அதையும் செய்து கொடுங்கள்
எனனார்

செவ்வாய், 23.08.05, 07:16:46 aruL சொன்னது:

தமிழ்மணத்துக்கு வாழ்த்துகள். உங்கள் குழுவுக்கு நன்றி.

அருள்

செவ்வாய், 23.08.05, 07:22:39 ஸ்ரீகாந்த் சொன்னது:

வளர்ந்தோங்க வாழ்த்துக்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்.

ஸ்ரீகாந்த்

செவ்வாய், 23.08.05, 07:52:21 குமரேஸ் சொன்னது:

காசி அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி,

தமிழ்மணம் மேன்மேலும் பல புதிய வசதிகளுடன் வளர வாழ்த்துக்கள்.

செவ்வாய், 23.08.05, 08:02:22 சுந்தரவடிவேல் சொன்னது:

காசிக்கும் கூட்டாளிகளுக்கும் நன்றி!

செவ்வாய், 23.08.05, 08:09:07 Padma Arvind சொன்னது:

காசி
தனித்தனி மலர்களாக தேடி படித்துக்கொண்டிருந்த என் போன்றோருக்கு அவற்றை தொடுத்து தந்தமைக்கு நன்றி. இதன் பின்னால் உள்ள உங்கள் உழைப்புக்கும் மற்றும் த்மிழ்மண நிர்வாகிகளுக்கும் நன் மனமார்ந்த நன்றிகள்.

செவ்வாய், 23.08.05, 08:12:26 Balaji-paari சொன்னது:

Vaazhththukkal Kasi and team members!!

செவ்வாய், 23.08.05, 08:18:25 ஜோசப் இருதயராஜ் சொன்னது:

என்னையும் கிறுக்க தூண்டியதே நீங்கதானே!

மகிழ்ச்சி பொங்க !
மீண்டும் புதுதெம்போடு
நடைபோட
என் வாழ்த்துகள்!

செவ்வாய், 23.08.05, 08:22:38 ஜோசப் இருதயராஜ் சொன்னது:

என்னையும் கிறுக்க தூண்டியதே நீங்கதானே!

மகிழ்ச்சி பொங்க !
மீண்டும் புதுதெம்போடு
நடைபோட
என் வாழ்த்துகள்!

செவ்வாய், 23.08.05, 08:23:11 ஜோசப் இருதயராஜ் சொன்னது:

என்னையும் கிறுக்க தூண்டியதே நீங்கதானே!

மகிழ்ச்சி பொங்க !
மீண்டும் புதுதெம்போடு
நடைபோட
என் வாழ்த்துகள்!

செவ்வாய், 23.08.05, 08:23:33 பாண்டி சொன்னது:

அன்புள்ள காசி,

வணக்கம். உங்களுக்கும், தங்களின் பங்களிப்பை தந்து தமிழ்மணத்தை வளர்த்து வரும் அனைவருக்கும், தமிழ்மணத்தின் பயனீட்டாளன் என்றவகையிலே நன்றியும் வாழ்த்துக்களும்!

செவ்வாய், 23.08.05, 08:29:10 பாண்டி சொன்னது:

Kasi,

after adding comment it comes back with "no such item exists" ... i think that is the reason couple of comments were repeated...

fellow bloggers, please do not add your commes again and again if you see an error "no such item exists"

செவ்வாய், 23.08.05, 08:32:42 nirmala சொன்னது:

தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

நிர்மலா.

செவ்வாய், 23.08.05, 08:35:39 DJ சொன்னது:

ஒருவருட அகவை கொண்டாடும் தமிழ்மணத்துக்கு வாழ்த்து!
.....
அவ்வவ்போது பெரும்/சிறு/நடுத்தரப் பத்திரிகைகளில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து 'தகவல்' அளிப்பவர்கள் ஏன் அவ்வளவு சுலபமாக தமிழ்மணமதின் இருப்பை இருட்டடிப்புச் செய்கின்றார்கள் என்பது வியப்பாக இருந்தாலும், புதிதாக தமிழில் வலைப்பதிபவர்கள் இந்தத்தடைகளை மீறியும் தமிழ்மணத்தை வந்தடைவது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம்.

செவ்வாய், 23.08.05, 08:37:48 மாலன் சொன்னது:

தமிழில் வலைப்பூக்கள் வேர் கொள்ள தமிழ்மணம் மூலம் காசியும் அவரது குழுவின்ரும் ஆற்றிய பணி வ்ணங்கத்தக்கது. வருமாண்டுகளில் மேன்மேலும் உருவமும் தரமும் பொறுப்பும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
மாலன்

செவ்வாய், 23.08.05, 08:43:12 kulakaddan சொன்னது:

தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

செவ்வாய், 23.08.05, 08:45:07 சுதர்சன்.கோபால் சொன்னது:

தமிழ்மணம்-குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

செவ்வாய், 23.08.05, 08:45:12 கொங்கு- ராசா சொன்னது:

வாழ்த்துக்கள்

செவ்வாய், 23.08.05, 08:55:41 karthikramas சொன்னது:

தமிழ்மணத்துக்கு வாழ்த்து. டீ சே சொன்னதியே யோசித்துக்கொண்டிருந்தேன். வழிமொழிகிறேன்.

செவ்வாய், 23.08.05, 09:22:42 குழலி சொன்னது:

தமிழ்மணத்திற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், தமிழ்மணத்திரட்டிக்கு மிக்க நன்றி
காசி மற்றும் குழுவினர்க்கும் மிக்க நன்றி

குழலி

செவ்வாய், 23.08.05, 09:34:10 சன்னாசி சொன்னது:

மனமார்ந்த வாழ்த்துக்கள். நிர்வாகக் குழுவினர் அனைவரது உழைப்புக்கும் நேரத்துக்கும் மிக்க நன்றி.

செவ்வாய், 23.08.05, 09:37:09 S. Sankarapandi சொன்னது:

பன்முகப்பட்ட சிந்தனைகளை பரவலாகத் தெரியச் செய்கிற தமிழ்மணத்திற்கும், அதை நிறுவிய காசிக்கும், அதை பின் உழைத்து வரும் மதி கந்தசாமி, பரி உள்ளிட்ட மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

செவ்வாய், 23.08.05, 09:42:18 பால சுப்ரா சொன்னது:

நன்றி!

செவ்வாய், 23.08.05, 09:54:52 சர்தார் சொன்னது:

காசி & நிர்வாகக் குழுவினருக்கும், வாசகப்பெருமக்களுக்கும் தமிழ்மணத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைத்த உங்கள் பணி மகத்தானது.

செவ்வாய், 23.08.05, 10:08:19 -/பெயரிலி. சொன்னது:

n-anRi.

செவ்வாய், 23.08.05, 10:11:21 சோழநாடன் சொன்னது:

தமிழ்மணத்திற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
காசி மற்றும் தமிழ்மணம் குழுவினருக்கு நன்றி.

--சோழநாடன்

செவ்வாய், 23.08.05, 10:24:26 .:dYNo:. சொன்னது:

வாழ்த்துகள்!
காசி, மதி கந்தசாமி, செல்வராஜ், பரிமேழகர் குழுவினர் உழைப்புக்கும் நேரத்துக்கும் மனமார்ந்த நன்றி!

செவ்வாய், 23.08.05, 10:28:05 M.K.Kumar சொன்னது:

'வலைப்பூ' என்ற தளம் ஒழிக்கப்பட்டு, ஏதோ தமிழ் மணம்' என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டபோது மிகுந்த ஏமாற்றமாயும் வருத்தமாயும் இருந்தது. அத்துடன் வந்து தமிழ்மணத்தில் எனது வலையையும் இணைத்துக்கொண்டேன். கொஞ்சநாள் பிடிக்காமலும் இருந்தது.

இன்று தமிழ் மணம் காட்டும் இணைய உலகுக்கு எவ்விதத்திலும் எதுவும் ஈடுகட்ட முடிவதில்லை. நண்பர்களின் உழைப்பிற்கும் ஆர்வத்தீற்கும் எனது நன்றிகள்; வணக்கங்கள்.

எம்.கே.குமார்.

செவ்வாய், 23.08.05, 10:39:50 மணியன் சொன்னது:

வாழ்த்துக்கள் பல.
தமிழ் வலைஞர் கூடி கலந்துரையாட அருமையான சாதனம். பதிவாளன் இல்லையென்றாலும் தினமும் எனக்கு விருந்த்ளிப்பது தமிழ்மணமே.
உருவாக்கிய காசி மற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழர் யாவரும் கடன் பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
மணியன்

செவ்வாய், 23.08.05, 10:47:50 முகமூடி சொன்னது:

காசி, செல்வராஜ், மதி, பரிமேலழகர் அனைவருக்கும் நன்றி

செவ்வாய், 23.08.05, 10:48:27 anurag சொன்னது:

இன்று தமிழ் இணையம் என்பதே தமிழ் வலைப்பதிவுகள் தான் என்ற அளவுக்கு இணையம் சாராத இதழுலகில் தமிழ் வலைப்பதிவுகள் புகழ்பெற்றுள்ளன. வலையுலகிலோ தமிழ் வலைப்பக்கங்கள் எங்கே பார்க்கக் கிடைக்கும் என்று தேடுபொறிகளில் நித்தம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தேடவே தேவையில்லாமல் தமிழ் வலைக் கடலையே கண்முன்னே கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் நிரந்தரத் தஞ்சமாகி விட்டது. சிதறிக்கிடந்த வலைமுத்துக்களை கோர்த்திணைத்து தமிழ்மணம் என்ற மாலையாக்கித் தந்ததால் தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையும் 700+ ஆகியுள்ளது. இத்தனை சாதனைகளும் ஒருவருட காலத்துக்குள் தமிழ்மணம் சாதித்தவை தான் என்பதே சாதனை தான். வாழ்த்துக்கள்.

//சில நாட்களாக சமயம் சார்ந்த விதயங்களில் ஒருவர் மற்றவரின் கடவுளரைத் தாக்கி எழுதுவது சற்று தரம் தாழ்ந்து வருவதைக் காண நேரிடுகிறது//
இரண்டு மாதங்களுக்கு முன்பே இது குறித்து நான் மன்றத்தில் எழுதியிருந்தேன். உங்கள் எச்சரிக்கைக்கு பலன் கிட்டுகிறதா பார்ப்போம்...

செவ்வாய், 23.08.05, 11:15:36 Arun சொன்னது:

Congrats Kasi and team for a great Effort!
Happy anniversary to Thamizmanam.

செவ்வாய், 23.08.05, 11:19:45 காசி சொன்னது:

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இன்னும் நாள் இருக்கிறது என்று எண்ணி நான் இன்றைய பதிவை முதலிலேயே தயார் செய்யாமல் விட்டுவிட்டேன். ஏதோ யோசனையாய்ப் பழையதைப் புரட்டுகையில் இன்றுதான் ஆண்டுநிறைவு என்பது தெரிந்ததும், அவசர அவசரமாக மதிய உணவு இடைவேளையில் ஒரு அறுதப்பழசான (ஒட்டுப்போடாத விண்டோஸ்98ல் ஓடும்) இணையமையம் ஓடி, சுரதாவின் பொங்குதமிழ் வழியாக அடித்து
ஒப்பேற்றியதால் பல எழுத்துப்பிழைகள். இப்போது சரி செய்துவிட்டேன்.

சென்ற வருடம் வலைவாசல் தொடக்கம் சம்பந்தமாக எழுதிய சிலவற்றின் சுட்டிகள் இங்கே, புதிதாக வந்தவர்களுக்காக:

http://kasilingam.com/?item=117...

http://kasilingam.com/?item=118...

http://kasilingam.com/?item=119...

http://kasilingam.com/?item=125...

http://kasilingam.com/?item=123...

100வது நாள் பதிவு:

http://kasilingam.com/?item=148...

செவ்வாய், 23.08.05, 11:53:21 மு.மயூரன் சொன்னது:

பாராட்டுக்கள்.

தமிழ்மணத்தின் தேவையை வலைப்பதிவுகளும் தமிழ் இணையமும் தாண்டுகின்ற போது, அடுத்த கட்டத்துக்கேற்ப தமிழ்மணம் தன்னை மாற்றி, முன்செல்லும் என்ற நம்பிக்கைகள் நிறைய உண்டு.
அதுவே என் வாழ்த்துக்களும்.

செவ்வாய், 23.08.05, 12:18:10 viswanathan சொன்னது:

முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது போல் நீங்கள் இணையத்தில் தமிழ்மணம் வைத்துத் தமிழ் வளர்க்கிறீர்கள். இரண்டும் ஒரே அளவுள்ள முயற்சி தான்..

பதினைந்து ஆண்டுகளாக இதோ எழுதுகிறேன் அதோ எழுதுகிறென் என்று சொல்லி தள்ளிப் போட்டு வந்த என் ஆர்வம்.. இந்த ஊடகத்தில் பழமானது.. அதற்கு நன்றி.. நாளைய உலகத்தில் தமிழ்மணத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக பலரும் வருவார்கள். அவர்களை வளர்த்த பெருமை உங்களையே சாரும்.

தற்போது, வெங்கிட்டு மற்றும் முகமூடி ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறார்கள். எத்தனையொ நல்ல தமிழில் கதைகளும் கவிதைகளும் மனதில் இருந்து வலைப்பூவாய் விரியும் ஒரு அற்புதம். இது போன்ற முயற்சிகள் தமிழை பொதுவாகவும், குறிப்பாக இணையத்திலும் வளர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. இவர்கள் சிறந்த கிரியா ஊக்கிகள்.

வலைப்பதிவாளர்கள் பல இடங்களில் இருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் (மாதம் ஒரு முறை) சந்திதுக் கொண்டால், நம்மில் ஒரு இணைப்பு பெருகும்.. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.. (தமிழ்சுரங்கம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் ண்J, ஊஸா யில் இதே பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்).

(அடுத்த பின்னூட்டத்தில் தொடரும்)

செவ்வாய், 23.08.05, 12:18:21 viswanathan சொன்னது:

முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள். (தொடர்ச்சி)

வலைப்பதிவாளர்கள் பல இடங்களில் இருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் (மாதம் ஒரு முறை) சந்திதுக் கொண்டால், நம்மில் ஒரு இணைப்பு பெருகும்.. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.. (தமிழ்சுரங்கம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் NJ, USAயில் இதே பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்).

மதம் பற்றிய குறிப்பு சிந்திக்க வைக்கிறது.. தமிழை விட்டு மததுக்குப் போகும் போது.. தமிழைக் காண முடிவதில்லை.. பலர் தம் மதத்தை நிலை நிறுத்தவும் சிலர் அதைக் குலைக்கவும் வலைப்பதிவுகளைப் பயன் படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது அது எந்த வகையில் (category) சேரவேண்டும் என்று பிரித்து, வலைப்பதிவை அந்த அடிப்படியிலேயெ பார்க்கும் வசதியும் தரலாம்.

உதாரணத்துக்கு, மதம் ஒரு வகை என்று கொண்டால், தமிழ்மணத்தின் முகப்பில் மதம் என்ற சுட்டி வைத்து அதைத் தேர்ந்து எடுப்பவர்கள் மட்டும் அதனுள் போகும் படிச் செய்யலாம்.

மற்றபடி இந்த முயற்சியில் என்னுடைய பங்களிப்பு ஏதும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.. நான் தயார். (எடுத்துப் போட்டு செய்வது தான் பழக்கம் என்றாலும் எனக்கு எதை யார் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை... அதனால் தான் கேட்கிறேன்)
இப்படி ஒரு அமைப்பை இணையத்தில் நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்..

அன்புடன் விச்சு
neyvelivichu.bogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி

செவ்வாய், 23.08.05, 12:21:06 க்ருபா சொன்னது:

சரியான நேரத்தில் முனைப்பு எடுத்து சரியான சேவைத்தளம் ஆரம்பிச்சீங்களே, நன்றி நன்றி. வேற எந்த இந்திய, இலங்கை, சிங்கப்பூர்/மலேஷிய மொழிக்காவது இப்படி எல்லாம் இருக்கான்னு தெரியலை. எல்லா மொழிலயுமா ஓசி, சாரி காசி இருப்பாங்க?

உங்களையும் அண்டர்க்ரௌண்டில் பணியாற்றும் மதி (மிதி) & செல்வராஜையும் வாழ்த்த வழி...வந்து வயது இல்லாததால் வணங்குகிறேன். புதுமாப்பிள்ளை பரி சத்தமே காணும். அதனால ஆள் வெளில வந்ததும் வாழ்த்திக்கறேன்.

ஆகஸ்ட் 23 தமிழ்மணத்துக்கு ஒரு வயசு ஆகிறது, எனக்கு 27. :-) லாங்க் லாங்க் அகோ, நோபடி நோஸ் ஹௌ லாங்க் அகோ, தட் ஈஸ் இன் 1978 ஆகஸ்ட் 23, ஹச், ஹச், ஹச்.

செவ்வாய், 23.08.05, 14:01:57 க்ருபா சொன்னது:

பதிவுத் தலைப்பில் hyphen போட்டு ஏதாவது ஒரு எண் போட்டால் அதையே பதிவின் itemID என blog:cms எடுத்துக்கொள்ளும். அதான் தனிச்சுட்டி, கமெண்ட் சேவ் பண்ணிய பிறகு ரீடைரக்ஷன் எல்லாவற்றிலும் 200க்குப் பதிலாக item=365 என்று வந்து விடுகிறது.

செவ்வாய், 23.08.05, 14:04:49 க்ருபா சொன்னது:

}-(

செவ்வாய், 23.08.05, 14:06:35 Thangamani சொன்னது:

தமிழ் மணத்துக்கு வாழ்த்துகள். காசிக்கும் உடனுழைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி! தமிழ் காலங்காலமாக இப்படி சில தனி நபர்களின் ஆர்வத்தாலும், உழைப்பாலுமே இதுவரை உயிர்பிழைத்துவருகிறது என்று நான் நினைப்பதுண்டு. அவ்வுழைப்புக்கும் ஆர்வத்துக்கும் இம்மொழியின் மேலுள்ள ஈடுபாடும், இதை பேசுமொழியாகக் கொண்டிருக்கும் மக்கள் மேல் கொண்டிருக்கும் அன்புமே காரணமாக இருந்திருக்கிறது என்றும் நினைப்பேன். அவ்வழியில் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு 'தமிழ் மணம்'. காசியின் சமயம் குறித்த பதிவுகள் குறித்த எச்சரிக்கை சரியான நேரத்தில் வந்துள்ளது.
நன்றி!

செவ்வாய், 23.08.05, 14:47:34 kirukan சொன்னது:

Happy BIRTHDAY

செவ்வாய், 23.08.05, 15:33:12 சுரேஷ் செல்வா சொன்னது:

தமிழ்மணத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காசி, மதி மற்றும் செல்வராஜுக்கு நன்றிகள்.

செவ்வாய், 23.08.05, 15:34:56 tharasiva சொன்னது:

காசி, செல்வராஜ், மதி, பரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!

தாரா.

செவ்வாய், 23.08.05, 15:46:41 sethu சொன்னது:

தமிழ் மணம் மேலும் சிறக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

செவ்வாய், 23.08.05, 18:13:17 -L-L-D-a-s-u- சொன்னது:

தமிழ்மணத்திற்கும், நிர்வாகிகளுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் ..

செவ்வாய், 23.08.05, 18:58:24 Aruna சொன்னது:

தமிழ் மணம் மேலும் தழைத்தோங்கவும், அயராது இந்த முயற்சியில் வெற்றிகரமாக செயல்படும் காசிக்கும் மதிக்கும் மற்றும் அவர்களுடன் இணையாக செயல்படும் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்த்துக்கள்.

அருணா

செவ்வாய், 23.08.05, 19:38:18 அண்ணாகண்ணன் சொன்னது:

காசி முதலான தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகள். நல்ல நோக்கம், திட்டமிடல், தொலைநோக்கு, ஆழ்ந்த கவனம், தலைப்பு முதல் தளத்தின் அனைத்துச் சொற்களும் தூய தமிழில், விவாதங்களை வரவேற்கும் மனப்பாங்கு, அனைவரையும் மதிக்கும் தன்மை, தெளிவான வழிகாட்டுதல்.... எனப் பற்பல கூறுகளைத் தமிழ் மணத்தில் காண்கிறேன். இந்தக் கூறுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் எதுவும், பெருவெற்றி பெறும் என்பதற்குத் தமிழ்மணமே சான்று.

புதன், 24.08.05, 01:26:07 Annakannan சொன்னது:

காசி முதலான தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகள். நல்ல நோக்கம், திட்டமிடல், தொலைநோக்கு, ஆழ்ந்த கவனம், தலைப்பு முதல் தளத்தின் அனைத்துச் சொற்களும் தூய தமிழில், விவாதங்களை வரவேற்கும் மனப்பாங்கு, அனைவரையும் மதிக்கும் தன்மை, தெளிவான வழிகாட்டுதல்.... எனப் பற்பல கூறுகளைத் தமிழ் மணத்தில் காண்கிறேன். இந்தக் கூறுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் எதுவும், பெருவெற்றி பெறும் என்பதற்குத் தமிழ்மணமே சான்று.
- அண்ணாகண்ணன்

புதன், 24.08.05, 01:26:49 ஈஸ்வர் சொன்னது:

Necessity is the mother of invention, hope more necessities arise and help blogging community march ahead.

புதன், 24.08.05, 01:32:49 suresh kannan சொன்னது:

தமிழ்மணம் ஆரம்பித்து ஒரு வருடம்தானா ஆகப் போகிறது? எனக்கென்னமோ சில பல வருடங்கள் கூடவே ஆனது மாதிரி ஒரு பிரமை அல்லது மனப்பிராந்தி. :-)

தமிழ்மணத்தின் மூலக்காரணகர்த்தாவான காசிக்கும் அவர் தோளோடு தோள்நின்று உழைக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

- சுரேஷ் கண்ணன்.

புதன், 24.08.05, 02:50:02 இராதாகிருஷ்ணன் சொன்னது:

பொது நோக்கத்திற்காகத் தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு வரும் காசி மற்றும் தமிழ்மணத்தை நிர்வகிக்கும் இதர நண்பர்களுக்கு மிக்க நன்றி! தமிழ்மணம் மேலும் மெருகேற வாழ்த்துகள்!

புதன், 24.08.05, 03:44:45 Kanan சொன்னது:

காசி,

உங்களுக்கும் இணை நிர்வாகிகளுக்கும், ஆலோசகர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

புதன், 24.08.05, 05:23:12 iraamaki சொன்னது:

தங்கள் விழைநேரம் தாமுயரப் போக்குவதே,
எங்கும் நடைமுறையாய் இக்காலம் - இங்கோ, நீர்
ஓங்குதமிழ் என்றுசொல்லி ஊருக்கு மணஞ்செய்தீர்
நாங்களதற்(கு) என்தருவோம் மாற்று?

நன்றியுடன்,
இராம.கி.

புதன், 24.08.05, 05:34:38 அனாமிகா மெய்யப்பன் சொன்னது:

நன்றியும், வாழ்த்துக்களும்

புதன், 24.08.05, 05:35:53 மூக்கு சுந்தர் சொன்னது:

ஏயப்பா..இத்த்னை பேர் சொல்ட்டாங்களா..??

காசி சார்...இதோ பிடிங்க என் வாழ்த்துகளையும், நன்றிகளையும்.

இங்க வந்த எவ்ளோ பேரு இதையும் பாத்தாங்கன்னு தெரீலை. அதுக்கப்பறம் அந்த மேட்டர்ல ( http://pari.kirukkalgal.com/?p=130...) ஏதும் நகந்திச்சான்ன்னு தெரியாம, நான் திரு திருன்னு முளிக்கறேன்.

யாராச்சும் கெல்ப் பண்ணுங்கப்பா...

புதன், 24.08.05, 12:17:33 Navan Bhagavathi சொன்னது:

Thank you Thamizmanam. Best wishes for the coming years.

புதன், 24.08.05, 12:36:02 அபூ முஹை சொன்னது:

வாழ்த்துக்கள்!

புதன், 24.08.05, 12:38:04 மெய்லாபூர் கபாலி, எட்டாம் நம்பர் கடை சொன்னது:

த பார்ரா. அதுக்குள்ளார ஒரு வர்சம் ஓடிருச்சா? மப்ல ஒன்னுமே பிரியலை. அப்ப கையக் குடுங்கண்ணா காசி. வாய்த்துகல். ஒங்ளோட கூட மாட வேல செய்யுற மதியக்கா, செல்வா, பரீஸ் அல்லார்க்கும் வாய்த்துகல்பா. பிளீஸ் கண்டின்யூஸ் குட்டு ஜாபு.

புதன், 24.08.05, 12:46:49 தருமி சொன்னது:

வளர்த்தவர்களுக்கு நன்றி.
மேலும் வளர, மெருகேற வாழ்த்துக்கள்.

புதன், 24.08.05, 15:48:59 போலி டோண்டு சொன்னது:

தளம் மென்மேலும் வளர்ந்து பீடுநடை போட எனது அன்பான வாழ்த்துக்கள். இத்தருணத்தில் ஜாதி, மதம், இனம் சார்ந்த பதிவுகளை எழுதுபவர்களுக்கு உங்கள் எச்சரிக்கை மிக மிக அவசியம். அவ்வாறான பதிவர்களுக்கு தாங்கள் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கலாம். மேலும் தொடர்ந்தால் தளத்தில் இருந்து அவர்களின் பதிவினை அப்புறப் படுத்தலாம். இது எனது யோசனை மட்டுமே.

புதன், 24.08.05, 23:26:38 Joe சொன்னது:

உங்கள் முயற்சிகளுக்கு என்றும் கடமைபட்டிருக்கிறோம்.

புதன், 24.08.05, 23:59:55 Dubukku சொன்னது:

வாழ்த்துக்கள்!!
மேலும் வளர, மெருகேற வாழ்த்துக்கள்.

வியாழன், 25.08.05, 07:43:27 மு. சுந்தரமூர்த்தி சொன்னது:

காசி & கும்பினி,
'தமிழ்மணம்' மையத்தைத் தொடங்கி, தொடரும் உங்கள் ஊக்கத்திற்கும், உழைப்பிற்கும், நேரத்திற்கும், பொருளுக்கும் பயனாளர்கள் கடன்பட்டிருக்கிறோம்.

கடவுள் சம்பந்தமான பதிவுகள் குறித்து நீங்கள் விடுத்துள்ள மென்மையான மிரட்டல் தேவையா என்று தோன்றுகிறது. ஒரு மதத்தினர் இன்னொரு மதக்கடவுளைத் தாக்குவது, நம்பிக்கையற்றவர்கள் மதத்தைத் விமர்சிப்பது, நம்பிக்கையாளர்கள் நாத்திகர்களை எள்ளி நகையாடுவது என்று பலத்தரப்பட்டவை எழுதப்படுகின்றன. ஒன்றில் கைவைத்தால் இன்னொன்றிலும் கைவைக்க வேண்டியிருக்கும். விமர்சனத்துக்கும், தாக்குதலுக்கும் இடையே எப்படி எல்லை வகுப்பது?

இந்த கடவுள் சண்டைகளில் ஈடுபடுவோரும், ரசிப்பவர்களும் மிகச்சிலரே. பெரும்பாலானவர்கள் அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள். நீங்களும் இந்த சிக்கலிலும், பிறகு தேவையற்ற விமர்சனத்திலிருந்தும் ஒதுங்கியிருந்து உங்கள் சேவையை தொடரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

வியாழன், 25.08.05, 09:59:42 காசி சொன்னது:

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லாவிட்டாலும், நீங்கள் சொன்னவற்றை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கிகொண்டோம். யோசனைகளை இங்கோ, அல்லது வலைப்பதிவர் மன்றத்திலோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
(இராம.கி. அவர்களுக்கு சிறப்பு நன்றி. சில நாள் முன்பு ஒரு மடல் எழுதினேன், கிடைத்ததா என்று ஐயம்...)

வியாழன், 25.08.05, 12:06:22 Shreya சொன்னது:

Thankyou Kasi, Mathy, Selvaraj, and Pari.

Happy birthday to thamizhmanam

வியாழன், 25.08.05, 19:32:57 அப்பாவி சொன்னது:

அடுத்த ஆகஸ்ட் வரைக்கும் எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொண்டே இருப்பீங்க போல

வியாழன், 25.08.05, 22:18:40 அப்பாவி சொன்னது:

எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக்கொண்டே இருப்பீங்க போல
அடுத்த ஆகஸ்ட் வரைக்கும்

வியாழன், 25.08.05, 22:19:47 BALA சொன்னது:

Congrats, Kasi, Mathy and Selvaraj !!! Best wishes !!!

வெள்ளி, 26.08.05, 15:02:34 meenaks சொன்னது:

தமிழ்மணத்தில் இணைந்து மேலும் ஊக்கம் பெற்றேன். பல நல்ல நட்புறவாளர்களை அடையும் கூடமாகவும் விளங்கியது. உங்கள் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

சனி, 27.08.05, 04:39:55 sheaku சொன்னது:

அருமையான தமிழ்மணம் குழுவினருக்கு வாழ்த்துகள் .தொடருங்கள்...

சனி, 27.08.05, 14:50:25 ஒரு பொடிச்சி சொன்னது:

வாழ்த்துக்கள்,
காசிக்கும் மற்றும் இணைநிர்வாகிகள் செல்வராஜ், மதி, பரி ஆகியோருக்கும் நன்றிகள்.

சனி, 27.08.05, 14:59:45 அன்பு சொன்னது:

தமிழ்மணத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.
காசிக்கும் குழுவினருக்கும் நன்றி.
தமிழ்மணம் மென்மேலும் மேன்மையுற நாம் அனைவரும் ஒத்துழைப்போம்.

திங்கள், 29.08.05, 07:51:08 Kasi சொன்னது:

நன்றி, நண்பர்களே :-)

வெள்ளி, 30.09.05, 04:38:34

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it