சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
'குரோர்பதி-2'ல் ஒரு அறிந்த முகம் - 'கலெக்டர்' பாலா

கலந்துகொண்டதோடு எதற்கும் படபடப்பு அடையாமல், சரியான பதில்களாகக் கூறவே, கிட்டத்தட்ட அந்த முழு ஒரு மணி நேரமும் அவரது கேள்விபதில் அமர்வே ஒளிபரப்பானது. நேற்றைய நிகழ்ச்சியில் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வென்றிருக்கிறார். இன்னும் அவரது அமர்வு அடுத்த வாரமும் தொடரும். அதில் அவர் இன்னும் பல மடங்கு பரிசு வென்றிருப்பார் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
பாலாவின் அனுபவங்களை நம் தமிழ் வலைப்பதிவு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகோள்விடுத்தபோது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அடுத்த வாரம் எத்தனை லட்சங்களை வென்றார் என்று பார்ப்போம். அதோடு, பாலா தன் பொது அறிவைப் பெருக்கிக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகள், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்போருக்கான ஆலோசனைகளோடு, பரிசுத்தொகையை எப்படி செலவிட எண்ணியுள்ளார் என்றும் அவரிடம் கேட்டு எழுதுகிறேன்.
மேலும் மேலும் சிகரங்களைத்தொட பாலாவுக்கு வாழ்த்துக்கள்.
படம் உதவி: http://app.indya.com/kbc2/vote_episode57.asp
பாலா எதிர்கொண்ட கேள்விகள், முன்னேறிய பாதை பற்றிய வர்ணனைக்கு: (episode57 இன்னும் வலையேறவில்லை, முன்னேற்பாடாக சுட்டியை இட்டு வைக்கிறேன்) http://kbc2.indya.com/kbc2/episode/ep.html
Published at 09:24:03, Sunday, 18.12.05