சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

தேவை: தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை

கேபிள் டிவியை நெறிமுறைப்படுத்த அரசு சில ஆணைகளை இட்டதுபோல, (அதாவது தூர்தர்சன் அலைவரிசைகள் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதுபோல) உலாவிமையங்கள் அனைத்திலும் தமிழ் எழுத்துருக்கள், தட்டச்சு செலுத்திகள் இருக்கவேண்டும்என்ற ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்.

இதற்காக எ-கலப்பை, அழகி, குறள் போன்ற செலுத்திகள் தயாரிப்பாளர்களை தங்கள் தயாரிப்புகளில் சிலவற்றை பொதுப் பயனுக்கென அளிக்க விருப்பம் இருப்பின் அதைக் குறிப்பிட்டு அறிவிக்கச்சொல்லி, அரசுப்பட்டியலில் சேர்க்கலாம். உலாவிமையங்கள் இந்தப் பட்டியலில் இருக்கும் ஒன்றையாவது நிறுவியிருக்கவேண்டும் என்றும், அரசு பொதுப்பயனுக்கு அறிவித்த யுனிகோடு எழுத்துருக்களும் நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஆணையிடவேண்டும்.

 

காசி - clock 10:11:31 - புதன், 20.04.05 - பொது - 3865x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search தேவை தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

Mathy Kandasamy சொன்னது:

உண்மை! உண்மை!! உண்மை!!!

-மதி

புதன், 20.04.05, 10:30:53 karthikramas சொன்னது:

//ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்.// ஆமாம்!!!

புதன், 20.04.05, 10:39:20 சங்கரய்யா சொன்னது:

நல்ல யோசனை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

புதன், 20.04.05, 10:57:57 பாலாஜி சுப்ரா சொன்னது:

>>உலாவிமையங்கள் அனைத்திலும் ---
இந்தியா நெடுகவா அல்லது தமிழகம் மட்டுமா?

இந்த மாதிரி ஆணைகளால் பயன் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனால், சென்னையில் பெரும்பாலானவர்கள், தூர்தர்ஷன் பார்ப்பது --- கிரிக்கெட் ஒளிபரப்பின் போது மட்டுமே. (சுமங்கலி கேபிளின் மூலம் ஈ.எஸ்.பி.என்/ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடைப்பதில் ஏதோ தகராறு!).

தானாகக் கனிய வேண்டிய பழத்தை தடியைக் கொண்டு அடித்தாவது... ;-)

புதன், 20.04.05, 10:58:16 Kasi சொன்னது:

//>>உலாவிமையங்கள் அனைத்திலும் ---
இந்தியா நெடுகவா அல்லது தமிழகம் மட்டுமா?//

குதர்க்கவாதம்!

//தானாகக் கனிய வேண்டிய பழத்தை தடியைக் கொண்டு அடித்தாவது... //

'ஒவ்வொருவர் வீட்டுக்கணினியிலும் தமிழ் மென்பொருள் இருக்கவேன்டும்' என்று சொன்னால் நீங்கள் சொல்வது சரியான உதாரணம். ஆனால் பொதுவான பயனுக்கு இருக்கும் இடத்தில் தேவை இருந்தும் பயன்படுத்த முடியாததாக இருக்கிறதே, இது எப்படி தடியால் அடிப்பதாகும்?

இப்படி ஊருக்கு ஒருத்தர் போதும், உருப்பட்டுவிடும்!

புதன், 20.04.05, 11:10:41 பாலாஜி சுப்ரா சொன்னது:

நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஆணையிடுவது தமிழ் செம்மொழி என்பது போலத் தோன்றியது. செம்மொழி அறிவிப்பிலாவது எதற்காக செய்திருக்கிறார்கள், எப்படி மாற்றங்கள் வரும் என்று அடுத்த கட்ட திட்டங்களை விவரித்தார்கள். இந்த ஆணையால் எப்படி பலன் வரும், இதன் அடுத்த கட்டங்கள் என்ன என்று எனக்கு விளங்கவில்லை.

புதன், 20.04.05, 11:20:22 Kasi சொன்னது:

பாபா,
உங்களுக்கு விளங்காமலேயே இருக்கக் கடவது.

மறுமொழிந்த மதி, கார்த்திக்ராமஸ், சங்கரய்யாவுக்கு நன்றி.
அரசுக்கு எதாவது விண்ணப்பம் அனுப்பலாமா? என்ன வழி?

புதன், 20.04.05, 11:26:42 பாண்டி சொன்னது:

//ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்//

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!!!

புதன், 20.04.05, 11:36:20 karthikramas சொன்னது:

http://www.tn.gov.in/department/allsecy.htm#Tamil%20Development%20-%20Culture%20&%20Religious%20Endowments...

புதன், 20.04.05, 11:48:09 karthikramas சொன்னது:

மேலே நான் கொடுத்த இணைப்பில் தமிழக அரசு செயலர்களின் தொடர்பு விவரங்கள் உள்ளது.

1. கணிக்கடிதமாக அல்லது கணிவிண்ணப்பமாய் அனுப்பலாம்.
2. அல்லது பேப்பரில் அச்சிட்டு அனுப்பலாம்{கையெழுத்துடன்).

முதன்மை செயலர், தமிழ் முன்னேற்ற அமைச்சகம் ,தகவல் தொடர்பு, கிராமப்புற வளர்ச்சி, ஆகிய நைத்து துறைகளுக்கும் வின்னப்பததை அனுப்பலாம். முதலமைச்சருக்கும் கூட.

இது ஒரு பொது நல விண்ணப்பம். விண்ணப்ப வரைவு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்

புதன், 20.04.05, 11:52:41 karthikramas சொன்னது:

ஓஓஓஓஓஓஒ

புதன், 20.04.05, 12:02:53 karthikramas சொன்னது:

//இந்த ஆணையால் எப்படி பலன் வரும்,//
பாபா கொஞ்சம் லூஸ்ல விடுங்க , டென்சன் ஆவாதீங்க. தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தமிழ் மட்டுமே தெரிந்த இன்னொருவருக்கு இ-மெயில் அனுப்புவது என்பதிலிருந்து தொடங்கும். இதற்கு ஆங்கிலம் தெரிந்த ப்ரெளசிங் சென்டர் நிர்வகி உதவி செய்வார் :P; போதுமா ?

புதன், 20.04.05, 12:07:02 Aruna சொன்னது:

அட, யக்ஞாவின் பதிவில் நான் எழுதியிருந்ததைப் படிச்சிட்டீங்களா காசி ? :-)

Aruna

புதன், 20.04.05, 12:12:25 Aruna சொன்னது:

மன்னிக்கவும். கொஞ்சம் தாமதமாக வந்த யோசனை.
கார்த்திக்ராம்ஸ் சொன்னதின் பேரில் வந்த எண்ணம் இது. தமிழ் மணத்தின் 479 பேர் கையெழுத்திட்ட - Firefox ல் பூச்சி பற்றி ஒரு கையெழுத்து வேட்டை இருந்ததே, அதுபோல் - கடிதம் ஒன்றை அனுப்பலாம்.

புதன், 20.04.05, 12:21:50 -/பெயரிலி. சொன்னது:

/உலாவிமையங்கள் அனைத்திலும் தமிழ் எழுத்துருக்கள், தட்டச்சு செலுத்திகள் இருக்கவேண்டும்என்ற ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்./

உதுக்கெல்லாம்போய் அரசிட்டையோ அரசியிட்டையோ கேட்டாச் சரிவராது; சரிக்குத்தான் வாரும். எங்கட ஐயா தாஸையும் அண்ணை வளவனையும் மூன்றாம்தமிழ்ப்படையோடு போய் ரெண்டு வலைமையங்களுக்கு முன்னால மூண்டு மையத்து விழச் செய்யிற விதத்தில உசார் கிளப்பிவிட்டால், எல்லாஞ் சரிவரும் கண்டியளோ?

புதன், 20.04.05, 12:27:13 prakash சொன்னது:

பெரியோர்களேங்... தாய்மார்களேங்....

இ·து நல்ல யோசனை. ஆனால்.....ஆரம்பத்துலேயே அஸ்து பாடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு விஷயத்தை, அரசாங்கத்திடம் சொல்லவேண்டும் என்றால், முதலில் அது ஒரு லெட்டர் பேடிலே எழுதப்பட்டிருக்க வேண்டும். தனியாள் குரலுக்கு எல்லாம் மதிப்பு கிடையாது. [அடச்சே...இன்னுமா தமிழ்நாடு அப்படியே இருக்கிறது என்ற சலிப்பை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். ]

அரசாங்கத்தை விடுங்கள்...இன்றைக்கு தமிழகம் முழுதும் பரவலாக வாசிக்கப்படும் ஒரு நாளிதழ் ' தி ஹிந்து'. [ தி ஹிந்து நல்ல பத்திரிக்கையா அல்லது கெட்ட பத்திரிக்கையா என்பதையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ) அதிலே, engagements என்று ஒரு பகுதி தினமும் வெளியாகும். நகரத்தில் நடக்கிற சமூக/இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரக் குறிப்புகள், தினமும் வெளியாகும், பைசா செலவில்லாமல். சென்ற வாரம் நடந்த வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றிய அறிவிப்பை அங்கே வரச் செய்யலாம் என்று நினைத்து தொலைபேசினேன். " அதுக்கென்ன சார், போட்ருவோம், உங்க லெட்டர் ஹெட்ல, எங்களுக்கு லட்டர் போடுங்க, நிகழ்ச்சி நடக்கிற அன்னிக்கு பப்ளிஷ் பண்ணுவோம்,......, ஆமா உங்க அமைப்பு அரசாங்கத்தில் பதிவு பெற்ற அமைப்புத்தானே? " என்று கேட்டார்.

அமைப்பா? கிளிஞ்சுது கிருஷ்ணகிரி... :-)

பிறகு பத்ரியிடம் இதைப்பற்றி பேசிய போது, " பேசாம, தமிழ் வலைப்பதிவாளர் சங்கம், பிராக்கெட்லே unregistered ன்னு போட்டு. லேசர் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பிடு : என்று கேஷ¤வலாகச் சொர். நான் செய்யவில்லை.

(...contd)

புதன், 20.04.05, 13:48:16 prakash சொன்னது:

(...contd)

எதுக்குச் சொல்கிறேன் என்றால், அரசாங்கத்திடம் நாம் முறையிடுகிறோம் என்று சொன்னால், சொல்பவர்களுடைய கிரெடிபிலிட்டி என்ன என்று பார்ப்பார்கள். ஈமெயிலில் வருகிற கடிதத்தை, பிரிண்ட் அவுட் எடுத்து, அதிலே அட்டெஸ்டேஷன் வாங்கி வரச் சொல்லுகிற மாநிலம் இது. ( சிரிக்காதீங்க... ). அதனால், ஈமெயில் கையெழுத்து வேட்டை எல்லாம் இங்கே நடக்காது. தனியாளாகப் போய்ப் பார்த்தாலும், மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளையை பார்ப்பது போல் தான் பார்ப்பார்கள். பொதுமக்களிடையே ஒரு விஷயம் பரவலானால் தான், அது அரசாங்கத்தின் கவனத்தைப் பெறும். கணியை உபயோகிக்கும் மக்களிடம், முதலில் தமிழில் இது போல விவகாரங்கள், தமிழ் நிரலிகள் இருக்கின்றன என்று தெரிய வேண்டும். எப்படி?

சின்ன ·ப்ளாஷ்பேக்,

சென்ற வருடம் ( 2003 இறுதியிலே ) முகுந்தராஜ், சென்னை வந்திருந்த போது, என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இணையத்தில் தமிழின் வளர்ச்சி பற்றி எனக்கு அப்போது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகத்தான் தெரியும். அவருடன் சுமார் மூன்று மணிநேரம் பேசிக் கொண்டிருந்ததில்., என்ன மாதிரியான தன்னார்வலர்கள் இந்த thankless job இலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்று பிரமிப்பாக இருந்தது. கிட்டதட்ட நரம்புகள் முறுக்கேறின. நாமும் இதிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் வெறி வந்தாலும், என்னுடைய ஆதிகாலத்து பேசிக் பாஸ்கல் கோபால் அறிவு இதற்கு பயன்படாது என்று புரிந்து விட்டது. ஆகவே, இதை பிரபலப்படுத்தியாவது நம்முடைய கடமையை ஆற்றவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, பத்ரி மூலமாக தமிழா உலாவி, ஈகலப்பை உள்ளிட்ட நிரலிகளின் குறுவட்டு எனக்குக் கிடைத்தது.

(to be contd)

புதன், 20.04.05, 13:51:34 prakash சொன்னது:

(..contd)

என்னுடைய computer vendor ஐ அழைத்து, அவரிடம், அந்த குறுவட்டின் பத்துப் பிரதிகளை கொடுத்து, உங்களிடம் கணி வாங்குபவர்கள் அனைவரிடமும், இதை, இலவசமாக இன்ஸ்டால் செய்துவிடுங்கள். அதை உபயோகிப்பதில் ஏதேனும் சந்தேகம் வந்தால், என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று சொன்னேன். அவரும் செய்தார். என்னுடயை இல்லத்துக்கு அருகாமையில் இருக்கும் பிரவுசிங் மையங்கள் இரண்டிலும், இந்த ஈகலப்பை, முரசு போன்றவற்றை இன்ஸ்டால் செய்து விட்டு வந்தேன். அவை இன்ரும் இருக்கின்றன. ஆனால், இந்தக் காரியத்தை, முழு அளவில் செய்வத்ற்கு உரிய ரிசோர்ஸ்கள், unfortunately என்னிடம் இல்லை. சின்ன சின்னதான யோசனைகளை, பெரிய அளவிலே எப்படிச் செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம்.

பொது ஊடகங்களில், நம்முடைய முயற்சிகள் பற்றிய செய்திகள் ஏதும் வராமல்., இதனை தனிப் பட்ட குழுவாக அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றால், business opportunity க்காகத்தான், ·பாரீன்லேந்து ஒரு குழு வந்து நம்மை தொந்தரவு கொடுக்கிறது என்று அவர்கள் நினைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

தமிழ் கணிமை பற்றி, அரசாங்கத்துக்கு ஒரு பாலிசி வேண்டும். வாஸ்தவம். பிரவுசிங் மையங்களில், தமிழ் புழங்கவேண்டும். அதற்கு அரசு சட்டம் போடவேண்டும். அதுவும் அவசியம். அதற்கு முதலில், நாமும், நம்முடைய முயற்சிகளும் கொஞ்சமாவது வெளியே தெரியவேண்டும். திடுதிப்பென்று போய், சட்டம் போடு என்று சொன்னால், போடா வெண்ணே என்பார்கள்.

தமிழ் ·பையர்·பாக்ஸ் விவகாரம் வெடித்த முந்தாநாளில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன், உணர்ச்சி வசப்படாமல், யோசிக்கணும், இந்த விவகாரத்தை, கருணாநிதி, திமுக, மாறன் என்று அரசியல் ஆக்கக் கூடாது என்று.. அதையே தான் இங்கும் சொல்கிறேன். கையெழ்த்து வேட்டை எல்லாம் ஆகாது. நேரிலே போய் பார்த்து பேசி, செய்ய வேண்டிய வேலை.

நம்முடைய இணையத்தமிழ் முயற்சிகள் குறித்து, பாப்புலரான ஒரு ஊடகத்தில், விரைவில் பாசிட்டிவாக செய்திகள் வரப்போகின்றன என்று காத்து வாக்கிலே சேதி வந்தது. முதலில் வரட்டும். ஊதி ஊதிப் பெருசாக்கலாம். logistics அடிப்படையிலே, இந்த முயற்சிகளுக்கு, நான் கொஞ்சமாவது உபயோகமாக இருப்பேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்
பிரகாஷ்

புதன், 20.04.05, 13:52:37 ravi srinivas சொன்னது:

one way to go about is to send a suggestion signed by tamil nris and others interested in tamil computing, with a report on the software that should be available in all educational institutions using computers and browsing centres and list of software that may be provided as an option.The govt. may not have power to force this but can make it a part of the policy to promote tamil computing. Creating awareness among users is very important.so if there is a column in a popular magazine or daily on tamil computing it will reach many users who may not be aware or releuctant to try because of
doubts and questions

புதன், 20.04.05, 14:08:13 காசி சொன்னது:

பிரகாசர்;-) சொல்வதில் எனக்கு பெருமளவுக்கு உடன்பாடு. எ-மெயிலில் பெட்டிஷன் போடுவதெல்லாம் ஒரு டெலிட் பட்டனுக்கு வேலை அவ்வளவுதான்.

அரசியலை அரசியலால் வெல்ல முடியுமா? டெல்லிக்கூட்டணி சி-டாக்கை வைத்து பெயர் வாங்கினால், அம்மா அரசு இதைவைத்துப் பெயர் வாங்க வாய்ப்பிருக்கிறதுதானே? 'அவர்கள் ஃபைவ்-ஸ்டார் ஓட்டலில் மேடை போட்டுப் பேசினார்கள், நாங்களோ இதோ உங்கள் தெருமுனைக்கே கணித்தமிழைக்கொண்டு வந்துவிட்டோம்' என்று பெருமைகொள்ள இது ஒரு வாய்ப்பல்லவா? அம்மாவுக்கு யாராவது எடுத்துச்சொல்லுங்களேம்ப்பா:-D

ஊர் ரெண்டானா கூத்தாடிக்கொண்டாட்டம். அரசியல்வாதிகள் ரெண்டாகியாவது தமிழ்ச்சமுதாயத்துக்குக் கொண்டாட்டம் வந்தா நல்லதுதானே.

புதன், 20.04.05, 14:08:51 anurag சொன்னது:

சிடாக் இப்போதைய சிடிக்களை இலட்சக்கணக்கில் இலவசமாக வினியோகிக்கவிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட செயலிகளின் தயாரிப்பாளர்கள் அதைப் பொதுப் பயன்பாட்டுக்குத் தரத்தயார் என சிடாக்குக்கே தெரிவித்தால் ஒருவேளை அவர்கள் பட்டியலில் இவையும் சேர்க்கப் படலாம். இந்தச்சூட்டோடு பலர் கைகளில் போய்ச்சேரவும் செய்யும். மற்றபடி அரசு ஆணை என்பதெல்லாம் கேபிள் விவகாரம் போலத்தான் ஆகிவிட வாய்ப்புண்டு. எல்லோருமாக ஆலோசித்து சரியான இடத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்ப முயல்வோம். காசியின் கருத்து சரியான நேரத்தில் வந்திருக்கிறது.

புதன், 20.04.05, 14:41:02 Thangamani சொன்னது:

பிரகாஷ் சொன்னது சரியென்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் நம்ம ஊரில் யோசிப்பதை விட இன்னார் சொன்னார் என்று செய்வதே அதிகம்; எனவே அரசுக்கு லெட்டர் எழுதுவதைவிட, அரசுக்கு ஆலோசனை சொல்லும் பெரியவர்கள் அல்லது அப்படி அரசால் கருதப்படுபவர்களை நம்மில் அணுகக்கூடியவர்கள் இருப்பார்களேயானால் அவர்களை அணுகி இந்தத் திட்டத்தை (அரசாணையை) நிறைவேற்றச்சொல்லலாம். இதை ஓட்டுக்குப் பயன்படுத்திக்கொளள்ளுவது அம்மாவின் விருப்பம். ஆனால் மக்கள் குரலை கேட்பதைவிட, சில மகேசன்களின் குரலை கட்டாயம் அரசு கேட்குமென்பதால் இதை யாராவது தனிநபர்கள் மூலமாக எட்டச்செய்வதுதான் வழி என்று நினைக்கிறேன். நம்மில் யாராவது இந்த திசையில் யாரையேனும் அடையாளாம் காணமுடியுமா?

புதன், 20.04.05, 14:59:08 ராதா சொன்னது:

பொதுவாக உலாவி மையங்களை நடத்துவோருக்கு இப்படிப்பட்ட மென்கலன்கள்/எழுத்துருக்கள் பற்றிய தெரிதல் குறைவென்றே நினைக்கிறேன் (சென்ற முறை ஊரில் கண்ட அனுபவம்). அவர்களுக்கு இதுபற்றித் தெரியுமாயின் ஒருவேளை "எங்கள் மையத்திலிருந்து தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம்" என்று விளம்பரம் செய்து தங்கள் வாடிக்கையாளர் கூட்டத்தைக் கவர வாய்ப்புண்டு. பொது மிடையங்கள் (media)இந்தத் தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளலாம்; ஆனால் அவர்களே விஷயங்களைச் சரியாக உள்வாங்கிக் கொள்வதில்லை போல் தெரிகிறது.

முதலில் மிடையங்கள் மூலம் செய்தியைப் பரப்ப முயற்சிக்கலாம். சற்று காலம் பொறுத்து ஒன்றும் நடக்காத பட்டசத்தில், நீங்கள் குறிப்பிட்டபடி அரசை அணுகுவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

//ஈமெயிலில் வருகிற கடிதத்தை, பிரிண்ட் அவுட் எடுத்து, அதிலே அட்டெஸ்டேஷன் வாங்கி வரச் சொல்லுகிற மாநிலம் இது. ( சிரிக்காதீங்க... ). // :))

புதன், 20.04.05, 17:32:20 முத்து சொன்னது:

மிக நல்ல பயனுள்ள யோசனை. இப்போதெல்லாம் நான் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சாட் செய்யும்போது தமிழில்தான் செய்கிறேன். அங்கு பிரவுசிங் செண்டர் வைத்திருப்பவர் தெரிந்த நண்பர் என்பதால் தமிழ் எழுத்துருவை நிறுவச்செய்வது பிரச்சனையாக இல்லை.

எனது நண்பர் ஒருவர் இதேபோல் ஒரு பிரவுசிங் செண்டரில் தமிழ் எழுத்துரு நிறுவவேண்டும் என்று பிரவுசிங் செண்டர் வைத்திருப்பவரிடம் சொன்னபோது அவர் அதற்கு அனுமதிக்கவில்லையாம், வைரஸ், ட்ரோஜன் போல் நினைக்கிறாரம் :-) :-(. சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

புதன், 20.04.05, 17:34:28 சத்யராஜ்குமார் சொன்னது:

காசி,

உங்கள் நல்ல நோக்கம் இங்கிருக்கும் நானூத்தி சொச்சம் வலைப்பதிவாளர்களுக்குப் புரியும். ஆனால் (ஒரு வேளை) அரசு ஆணையிட்டால் உலாவி மையக்காரர்கள் இதனை ஒரு இந்தித் திணிப்புக்கு நிகராகத்தான் எதிர்கொள்வார்கள். சில வணிக மையங்களில் இன்று தமிழ் இருக்கிறதென்றால் ஜோதிடம், டிடிபி போன்ற சில எலும்புத் துண்டுகள்தான் காரணம். அப்படி எதையாவது காட்டினாலொழிய இது கனவுதான். தமிழ் வலைப்பதிபவர்கள் அதிகரித்தால் ஆணையிடாமலே தமிழ் நிறுவப்படும்.

அன்புடன்,
சத்யராஜ்குமார்

புதன், 20.04.05, 18:41:18 அன்பு சொன்னது:

அன்புக்குரிய காசி,

உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.
எப்படியாவது மக்களை சென்றடையவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

அதே நேரம் பிரகாஸ் சொல்லும் கருத்துக்கள் சிந்திக்கவைப்பவை, நடைமுறை சாத்தியம் கொண்டவை. அதுபோல் கணிணி விற்பனையாளார்கள் மூலம் பெரிதாக செய்யலாம். அதற்குண்டான பொருளாதரத் தேவைகளுக்கு கூட நான்(ம்) உதவி செய்யலாம்.

அதே போல்:, ராதாவின், :
"எங்கள் மையத்திலிருந்து தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம்" என்று விளம்பரம் செய்து தங்கள் வாடிக்கையாளர் கூட்டத்தைக் கவர வாய்ப்புண்டு."

இதுவும் வரவேற்கத்தக்க ஒன்று.
இதற்கு எப்படி உதவுவது என்று சிந்திக்கலாம்.
என்னைப்பொருத்தவரை, பெரிய அளவில் செய்யயவிட்டாலும்,
நம்மில் ஒவ்வொருவரும் மற்ற சிலருக்க்காகவவது எடுத்துச்செல்ல என்ன செய்து வருகிறோம் என்பதுதான் அடிப்படையாக இருக்கும்.

என்னுடைய இந்தப் பதிவின் அடிப்படை நாதம் இதுதான்:
செல்லினத்தின் கொ.ப.செ...

மீண்டும் நன்றி காசி.

புதன், 20.04.05, 22:54:50 த.பரசுராமன் சொன்னது:

அன்பிற்குரிய அனைவருக்கும்,

சென்ற வருடம் நான் பத்திரிகையியல் பயிற்சிக்காக சென்னை சென்றேன். பயிற்சி வகுப்பிற்கு அருகில் உள்ள உலாவி மையத்தில் எ-கலப்பை மென்பொருளை நிறுவிவிட்டு வந்தேன். அந்த மைய மேலாளரும் இந்த மென்பொருளை மிக விரும்பினார். இந்த வருடம் மீண்டும் பயிற்சி வகுப்பிற்கு சென்றபோது, அவர் அந்த மென்பொருளை அதிகம் பயன்படுத்தபடவில்லை என்றார். அதற்கு காரணம்...

>>அதே போல்:, ராதாவின், :
>>"எங்கள் மையத்திலிருந்து தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம், செய்திகளைப் >>பரிமாறிக்கொள்ளலாம்" என்று விளம்பரம் செய்து தங்கள் வாடிக்கையாளர் கூட்டத்தைக் >>கவர வாய்ப்புண்டு."

- என்று விளம்பரம் செய்யாமல் இருப்பதாககூட இருக்கலாம். ஆனாலும் உலாவி மைய மேலாளர் அந்த மென்பொருளை நிறுவிக் கொடுத்ததற்காகவே என்னை நினைவில் வைத்திருந்தார்.
எனவே மென்பொருளை நிறுவுவதோடு மட்டுமல்லாம், "எங்கள் மையத்திலிருந்து தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம" என்ற அறிவிப்பையும் அவசியம் வைக்க வேண்டும்.

இந்த முயற்சிக்கு என்னாலான எவற்றையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

அன்புடன்,
த.பரசுராமன் - ஈரோடு.
தமிழ்நாடு

வியாழன், 21.04.05, 02:06:14 மணியன் சொன்னது:

அன்பர்களே,
காசியின் எண்ணங்களும் மற்றவரின் கருத்துக்களும் சிந்தனையை தூண்டுவதாய் அமைந்துள்ளன. நானும் இதற்கு முழுமையாக இணங்குகிறேன். எனது சில கருத்துக்கள்:
1. அனைவரும் கூட்டாக மின்மடல் அனுப்புவதை விட அதனை ஒரு விளம்பரமாக முக்கிய பத்திரிகைகளில் வெளியிடலாம்.
2. Sify/Reliance போன்றோர் ந்டத்தும் i-way, Reliance Webworld ஆகியவற்றில் முதலில் தொடங்க அந்நிறுவனக்களை அணுகலாம்.
3. பத்ரி போன்றோர் உலாவி மையங்களிலிருந்து வரும் சிறந்த தமிழ் மின்மடல்களிற்கு பரிசு அறிவிக்கலாம். பரிசுப்பணத்திற்கு நாமெல்லாம் அவரின் காமதேனு தளம் மூலம் பங்களிக்கலாம்.
எனது காலம் தாழ்ந்த மறுமொழிக்கு வருத்தங்கள்.

வியாழன், 21.04.05, 08:26:03 காசி சொன்னது:

அனுராக்://மற்றபடி அரசு ஆணை என்பதெல்லாம் கேபிள் விவகாரம் போலத்தான் ஆகிவிட வாய்ப்புண்டு. // கேபிள் விவகாரம் என்ன ஆச்சு, எனக்கு புரியும்படி சொல்லுங்களேன்.
தங்கமணி://நம்ம ஊரில் யோசிப்பதை விட இன்னார் சொன்னார் என்று செய்வதே அதிகம்; // *தங்க* *மணி* யான சொல்.
சத்யராஜ்குமார்: //உலாவி மையக்காரர்கள் இதனை ஒரு இந்தித் திணிப்புக்கு நிகராகத்தான் எதிர்கொள்வார்கள்// ஆனாலும் இது ரொம அதிகமுங்கோ. அப்படியெல்லாம் பயப்படுத்தாதீங்க தகடு சார்.
கொ.ப.செ.://நம்மில் ஒவ்வொருவரும் மற்ற சிலருக்க்காகவவது எடுத்துச்செல்ல என்ன செய்து வருகிறோம் என்பதுதான் அடிப்படையாக இருக்கும்.// இது மிக முக்கியம். இதை நாம் ஒவொருவரும் செய்யலாம். அன்புவைப்பார்த்து நாம் தெரிந்து கொள்ள எத்தனையோ இருக்கின்றன.

மேலும் மறுமொழிந்த இராதா, முத்து, பரசுராமன், மணியன் மற்றும் பார்வையிட்ட நண்பர்களுக்கு ந்ன்றி. அவரவர் வட்டத்தில் அவரவர் பரப்புவோம். உலாவி மையங்கள் 'தமிழில் மின்னஞ்சல் செய்யலாம்' என்று அறிவிப்பதில் சில நடைமுறைச்சிக்கல் (பெறுபவர்களின் எழுத்துரு, யுனிகோடு ஆதரவு) இருக்கலாம். யாராவ்து அனுப்பிவிட்டு பெற்றவர் வாசிக்கமுடியவில்லை என்று சண்டைக்கு வந்தால்...

மேலும் யோசிப்போம் நண்பர்களே.

வியாழன், 21.04.05, 10:32:28 gaNapathi சொன்னது:

அன்பு நண்பர் காசி அவர்களின் கருத்து "காலத்தின் தேவை" நாம் உடனே அதனைக் "காலத்தின் கட்டாயமாக்க" முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அருகில் உள்ள ப்ரொவுசிங் சென்டெருக்கு சென்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.

அரசு ஆணை வருவதற்கு பத்தாண்டுகள் கூட ஆகலாம். அது வரை பொறுத்திருப்பது மடமை
கணபதி

வெள்ளி, 22.04.05, 06:53:05 ராசா சொன்னது:

//எங்கள் மையத்திலிருந்து தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம், செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம்"//

நான் வழக்கமா போறா பிரவுசிங் செண்டர்ல இந்த ஐடியாவ குடுத்தேன், உடனடியா அமல் படுத்திட்டாங்க.. பேனர் எல்லாம் கட்டி.. .. எதோ நம்மாள ஆனது..

திங்கள், 25.04.05, 05:33:47 Kasi சொன்னது:

கணபதி: //ஒவ்வொருவரும் அருகில் உள்ள ப்ரொவுசிங் சென்டெருக்கு சென்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்//

ராசா://நான் வழக்கமா போறா பிரவுசிங் செண்டர்ல இந்த ஐடியாவ குடுத்தேன், உடனடியா அமல் படுத்திட்டாங்க.. பேனர் எல்லாம் கட்டி.. .. எதோ நம்மாள ஆனது..//

கைமேல் பலன். கணபதிக்கும், ராசாவுக்கும் நன்றியும் பாராட்டும்.

திங்கள், 25.04.05, 12:04:58 Alex Pandian சொன்னது:

தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயக்குமார் - சென்னைவாசிதானே. அவருடன் யாருக்காவது நல்ல கனெக்ஷன் (?) இருந்து, அவரிடம் எல்லாவற்றையும் விளக்கினால், எப்படி இதைச் செய்தால் அம்மாவுக்கும், கட்சிக்கும் ஆட்சிக்கும் நற்பெயர் வரும் என்கிற பாயிண்டுகளையும் எடுத்து வைத்தால், நிச்சயம் அவர் அம்மாவின் காதுக்கு இந்த விஷயங்களை எடுத்துச் செல்லலாம்.

2. நமக்குத் தெரிந்த தமிழ் அல்லது பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு ஒரு நாள் சென்று விளக்கிக் காட்டலாம். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு (கணினி பயன்படுத்துவோர்) இதனை விளக்கினால், அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு விளக்க சான்ஸ் அதிகம்.

- அலெக்ஸ்

செவ்வாய், 26.04.05, 03:16:09 Navan Bhagavathi சொன்னது:

Kasi, Just tried to ping this post. Have you disabled trackbacks?

செவ்வாய், 26.04.05, 12:57:17 காசி சொன்னது:

நவன்,

ஆம். :( அதன் வழியாக ஏகப்பட்ட எரிதங்கள்! என்ன செய்ய, அதனால் அதை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

செவ்வாய், 26.04.05, 21:10:53 suratha சொன்னது:

பைய பைய நகர்வோம்..அரச ஆணை தானே வரட்டும்.

முதலில் தேசிகனை பிடித்து எமது சிறிய கோரிக்கையை வலைப்பதிவாளர் சார்பாக ஓரிரு வரியை சுஜாதா மூலம் விகடனில் எழுதச் சொல்வோம் .அது இலட்சக்கணக்கான வாசகரை சென்றடையும்.அதில் 100 இணைய மைய ஆலோசகரை சென்றடைந்தால் அது முதலில் போதுமானது
.அதே போல இணைய தள அமைப்பாளர்களையும் அந்த செய்தி சென்றடையும்.

இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான்
1.இணைய மைய நிறுவனங்கள் பயனர் தமிழில் எழுத வசதி செய்து கொடுக்கவேண்டும்(ஈகலப்பை,யூனிகோட் எழுத்துரு பதித்திருத்தல்)
2. இணையத்தில் யூனிகோட் எழுத்துருவில் இணையத் தளம் அமைக்க முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.

இதை திறம்பட விபரிக்க சுஜாதாவால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை.எனவே காசி நாம் எல்லோரும் கையெழுத்திட்டு (மின்னஞ்சல் முகவரியிட்டு)ஒரு கடிதத்தை தமிழ் வலைப்பதிவாளர்கள சார்பாக தேசிகள் மூலமாக சுஜாதாவிடம் கொடுத்தால் என்ன????...

புதன், 18.05.05, 07:58:09 காசி சொன்னது:

சுரதா,

உங்கள் யோசனை எனக்கும் சரியாகப் படுகிறது. சுஜாதா சொன்னால் பரவலாக அறியப்படுவதோடு, தமிழகத்தில் இணைய உலாவி மையம் நடத்துபவர்களுக்கு ஒரு கூடுதல் ஆர்வமும் நம்பகத்தன்மையும் வரும். தேசிகன் எங்கே இருக்கீங்க? கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க. பெரியவர் கண்ணில் இந்த விஷயம் படட்டும்.

புதன், 18.05.05, 10:13:30

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it