சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
பிடுங்கி நடப்பட்ட மரம்.
'ஏன் நீங்க ஊருக்குப் போக முடிவு செஞ்சீங்க?' என்று கேட்ட என் அமெரிக்கத் தோழரிடம் அருமையாக விளக்கம் கொடுப்பதாக நினைத்து ஒரு உவமை சொல்லியிருந்தேன். திருமணத்துக்கு முன்பே அமெரிக்கா வந்து, பிறகு விடுமுறையில் ஊருக்குப் போய் துணையுடன் திரும்பி, சில வருடம் ஊர்சுற்றி, பிறகு குழந்தை பெற்று பெற்றோரை அழைத்து சில மாதம் தங்களுடன் வைத்து பெருமைப்பட்டு, தனி வீடு, இரு கார்கள் என்று வளரும் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட எங்கள் அமெரிக்க வாசத்தை, 'மரத்தைப் பிடுங்கி நடுவ'தைப் போல சிரமமானது என்று சொல்லியிருந்தேன்.
அப்போதைக்கு சொல்லிவைத்திருந்ததன் உண்மையான அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்குகிறது. அதன் சொந்த மண்ணிலேயே மறுபடியும் நடப்பட்டாலும், பிடுங்கப்பட்ட மரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதன் சிரமங்களை இப்போது உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஆனால் வேண்டி ஏற்றுக்கொண்ட மாற்றமானதால் வலிமைக்குக் குறைவில்லை. இன்னும் சில வாரங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை வர இரண்டு வாரம் ஆகிவிட்டது.
குழந்தைகளின் பள்ளி ஏற்பாடுகள், அடுக்கி வைக்கப்பட்ட தூசி படிந்த பொருட்களாலான வசிப்பிடத்தை சரிப்படுத்தல், வரிசையாக வருகைதரும் நண்பர்கள்/உறவினர்கள், கார் வாங்குதல்... இவற்றோடு இரண்டு புதுமனைபுகுவிழாக்கள், இரண்டு பூப்புநன்னீராட்டுவிழாக்கள், துக்கம் விசாரிப்புகள், மருத்துவமனையில் படுத்துள்ள உறவினருக்கு ஆறுதல் என நேரம் பறக்கிறது.
இதற்கிடையில் ஒருவழியாக பி எஸ் என் எல் அகலப்பாட்டை இணையத்தொடர்பும் விண்ணப்பித்து, அதுவும் இன்று வந்துவிட்டது. இடையிடையே சில நிமிடங்கள் தமிழ்மணம் மேய்ந்ததோடு சரி. குவிந்து கிடக்கும் பல மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவும் இயலவில்லை. இனிமேல்தான் ஒவ்வொன்றாக பதில் எழுதவேண்டும். நேரம் கிடைத்தால் முந்தைய நாள் வலைப்பதிவுகள் பக்கமும் போய்ப்பார்க்கவேண்டும்.
இந்த சில வாரங்களாக தமிழ்மணம் நிர்வாகத்தை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் செல்வராஜுக்கும் மதிக்கும் நன்றிகள். அவர்கள் செய்துவிட நான் வசதி செய்துவைக்காததால் இன்னும் காத்துக்கிடக்கும் சில சிறு வேலைகளை இந்த வாரத்தில் கவனிக்க வேண்டும். அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் பொறுமைகாக்க வேண்டுகிறேன்.
அத்துடன் இந்த இடமாற்ற அனுபவங்களையும் பதிக்கவேண்டும். நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search பிடுங்கி நடப்பட்ட மரம்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
அல்வாசிட்டி.விஜய் சொன்னது:அண்ணா வணக்கோண்ணா.
ஊருக்கு வந்துவிட்டீர்களா? இன்று கூட உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். (இன்று இரண்டு தடவை தும்மியிருப்பீர்களே.) செட்டில் ஆகிறது என்பது கசப்பு மாத்திரை தான். தொடர்ந்து கலக்குங்க.
திங்கள், 13.06.05, 05:37:45 ராசா சொன்னது:ஊருக்கு வந்துட்டீங்களா???... சொல்லவே இல்லை..... ஒரு வேளை.. நீங்க சொல்லி நான் கவனிக்கலையா??.. எப்படி இருந்தாலும்... வருக வருக.. BSNL உடன் போராட வாழ்த்துக்கள்..
திங்கள், 13.06.05, 05:43:26 அல்வாசிட்டி.சம்மி சொன்னது:இருங்க அண்ணாச்சி, ஊருக்கு வரதுக்கு (நிரந்தரமாக) முன்னாடி உங்களோட இந்த பதிவ படிக்கனும் போல இருக்கே?(என்ன என்ன வேல வரும்-னு தெரிஞ்சிக்கதான்). அப்படி நேரம் கெடக்கும் போது இதபத்தி ஒரு கையடக்க குறிப்பு போடுங்க ![]()
ஊருக்கு போனதுக்கு வாழ்த்துக்கள்
திங்கள், 13.06.05, 05:48:44 ஈழநாதன் சொன்னது:காசி சொல்வதோடு நின்றுவிடாமல் செய்தும் காட்டிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.
திங்கள், 13.06.05, 06:03:11 சுந்தரவடிவேல் சொன்னது:ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்ற!
திங்கள், 13.06.05, 06:16:58 சுதர்சன் சொன்னது:வாங்க, காசி! நல்வருகை. எந்த ஊர் சென்னையா, பெங்களூரா..?
திங்கள், 13.06.05, 06:41:58 ஞானபீடம் சொன்னது:எந்நாடு சென்றார்க்கும்
தென்னாடுடைய சிவனே துணை!
வணக்கம் காசி. ரொம்ப வேளையா இருப்பீங்கேன்னுதான் புத்தகவிளையாட்டுக்கு உங்களை கூப்பிடலாமான்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். ஆனா இன்னிக்கு காலைல ஜீன் 1ந்தேதியே உங்களோட பின்னூட்டம் பார்த்தேன். ஆஹா அய்யா வேலைய(work/job) ஆரம்பிச்சிட்டாருன்னு நினைச்சுட்டிருந்தேன். அதுக்குள்ளார நீங்களே இங்க பகிர்ந்துகிட்டீங்க.
இங்க சிங்கப்பூர்லல்லாம் தேசியப்பூங்கா-ங்காரங்க நினைச்ச இடத்துல இருந்த மரத்த பிடுங்கிட்டுப் போய் இன்னொரு இடத்துல நடறாங்க... ஆனா அது தளிர்த்து வளந்துடுதே. அந்த நம்பிக்கையில நான் இருக்கேன் நீங்கவேற காசி...
முதல்ல அப்படித்தான் இருக்கும். ஆனால் சரியாய்டும் - ஊருன்னா ஊருதான் (அப்படின்னு நினைச்சுக்கோங்க![]()
திரும்பிப் போய் விட்டீர்களா?
நன்றாயிருக்க வாழ்த்துக்கள்.
வேணாவா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு கூப்பிட்டுருக்கேன்... அதையே மறந்தாச்சு ![]()
வாங்க, வாங்க...
Welcome back to India, Kasi.
திங்கள், 13.06.05, 07:12:12 iraamaki சொன்னது:வாங்க, ஊருக்கு வந்தது பற்றி மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு முறை சந்திப்போம்.
அன்புடன்,
இராம.கி.
காசி நல்வரவு!
எந்த ஊரில் இருக்கிறீர்கள்?.
//வரிசையாக வருகைதரும் நண்பர்கள்/உறவினர்கள், கார் வாங்குதல்... இவற்றோடு இரண்டு புதுமனைபுகுவிழாக்கள், இரண்டு பூப்புநன்னீராட்டுவிழாக்கள், துக்கம் விசாரிப்புகள், மருத்துவமனையில் படுத்துள்ள உறவினருக்கு ஆறுதல்//
அவ்விடம் இவ்விடம் வேறுபாட்டை இதைவிட அழகாக கூற முடியாது.
//ஒருவழியாக பி எஸ் என் எல் அகலப்பாட்டை இணையத்தொடர்பும் விண்ணப்பித்து, அதுவும்//
நான் ஏற்கனவே விண்ணப்பித்து விட்டேன். ஆனா எங்கூருக்கு வர இன்னும் நாளாகுமாம்.!
வாங்க காசி,
நல்வருகை!
காசி,
நீங்கள் இந்தியாவுக்குப் போனதில் ஏனோ இனம் புரியாத வருத்தமும், அதே நேரம் மகிழ்வும்.. ஆனால் எங்கிருந்தாலும் சிறப்பாக செய்வீர்கள் என்பதும் அறிந்ததே. உங்களுக்கு எங்கள் அன்பும் வாழ்த்துக்களும்.
திங்கள், 13.06.05, 08:08:57 chandravathanaa சொன்னது:<i>சொந்த மண்ணிலேயே மறுபடியும் நடப்பட்டாலும், பிடுங்கப்பட்ட மரம் மீண்டும் பழைய நிலைக்கு வருவதன் சிரமங்களை...</i>
காசி இதைப் பலர் உணர்வதில்லை.
உண்மை இதுதான். திரும்பிப் போய் எம்மை அங்கே பதிய வைக்கும் போதே
நிறையவே கஸ்டப் பட வேண்டியிருக்கும்.
வலிமை உண்டு என்று சொல்லும் உங்கள் நம்பிக்கையோடு வாழ்வு நல்லபடி தொடர வாழ்த்துக்கள்.
நட்புடன்
சந்திரவதனா
காசி
தாய்நாடும் தாய்வீடும் எப்போதும் சுகம் தரும் எத்தனைவிதமான இன்னல்கள் இருப்பினும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் காசி.
திங்கள், 13.06.05, 08:44:39 karthikramas சொன்னது:இந்தியா சென்றதுக்கு வாழ்த்துக்கள் . பயணம் நன்று அமைந்தது என்று நம்புகிறேன்.
வெயில் கொடுமை என்று தெரிகிறது. பிள்ளைகள் உணவு சீதோஷணம் போன்றவையும் நல்லபடி அமைய வாழ்த்துக்கள். தனி மடலிடுகிறேன்.
வாழ்த்துக்கள் காசி! அப்படியே BSNL இணைய தொடர்பு பற்றியும் விலாவாரியாக விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
திங்கள், 13.06.05, 09:09:01 மயிலாடுதுறை சிவா... சொன்னது:மனப் பூர்வமான வாழ்த்துகள் காசி,
நீங்கள் மீண்டும் தமிழகம்(?) சென்றது அளவிடாத மகிழ்ச்சி.
நல்ல வளமையான, மகிழ்ச்சியான, சுதந்திரமான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
சில சமயம் சிரமம் தான். ஆனால், வலிமை இருக்கும்போது எதையும் எதிர் கொள்ள முடியும். விரைவில் எல்லாம் இயல்நிலைக்குத் திரும்ப வாழ்த்துக்கள். ஊருக்கு வந்தால் சந்திக்க வருகிறேன்.
திங்கள், 13.06.05, 09:46:28 வாசன் ,விஜி, விஷ்ணு சொன்னது:ஆறுதலாக நேரம் கிடைக்கும் போது, கடல் வழி, தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் இந்தியாவுக்கு எடுத்துச் சென்றீர்களா என்பது பற்றியும் எழுதுங்கள்.
கூடு திரும்புதல் நல்லவகையில் அமைய எங்களது நல்வாழ்த்துகள்.
திங்கள், 13.06.05, 10:14:34 பாண்டி சொன்னது:அப்பிடியா விசயம்... எங்கே உங்களை ரொம்ப நாளா காணோமேன்னு நெனச்சேன்
திங்கள், 13.06.05, 10:33:29 நவன் பகவதி சொன்னது:உங்களை விட குழந்தைகளைக்கு கொஞ்சம் கூடுதல் சிரமமாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இயல்பு நிலைக்கு வரும் வரையில்தண்ணீர் மற்றும் உணவு விசயங்களில் கொஞ்சம் கூடதல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அடுத்து திட்டமிட்டிருக்கும் செயல்களிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
திங்கள், 13.06.05, 10:39:20 BALA சொன்னது:Kasi,
Welcome (back) to Chennai ?? Bangalore ???
enRenRum anbudan
BALA
மீண்டும் இந்தியா சென்று நிரந்தரமாக இருப்பது என்பது வேறு, விடுமுறைக்காக இந்தியா செல்வதென்பது வேறு. வாழ்க வளமுடன்.உங்களை பிடுங்கி நடப்பட்ட மரம் என்று சொல்வதை விட வேறொரு திசையில் விரும்பி பயணித்து,மீன்டும் தன் கூடுத் தேடிச் சென்ற பறவை என்று கூறலாமா.
திங்கள், 13.06.05, 11:01:56 Arun சொன்னது:Gr8 Kasi...
Nice 2 Know that you took the decision. All the best!
- Love,Arun Vaidyanathan
திங்கள், 13.06.05, 11:04:57 ராஜா சொன்னது:நல்வரவு.
திங்கள், 13.06.05, 12:22:47 Hari சொன்னது:வாழ்துக்கள் காசி!! எந்த ஊர்? சென்னை? பெங்களூர்? ஹைதராபாத்??
திங்கள், 13.06.05, 12:22:58 Kasi சொன்னது:ஆர்வத்துடன் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
1. மற்ற விஷயங்களைவிட வெயில் பெரிதாகத் தெரியவில்லை. எல்லாருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னைகள்தான்.
2. குழந்தைகள் சூழல் மாற்றத்தை எதிர்கொண்டது எதிர்பார்த்ததைவிடவும் எளிதாகவே நடந்தது. சென்ற வருடமே திட்டமிட்டதால் இது சாத்தியப்பட்டது.
3. கோவையில்தான் இப்போதைய வாசம். சென்னைக்கு சில வாரங்களில் குறுகிய பயணம் மேற்கொள்வேன். முடிந்த அளவில் வலைப்பதிவு நண்பர்களை சந்திப்பேன்.
அன்புடன்,
-காசி
விஜய்://(இன்று இரண்டு தடவை தும்மியிருப்பீர்களே.)//
அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க. வீட்டில் தூசிதட்டி தூசிதட்டி பத்து நாளா தும்மல்தான். கா.மூ.தொ. மருத்துவரிடம் சிகிச்சை நடக்கிறது. இதில் உங்க தும்மலை எப்படிப் பிரிச்சு தெரிஞ்சிக்கறதுன்னு தெரியலையே![]()
ராசா: //BSNL உடன் போராட வாழ்த்துக்கள்..// போராட்டமாத் தெரியலை. ஒரு தொடர்பு கொடுக்கறதுக்கு ஒரு பெரிய அதிகாரி, ஒரு சின்ன அதிகாரி, இரண்டு களப்பணியாளர் சகிதமாக காரில் வந்து கலக்கிவிட்டார்கள். எத்தனை விரயம்!
பொள்ளாச்சி வருவேன் பேசலாம். தொலைபேசி எண்ணை தனிமடலில் அனுப்பமுடியுமா? akaasi at gmail dot com
சம்மி: //இதபத்தி ஒரு கையடக்க குறிப்பு போடுங்க // போடுவோம்...
திங்கள், 13.06.05, 12:50:54 Kasi சொன்னது:ஈழநாதன், சுந்தரவடிவேல், சுதர்சன், ஞானபீடம்: வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்பு, உங்களுக்குத்தான் என்பேரில் எத்தனை நம்பிக்கை. என் மொத்தப் புத்தக இருப்புமே பத்தைத் தாண்டாது. (நுட்பவியல் தவிர்த்து), என்னைப் போய் மீமீக்கெல்லாம் கூப்பிட்டு...
)
மரம் துளிர்ப்பது முழுக்க நடவாத காரியமில்லைதான் என்று நினைக்கிறேன், ஆனால் அது இயல்புக்கு மாறானது என்பது உண்மைதானே!
சுரேஷ் கண்ணன்: நன்றி.
இராமகி: வணக்கம். நன்றி, ஐயா. கட்டாயம் சந்திக்க விரும்புகிறேன். தனி அஞ்சலில் தொடர்புகொள்கிறேன்.
அனுராக்://நான் ஏற்கனவே விண்ணப்பித்து விட்டேன். ஆனா எங்கூருக்கு வர இன்னும் நாளாகுமாம்.!// உங்கூர் எந்தூரு? சென்னைப்பட்டணம் தானே:s:
கண்ணன், தங்கமணி: நன்றி. தங்கமணி, வருத்தம் வேண்டாம். எங்கிருந்தாலும் நம் அனைவரின் நல்லுறவும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
திங்கள், 13.06.05, 13:05:42 Kasi சொன்னது:சந்திரவதனா: ஆமாம் இந்த புலம்-மீள்தலும் வலிக்கக்கூடியதே. ஒவ்வொருவர் சூழலைப்பொறுத்தே இதன் தேவையும் அமையும். நன்றி.
வசந்தன், பத்மா அர்விந்த், முத்து, கார்த்திக்ரமாஸ், ஜாஃபர் அலி, மயிலாடுதுறை சிவா, செல்வராஜ், வாசன் குடும்பத்தினர், பாண்டி, நவன் பகவதி, பாலா, ரவிஸ்ரீனிவாஸ், அனைவருக்கும் நன்றி.
//உங்களை பிடுங்கி நடப்பட்ட மரம் என்று சொல்வதை விட வேறொரு திசையில் விரும்பி பயணித்து,மீன்டும் தன் கூடுத் தேடிச் சென்ற பறவை என்று கூறலாமா.//
ஒற்றை ஆளாக இருக்கும் வரை பறவை உதாரணம் ஒத்துவரலாம். இப்போது மரமே சரியாக இருக்கும் என்று படுகிறது.
அருண், ராஜா, ஹரி: நன்றி.
திங்கள், 13.06.05, 13:14:36 -/இரமணி. சொன்னது:காசி,
நலமே மீள வாழப்பழகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். திரும்பி வழிகாட்டியிருக்கிறீர்கள். எனக்கும் இப்போது பார்க்கையில் இது நல்ல முடிவாகவே தென்படுகிறது. உங்கள் மனைவி, மகள் ஆகியோரை விசாரித்ததாகச் சொல்லுங்கள்.
காசி, தங்கமணி கூறியதுமாதிரி, நீங்கள் ஊர் திரும்பியது அறிந்து சற்று கவலையும் நிரம்ப மகிழ்வும் ஏற்பட்டது. சொந்தப்பூமியில் மீண்டும் வாழ்வு சிறக்க வாழ்த்து!
திங்கள், 13.06.05, 13:56:11 இராதாகிருஷ்ணன் சொன்னது:சாதாரணமாக வீடு மாறுவதென்பதே அவ்வளவு எளிதல்ல; இப்பொழுது நாடு மாறி, பழைய சூழலுக்கு மீண்டும் வந்து...எல்லாம் சரியாகிவிடும். வாழ்த்துகள் காசி!
செவ்வாய், 14.06.05, 01:13:21 contivity சொன்னது:தாயகத்தில் மீண்டும் குடியமர்ந்துபுதிய வழ்க்கையைத் தொடங்கியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் பல. புதிய அனுபவங்களை வலைப்பதியலாமே காசி.. நன்றி
செவ்வாய், 14.06.05, 09:00:47 arul சொன்னது:வாங்க, வாங்க. அப்புறம் சாவகாசமாப் பேசலாம். மொதல்ல செட்டில் ஆகுங்க.
அருள்
நான் நினைத்துப் பார்ப்பதை தங்கமணி அழகாக சொல்லியிருக்கிறார்.
வாங்க...
அன்புள்ள காசி,
இதுதானா விஷயம்? தெரியாமப் போச்சே!!!
நீங்க ஆரம்பிச்சு வச்ச 'தமிழ் மணம்' அரங்கத்துலே அரிதாரம் போடாம நாங்கெல்லாம்
ஒரேதா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா உங்களை ரொம்பநாளாக் காணமே,
அதுக்கே ஒரு பதிவு போடலாம் னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்படியும் மனசுக்குள்ளே ஒரு சந்தேகம்.
போனமுறை நீங்க கொஞ்சநாளா இந்தப் பக்கமே வராமலிருந்து, அப்புறம் திடீர்னு வந்து இந்த 'தமிழ்மணம்'
தந்தீங்க. அதுபோல இப்பவும் ஏதாவது 'பெரிய வேலை'யிலே ஈடுபட்டிருக்கீங்க 'எங்களுக்காக'ன்னு இருந்துச்சு!
ஊருக்குப் போய் செட்டில் ஆனதைப் பத்தி விரிவா எழுதுங்க. நம்ம வீட்டுலேயும் இப்ப ஒரு வாரமா
ஊருக்குப் போகறதைப் பத்தி பேச்சு கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டு இருக்கு!!!!!
நல்லா இருங்க காசி!!! குடும்பத்துலே எல்லாரையும் விசாரிச்சதாச் சொல்லுங்க.
புள்ளைங்களுக்கு எங்கள் அன்பு!!!
அன்புள்ள காசி,
உங்கள் 'ப்ளாக்'கிற்கு நான் வருவது இதுவே முதல் முறை. 'நெட்'டில் அங்கே இங்கே சுற்றி இங்கே வந்தவன், நீங்கள் இந்தியா போய் விட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்ன இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டீர்களே?!
தினந்தோறும் அளவளாவும் அளவுக்கு நாம் நெருங்கிய நட்பு பாராட்ட முடியாமல் அமெரிக்காவில் நீங்களும் நானும் ஒவ்வொரு கோடியில், வெவ்வேறு நேரங்களில் இருந்தாலும், முடிந்த போது நாம் பேசிக் கொண்டிருந்தோம், இல்லையா!
எப்படி இருந்தாலும், உங்களுக்கு நல்லது நடந்தால் எனக்குச் சந்தோஷமே. ஒரு வரி எழுதினீர்கள் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சந்தோஷப்படுவேன்.
அன்புடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
புதன், 15.06.05, 17:01:03 முகமூடி சொன்னது:புதிய நண்பர்களும் நிறைய சந்தோஷமும் கிடைக்க வாழ்த்துக்கள்.
புதன், 15.06.05, 19:21:30 M.Thevesh சொன்னது:Dear Kasi,
My best wishes for your future life in India.
Dear Kasi
My best wishes for your relocation to India. I am sure you will blog about your experiences and share with us.
Murali
KS, USA
இரமணி, டிசே, இராதா, contivity, அருள், பாபா: உங்கள் வரவேற்புக்கு நன்றி.
துளசி, விசாரிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. //நம்ம வீட்டுலேயும் இப்ப ஒரு வாரமா
ஊருக்குப் போகறதைப் பத்தி பேச்சு கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டு இருக்கு!!!!!//
நடத்துங்க. எல்லா இடத்திலயும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு, உங்களுக்கா சொல்லணும்!
எல்லே ராம், ஒரு வரி எழுதிட்டிருக்கேன். உங்க அன்புக்கு நன்றி.
முகமூடி, தவேஷ், முரளி, மற்றும் மனதால் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
ஞாயிறு, 19.06.05, 11:43:20 ஜெ. உமா மகேஸ்வரன் சொன்னது:நல்வரவு காசி !
ஞாயிறு, 19.06.05, 13:14:56 பாலா சொன்னது:அன்புள்ள காசி,
தனி மடல் அனுப்பியிருந்தேன். நேரமிருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன் பாலா
ஞாயிறு, 19.06.05, 13:15:01 பாலா சொன்னது:அன்புள்ள காசி,
தனி மடல் அனுப்பியிருந்தேன். நேரமிருக்கும்போது தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன் பாலா
ஞாயிறு, 19.06.05, 13:16:02 நாராயணன் சொன்னது:இன்றைக்கு தான் ஊர் சுற்றி திரும்பிவிட்டுப் பார்த்தேன். வாங்க வாங்க. எல்லாம் கொஞ்ச நாள் அப்புறம், நம்மூரு மாசு, ஆட்டோ தகராறு, டாஸ்மாக், கட்சி பேரணி, காயுற வெயில் எல்லாம் பழகிடும். சென்னைக்கு வந்தால் ஒரு தனிமடல் அனுப்புங்கள். சந்திப்போம்.
திங்கள், 20.06.05, 03:49:58 மஞ்சுளா சொன்னது:>>2. குழந்தைகள் சூழல் மாற்றத்தை எதிர்கொண்டது எதிர்பார்த்ததைவிடவும் எளிதாகவே நடந்தது. <<
வாழ்த்துக்கள். (இது தான் மிகவும் கஷ்டமான விஷயம் என்று நினைத்தேன்).
வாப்பா காசி !
திங்கள், 20.06.05, 10:06:19 கோபி சொன்னது:வாங்க! வாங்க! ஒரு வழியா எல்லாத்தையும் சரிகட்டி சகஜ வாழ்க்கைக்கு திரும்பியிருப்பீங்க..
வாழ்த்துக்கள்.. உங்க தொலைபேசி எண்ணை தனி மடலில் அனுப்புங்கள்
திங்கள், 20.06.05, 10:27:37 காசி சொன்னது:நன்றி உமா மகேஸ்வரன்.
பாலா, நானும் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டேதான் இருக்கிறேன். சொல்லப்போனால், இன்னும் இரண்டு பேர் செல்பேசி எண் கொடுத்தார்கள், அடித்து அடித்து ஓய்கிறது![]()
//>>2. குழந்தைகள் சூழல் மாற்றத்தை எதிர்கொண்டது எதிர்பார்த்ததைவிடவும் எளிதாகவே நடந்தது. <<
வாழ்த்துக்கள். (இது தான் மிகவும் கஷ்டமான விஷயம் என்று நினைத்தேன்).//
மஞ்சுளா, இது இயல்பாக நடக்காது. உண்மையில் இது ஒன்றே புலம் மீள்தலில் மிகப்பெரும் சவால். இதைப் புரிந்துகொண்டு சென்ற ஆண்டே ஒரு முக்கிய வேலை செய்தோம். இதைப் பற்றிப் பிறகு தனியாக எழுதுவேன்.
ரவியா: //வாப்பா காசி//. ப்ரான்சிலிருந்து எப்படி 'வாப்பா'? 'போப்பா' அல்லவோ. ஒன் நிமிட்... அப்டின்னா ரவியாவும் வந்தாச்சா? ????
கோபி. அனுப்பினேன்.
நாராயணன், ஆமாம், எல்லாம் சரியாப்போயிடும். சென்னை வரும்போது தொடர்புகொள்கிறேன்.
புதன், 22.06.05, 06:12:40 ராசா சொன்னது:இன்னும் இரண்டு பேர் செல்பேசி எண் கொடுத்தார்கள், அடித்து அடித்து ஓய்கிறது
// இன்னைக்கு 2.30 மணிக்கு கூப்பிட்டது நீங்களா?? மழைக்காக(?) ஹெல்மெட் போட்டுகிட்டு வண்டியில போயிட்டிருந்தேன், வீடு போனதும் தான் பார்த்தேன் கோவையிலிருந்து ஒரு மிஸ்டு-கால்,. நீங்கதானா??![]()
Best Wishes Kasi ! enna kashtamnaalum namma uuru namma uuruthaan illaiyaa?
enakku india thirumpippORavangkaLappaarththaa EkkamA irukkum. enakku/engkaLukku eppa vELai varuthO paarppOm. anbudan, Jayanthi Sankar
காசி, உங்கள் தொலைபேசி எண்ணை vkbmurugan at gmail dot com க்கு அனுப்புங்கள். நான் கூப்பிடுகிறேன்.
புதன், 22.06.05, 13:32:40 சங்கரய்யா சொன்னது:வாங்க, வாங்க......காசி,
புதன், 22.06.05, 23:07:57 dhrumi சொன்னது:காசி, உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த வரவேற்பைப் பார்க்கும்போது நிரம்ப சந்தோஷமாயிருக்கு. you deserve this.
என் பங்குக்கு - வாழ்த்தி வரவேற்கிறேன்.
அன்புடன்........தருமி
ஞாயிறு, 26.06.05, 11:19:32 ஜீவா சொன்னது:மரம் நன்றாய் மீண்டும் வேரூற வாழ்த்துக்கள் காசி.
திங்கள், 04.07.05, 15:47:34 காசி சொன்னது:ஜெயந்தி, சங்கரய்யா, தருமி, ஜீவா. உங்கள் வாழ்த்துக்கும், வரவேற்புக்கும் நன்றி.
செவ்வாய், 05.07.05, 07:31:08 Aruna சொன்னது:காசி, பிடுங்கி நடப்பட்ட மரத்தில் துளிர் விட ஆரம்பித்து இருக்குமே
ம்.... எழுத ஆரம்பிங்க..... நடுவதில் ஏற்பட்ட சிரமங்களை, சவால்களை நகைச்சுவை இழையோடும் உங்கள் கட்டுரை வரும் என்று எதிர்பார்க்கிறேன் ![]()
கோவை வந்தாச்சா!?
கோவையில் உள்ள(என்)உறவினர்கள் காசியை பார்த்ததில்லையே தவிர நன்கு
அறிவார்கள்!(எல்லாம் என் உபயம்தான்
)
கோவையில் எந்தப்பகுதியில் இருக்கிறீர்கள் காசி?
மீனா.
புதன், 06.07.05, 07:49:34 ரோஸாவசந்த் சொன்னது:வாழ்த்துக்கள் காசி. நான் நிலைகொள்ளும் போது தொடர்பு கொள்கிறேன்.
புதன், 06.07.05, 20:22:31 ரம்யா நாகேஸ்வரன் சொன்னது:அன்புள்ள திரு. காசி,
வணக்கம். இந்த ப்ளாகர் உலகிற்கும், தமிழ் மண குடும்பத்திற்கும் நான் சற்று புதியவள். உங்களின் இந்தச் சேவைக்கு மனமார்ந்த நன்றி.
பதிமூன்று வருடங்களாக வெளிநாட்டில் வாழும் என் போன்றவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணத்தை செயல்படுத்தியுள்ளீர்கள். அதுவும் சமீபத்தில் வந்த ஸ்வதேஸ் என்ற படத்தில் வரும் ரேஹ்மானின் பாட்டை கேட்கும் பொழுதேல்லாம் கண்ணில் நீர் துளிர்க்கிறது. சில சிறிய ப்ராட்டிகல் விஷயங்களைப் பொருட்படுத்தாமல், ஒரு பிக் பிட்சர் லெவலில் பார்த்தால் "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?"
உங்களின் இந்த முடிவு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் நிறைவையும், நிறைய சந்தோஷங்களையும் கொடுக்கட்டும் என்று வாழ்த்தும்,
ரம்யா நாகேஸ்வரன்
புதன், 06.07.05, 20:34:59 Dondu சொன்னது:அன்பு காசி,
இத்தனை நாட்களாய் காசி காசி என்று வெறுமனே வாசித்து வந்த நான் காசியை நேரில் சந்தித்து பேசிப் பேசி, யோசி, யோசி என்று பல விஷயங்களை நேற்று மாலை யோசித்ததில் தெளிவு பிறந்து, பாசி, பாசி என்று மூடிக் கிடந்த சில புரிதல் இல்லாமைகளும் விலகின. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள காசி,
கோவை பழகிவிட்டதுதானே? சென்னையில் உள்ள என் நண்பர்கள் உங்களைச் சந்தித்ததாகச் சொன்னார்கள். இடம் மற்றும்தானே மாறி இருக்கிறீர்கள், எனவே வருத்தம் வேண்டாம். தொடர்ந்து வலை பதியுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
மூர்த்தி.
Dear Kasi,
As informed yesterday evening, I will be away from Chennai and will be back only Sunday. In the meantime, I will not have access to Internet. Kindly watch my blogs for indecent comments, as already discussed. You will have a clue of the problem we discussed yesterday. It will come in handy in locating the troublemaker.
Regards,
N.Raghavan
மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
05:20:32 - திங்கள், 13.06.05 -


