சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
தமிழ் உள்ளிடும் முறை
நண்பர் அனுராக் கேட்டுக்கொண்டபடி ஒரு சிறு வாக்கெடுப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்கள் தேர்வை சொல்லி உதவுங்கள். மிக்க நன்றி.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search தமிழ் உள்ளிடும் முறை
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
sundaravadivel சொன்னது:நான் எ-கலப்பையில் தட்டச்சி உள்ளிடுகிறேன். இது எந்த வகையைச் சேர்ந்தது? ரோமனா?
இன்னும் வாக்களிக்கவில்லை.
நான் எ-கலப்பையை பயன்படுத்துகிறேன்.
திங்கள், 09.05.05, 22:22:31 துளசி கோபால் சொன்னது:நான் எ-கலப்பையை பயன்படுத்துகிறேன். இது 'ரோமன்' என்று நினைத்து வாக்குப்பதிவு
செய்துள்ளேன்.
நீங்கள் எ-கலப்பை பயன்படுத்தினால் அது ரோமன் முறைதான்....(என்று நினைக்கிறேன்![]()
தெளிய லேது
திங்கள், 09.05.05, 23:04:31 பத்ரி சொன்னது:எ-கலப்பையில் தமிழ்நெட்99 முறையைச் சேர்க்கவேண்டுமென்று பலர் - முக்கியமாக ஹரி - கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்பொழுதைக்கு எ-கலப்பையில் இருப்பது ரோமன் எழுத்துகளின் ஒலி வழியாக உள்ளிடுவதுதான்.
திங்கள், 09.05.05, 23:48:17 karthikramas சொன்னது:அன்புள்ள நண்பர்களே என்றால் , இப்படி வம்புள்ள நண்பர்கள் , 'நான் அடிப்பது எந்த முறை' என்று காசியிடமே கேட்டால் எப்படி?
நான் அடிப்பது கமண்டுக்கு பெரும்பாலும் சுரதா . பதிவுக்கு இ-கலப்பை.
ஆனால் இதற்கு முன், முரசுவின் மேல் ஒரு இனம் புரியாத காதல் இருந்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். என் ஓட்டு ரோமனுக்கே.
nammudhu e-kalappai thaanga.
செவ்வாய், 10.05.05, 00:18:48 ராதா சொன்னது:கலப்பையில் தட்டச்சு முறை இல்லாததால் 'மைக்ரோசாப்ட் கீபோர்ட் லே-அவுட் கிரியேட்டரை'க் கொண்டு செய்த தட்டச்சு முறையைப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன்.
எப்போதாவது கலப்பையும்.
எ-கலப்பையும், குறலள் செயலியும் பாவிக்கிறேன். இவைகள் எந்த இனத்தைச் சேர்ந்ததோ அதற்குத் தாங்களேஎன் சார்பாக வாக்களிக்க வேண்டுகிறேன்.
செவ்வாய், 10.05.05, 02:08:27 anurag சொன்னது:எ கலப்பையில் (eKalappai20b) tamil99uni, Tamil99tsc உள்ளன. பிற எல்லா வகை விசைப்பலகை முறைகளும் கலப்பையில் உண்டு. ஏற்கனவே பதிவிறக்கிய கலப்பையில் ஏதாவது ஒன்று தான் காணப்படும். தேவையானதை தேர்வு செய்து பதிவிறக்கிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய், 10.05.05, 02:37:13 anurag சொன்னது:விசைப்பலகை முறைகள் பற்றிய குழப்பம் நிறையப் பேரிடம் இருக்கிறது என்று தோன்றுகிறது. எகலப்பை என்றாலே ரோமன் அல்ல விசைப்பலகை மாதிரிகளுடன் ஒரு பதிவை (சில நாட்களாக டயல் அப் இணைப்பில் குழப்பம். எல்லாம் சரியாக இருந்தால்) இன்றிரவு இடுகிறேன்.
//எ-கலப்பையும், குறலள் செயலியும் பாவிக்கிறேன்// குறள் செயலியில் ஒலியியல்(ரோமன்), தமிழ்99, புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு முறைகள் உண்டு இதில் நீங்கள் எதைப் பாவித்து தட்டச்சு செய்கிறீர்கள்?
செவ்வாய், 10.05.05, 02:50:27 Ismail Kani சொன்னது:எ-கலப்பையும், குறள் செயலியும் பாவிக்கிறேன். ஒலியியல் விசைப்பலகை பயன் படுத்துகிறேன்.
=இஸ்மாயில் கனி
செவ்வாய், 10.05.05, 03:10:56 anurag சொன்னது:கணித்தமிழ் தட்டச்சு முறைகள் பற்றிய விரிவானதொரு கட்டுரை எழுத உத்தேசித்திருந்தேன். அதற்கு காசியின் பதிவில் உள்ள வாக்கெடுப்பும் உதவக்கூடும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தட்டச்சுச் செயலிகளுக்கும் தட்டச்சு முறைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்தே பலரும் உணர்ந்திருக்கவில்லை என்று அறியமுடிந்தது.
முரசு, எ-கலப்பை, குறள் செயலி என்பவை தமிழை கணினியில் எழுத உதவும் கருவிகள்.
முரசு ஒரு இணைய செயலி. பல உள்ளமைந்த எழுத்துருக்களைக் கொண்டது. வேறுபட்ட பல எழுத்துருக்களைக் கொண்ட பல இணைய தளங்களை இவற்றின் உதவியால் வாசிக்க முடியும். முரசு அஞ்சல் (Murasu Anjal 2000-second edition-version 9.5.2) உதவியால் Anjal keyboard, Tamil99 keyboard, TamilNet97 keyboard, Mylai keyboard, New Typewriter keyboard, Old Typewriter keyboard, Anjal Indic keyboard, Murasu-6 keyboard ஆகிய 8 தட்டச்சு முறைகள் மூலம் கணினியில் தட்டச்சு செய்ய முடியும்.
எ-கலப்பை என்பது முரசுவைப்போல முழுமையான செயலி அல்ல. அது விசைப்பலகைக்கான driver எனப்படும் இயக்கி. இதைப்பயன்படுத்தி எல்லா வகையான பிற செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். இதன் மூலம் பல தட்டச்சு முறைகளில் தட்டச்ச முடியும் என்றாலும், தேவையான தட்டச்சு முறையில் அமைந்த e-kalappai driver-ஐ தனித்தனியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும்.
குறள் செயலியும் பல பயன்பாடுகள் இணைந்த செயலி. இதன் புதிய பதிப்பில் தமிழ் குரல் வழி வாசிப்பானும் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. குறள் செயலி மூலம் ஒலியியல்(ரோமன்), தமிழ்99, புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு ஆகிய 4 முறைகளில் தட்டச்ச முடியும்.
இவை தவிர வலைப்பதிவுகளில் அதிகமாகப் பயன்படும் சுரதாவின் செயலிகளில் ரோமன் எனப்படும் ஒலியியல் முறையும் பழைய தட்டச்சு முறைகளில் ஒன்றான பாமினியும் தட்டச்ச பயன்படுத்தப் படுகின்றன.
செவ்வாய், 10.05.05, 06:03:19 anurag சொன்னது:(தொடர்ச்சி...)
தட்டச்சும் கருவி எதுவாக இருப்பினும் தட்டச்ச நமக்கு வசதியான முறையைத் தேர்ந்து கொள்ள முடியும். அந்த முறை எது என்பது பற்றிய தெளிவு முக்கியத்தேவை.
தட்டச்சுக் கருவியில் தட்டச்சு முறைகளைப் பயின்றவர்களுக்கு வேகமாகத் தட்டச்ச முடியும். அவர்களுக்காக தட்டச்சு விசைப்பலகை அமைப்புத் தேவை. புதிதாகக் கற்றவர்களுக்கு புதிய தட்டச்சு முறையும் பழையவர்களுக்கு பழைய தட்டச்சு முறையோ பாமினியோ தேவை.
தட்டச்சுக் கற்காதவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பிலேயே தமிழில் எழுதும் ரோமன் முறை பயன்படும். (உதாரணம்: ammaa= அம்மா, thamizh= தமிழ்)
புதிதாகக் கணினியிலேயே தமிழை தட்டச்ச கற்பவர்களுக்கு தமிழ்99 முறை எளிமையானது. shift பயன்படுத்தாமலேயே நேரடியாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் எழுத முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். ஸஷஜஹக்ஷஸ்ரீ ஆகிய எழுத்துக்களுக்காக மட்டுமே shift பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாகச் சில வேறுபாடுகள்:
ரோமன்- asdfg=அச்ட்fக், ழ=zha (இசட்+எச்+எ=ழ)
தமிழ்99- asdfg=அஇஉஃஎ, ழ=/ ('பார்' குறியீடு=ழ)
பாமினி- asdfg=யளனகப, ழ=o (சிறிய 'ஓ'=ழ)
தட்டச்சு- asdfg=யளனகப, ழ=H (பெரிய 'எச்'=ழ)
இந்த அடிப்படையில் உங்கள் தட்டச்சுமுறை எது என்பதை அறிந்து இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்கவும்.
செவ்வாய், 10.05.05, 06:06:19 anurag சொன்னது:எ-கலப்பை பதிவிறக்க முகவரிகள்:
அஞ்சால்/ரோமன்/பொனடிக்/ஒலியியல்
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3...
பாமினி(பழைய தட்டச்சு)
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=4...
தமிழ்99
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5...
செவ்வாய், 10.05.05, 06:36:28 M. Sundaramoorthy சொன்னது:ஈ-கலப்பையில் 'ந' வருவதில்லை. எப்போதும் 'ன' தான் வருகிறது (இது எனக்கு மட்டும்தானா? இன்னொரு கணினியில் 'இ' எழுத்துக்கு 'p' மாதிரி எதோ ஒன்று வரும்). இதற்காகவே முரசில் அடித்து, வெட்டி சுரதாவில் ஒட்டி Unicodeக்கு மாற்றி... இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டியிருக்கிறது ஒவ்வொரு முறையும்.
செவ்வாய், 10.05.05, 07:01:34 காசி சொன்னது:அப்பாடா, அனுராக் வந்து விளக்கிவிட்டார். எனக்கு பல தட்டச்சு முறைகள் இருப்பது தெரிந்தாலும் வேறுபாடுகள் தெரியாது. ஒருவிரல் காசிராவ் தானே
நான் even while not Rome, am a Roman ![]()
சுந்தரமூர்த்தி, ந வருவதற்கு wa அடிக்கவேண்டும்.. ஒலிப்பியல் முரண்தான், என்ன செய்ய பலகையில் உள்ளதை வைத்து செய்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் நன்றி. கேள்விகளுக்கு ஆண்டவன், ஹிஹி அனுராக் பதிலளிப்பார். இந்தத் தருமியின் வேலை முடிந்தது.
செவ்வாய், 10.05.05, 07:20:26 சுந்தரவடிவேல் சொன்னது:விளக்கத்துக்கு நன்றி அனுராக். நான் ரோமன்னு வாக்களிக்கிறேன்.
செவ்வாய், 10.05.05, 09:32:10 -/பெயரிலி. சொன்னது:நான் 'அஞ்சல்' முறைதான்.
(அதற்கு ரோமன் என்று கூறுவது பொருந்தாது என்று நினைக்கிறேன்)
சுந்தரமூர்த்தி, 'ந' இனைப் பெறுவதற்கு, நீங்கள் wa இனை அடிக்கலாம் அல்லது n-a இனையும் அடிக்கலாம்.
செவ்வாய், 10.05.05, 10:53:37 anurag சொன்னது:நன்றி காசி: ஆனாலும் ஆண்டவன் கொஞ்சம் அதிகம் தான்.
பெயரிலி: முரசுவில் உள்ள அஞ்சல் விசைப்பலகை முறையை அடித்துப் பார்த்த போது சுரதாவின் ரோமன் முறையை ஒத்தே இருந்தது. எனவேதான் அஞ்சால்/ரோமன்/பொனடிக்/ஒலியியல் என்று குறிப்பிட்டேன். வேறுபாடுகள் இருந்தால் தெரிவியுங்கள்.
சுந்தரமூர்த்தி: முரசுவின் Murasu Anjal 2000-second edition-version 9.5.2 பதிப்பு உள்ளதா? அது இயக்கத்தில் உள்ளபோது தானாகவே Notepad-ல் +Murasu என்ற சுட்டியை சேர்த்துவிடும். அதைச்சுட்ட விரியும் பட்டியலில் set keyboard பகுதியில் அஞ்சல் விசைப்பலகையை (அல்லது விருப்பமான வேறு விசைப்பலகையை) தேர்வு செய்து set encoding பகுதியில் யுனிகோட் தமிழ் தேர்வு செய்தால் நேரடியாக யூனிகோடில் அடிக்கலாம். தமிழ்/ஆங்கில மாற்றத்துக்கு F12.
ராதா: எ-கலப்பையில் இப்போதைக்கு அஞ்சால், பாமினி, தமிழ்99 விசைப்பலகை முறைகள் உள்ளன. விரைவில் தட்டச்சு விசைப்பலகை முறையில் எ-கலப்பை வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தட்டச்சு முறைக்கு இப்போது குறள் செயலியைப் பயன் படுத்தலாம்.
பெரும்பாலானவர்கள் எ-கலப்பையின் popular பதிப்பான அஞ்சால் விசைப்பலகை தான் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதனால் எ-கலப்பை என்றாலே ரோமன் முறை என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பத்ரியும் அவ்வாறே எழுதியது ஆச்சரியமளிக்கிறது. கலப்பையில் தமிழ்99 ஏற்கனவே இருக்கிறது.
மற்ற நண்பர்களுக்கும் மேலுள்ள விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
அப்புறம் 'வேறு' என்ற பிரிவுக்கு வாக்களித்தவர்கள் அது என்ன என்று மறுமொழியில் கூறுவது பயனுள்ளதாக இருக்கும்.
அனுராக் : அருமையான விளக்கங்கள். இதனை மன்றத்திலோ விக்கியிலோ ஒட்டிவிட்டால் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விருக்கும். லினக்ஸ் இயங்குதளத்தில் இவற்றின் நிலை என்ன ?
புதன், 11.05.05, 06:17:49 anurag சொன்னது:லினக்சுக்கு மாற வேண்டுமென்று ரொம்ப நாளா விருப்பம். அதற்காகவே வன்தட்டை சின்னச்சின்னதா பாகம் பிரிச்சும் வச்சிருக்கேன். ஆனால் இன்னும் தட்டு வந்து சேரவில்லை. இப்போதைக்கு லினக்ஸ் பத்தி அறிவு பூச்சியம்.
எ-கலப்பை லினக்சுக்கான பதிப்பும் இருக்கும் என்று நினைக்கிறேன். லினக்ஸ் நண்பர்கள் தெளிவாகச் சொல்லுங்க....
மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. காசி அண்ணா.
நான் பாமினி எழுத்துருவில் பழக்கப்பட்டவன். ஆனால் அவ்வாறு பாமினி எழுத்துருமுறையில் தட்டெழுதும்போது அதே எழுத்துருவில் கீபோட்டில் உள்ள குறியீடுகளை ( %, @, $, ,)
பயன்படுத்தமுடியாது. அதனால் .தமிழம் என்ற பெயரில் புதிய தட்டெழுதும் முறையை பிரேரித்தேன். அதன்படி பாமினி எழுத்துருவுடன் 80 வீதம் ஒத்துபோக கூடிய வடிவமைப்பு அது. வழமைபோலவே தமிழுக்கு உள்ள சாபக்கேடு போல பலரின் எதிர்ப்பையும் சிலரின் ஆதரவையும் பெற்றது.
எப்படி என்றாலும் ரோமன், பாமின், தமிழ்99 தவிர புதியதாய் ஒன்றுவேண்டும்.
புதன், 11.05.05, 21:46:30 anurag சொன்னது:/எப்படி என்றாலும் ரோமன், பாமின், தமிழ்99 தவிர புதியதாய் ஒன்றுவேண்டும்.//
தமிழ்வாணன் மிகச்சரி.
//நான் பாமினி எழுத்துருவில் பழக்கப்பட்டவன். ஆனால் அவ்வாறு பாமினி எழுத்துருமுறையில் தட்டெழுதும்போது...//
இங்கும் நீங்கள் பாமினி எழுத்துரு என்று குறிப்பிடுவது பாமினி தட்டச்சு முறையைத்தானே? (ஆவாரங்கால், லதா, அமுதம், இணைமதி, தேனீ போல பாமினி என்றொரு எழுத்துருவும் உண்டு!).
காசி: வாக்கெடுப்பு அவ்வளவுதானா? நம் வலைப் பதிவர்கள் கணித்தமிழ் தொடர்பான விதயங்களுக்குத் தரும் ஆதரவு புல்லரிக்க வைக்கிறது.
அடுத்து செக்ஸ் கல்வி அவசியமா? இல்லையா?
சந்திரமுகியில் யார் நடிப்பு டாப்? ரஜினி, ஜோதிகா, நயன்தாரா என்ற வாக்கெடுப்புகளை நடத்தவும்.
உணர்ச்சிவசப்படாதீங்க... அனுராக் - ஒண்ணும் ஆகப்போறதில்லை![]()
பேசாமா நீங்க சொன்னமாதிரி அடுத்த ஓட்டுப்பதிவுகளை ஆரம்பிங்க...
அங்க பாருங்க எவ்ளோ ஆவலா காத்திருக்காங்க... ஜோதிகாவுக்கு ஓட்டுப்போட...
நான் அஞ்சால்/ரோமன்/பொனடிக்/ஒலியியல் முறையைப் பயன்படுத்துகிறேன். வேறுமுறையை இத்தனை சதவீதம்பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
வியாழன், 12.05.05, 20:08:18 முத்து சொன்னது:///உணர்ச்சிவசப்படாதீங்க... அனுராக் - ஒண்ணும் ஆகப்போறதில்லை![]()
பேசாமா நீங்க சொன்னமாதிரி அடுத்த ஓட்டுப்பதிவுகளை ஆரம்பிங்க...
அங்க பாருங்க எவ்ளோ ஆவலா காத்திருக்காங்க... ஜோதிகாவுக்கு ஓட்டுப்போட...///
அன்பு,
...காங்கவா? ..கோமா ? ![]()
முத்து,
...கோம்-தான்.
...காங்க - டைப்போ![]()
அனுராக், எ-கலப்பை - அஞ்சால்-முறைக்கும், ரோமன் முறைக்கும் என்ன வேறுபாடு? I thought, when we use the phonotic-typing to produce tamil characters was ROMAN method? But you was saying that E-Kalappai uses "Anjal". I am confused now. I also derived to this conclusion, based on the character mapping that you have specified in your earlier post - posted on செவ்வாய், 10.05.05, 06:06:19
Can you specify the difference between ROMAN and Anjal?
செவ்வாய், 17.05.05, 17:09:03 anurag சொன்னது:அஞ்சால்/ரோமன்/பொனடிக்/ஒலியியல் இவை அனைத்துமே அடிப்படையில் ஆங்கில உச்சரிப்பு முறையில் தமிழை தட்டச்சு செய்யும் முறைகள் தான். ஒவ்வொரு செயலிகளின் தயாரிப்பாளரும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
செவ்வாய், 17.05.05, 22:03:47மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
21:51:27 - திங்கள், 09.05.05 -


