சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

ஊடகக் கோப்புகளின் (Media files) சுருக்க முறைகள்

இதைபற்றி நண்பர் பிரபு கேட்டிருந்தார்:
>
> 3. ஏன் gif., jpg. போன்ற வெவ்வேறு வகையான படக்கோப்புகள் இருக்கின்றன?
>
> 4. bmp கோப்பு அதிக இடம் பிடிக்கிறது. எனவே jpgஆக மாற்றி வைத்துக் கொள்வேன். படத் தரத்தில்
> ஏதும் வித்தியாசம் இல்லையே? bmpஐ தூக்கி கடாசினால் என்ன நஷ்டம்?
>

நான் அறிந்த வரையில் சொல்கிறேன். gif என்பது compuserve என்ற அமைப்பினால் கொண்டுவரப்பட்ட ஒரு வடிவம். jpeg, சுருக்கமாக jpg என்பது இன்னும் பரவலாக ISO அமைப்பினால் தர நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வடிவம். இவை இரண்டுக்குமே சில ஒற்றுமை உண்டு. இவை மட்டுமில்லாமல் இன்னும் ஒரு இருபது வடிவங்களாவது இருக்கின்றன. ஆனால் எல்லா உலாவிகள், பெரும்பாலான செயலிகளுடன் ஒத்தியங்குபவை இந்த இரண்டுமே. மாறாக bmp ஒரு இயற்கையான வடிவம். bmp வடிவம் uncompressed file க்கு இணையானது என்று கொண்டால், மற்ற zipped fileக்கு இணையானவை. இதன் காரணமாகவே ஒரு bmp கோப்பை சுருக்கினீர்களானால் நன்கு குறையும். ஆனால் மற்றவை சிறிதே குறையும்.

அப்படியானால் 'bmpஐ சுருக்கி zip வடிவத்தில் சேமித்தால் போதுமே' என்றால், இல்லை. ஏனென்றால் சாதாரணமாக ஒரு செயலி zip வடிவத்தில் உள்ள கோப்பை நேரடியாகத் திறக்கமுடியாது. ஆனால் gif & jpg கோப்புகளை நேரடியாக எல்லாச் செயலிகளும் திறக்கும். இவற்றை சுருக்கும்போது வெறும் பொதுவான கோப்பை சுருக்குவது மாதிரி அல்லாமல், ஒரு படத்தின் இயல்புக்கேற்ற விஷேசமான அறிவுகொண்டு சுருக்கப்படுகின்றன. கீழே உள்ள அட்டவணையிலிருந்து ஓரளவுக்கு இந்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.


ரொம்பவும் உள்ளே போகாமல், இதுவரை நான் புரிந்து கொண்டவற்றில் சிலதை இங்கே தருகிறேன்:

1. படங்களை bmpஆக சேமிப்பதைத் தவிர்க்கலாம்.
2. போட்டோ க்களாக இருந்தால் jpg நல்லது. இதிலும் சில செயலிகள் சுருக்கத்தின் தீவிரத்தை மாற்ற அனுமதிக்கின்றன. நமக்கு கோப்பின் அளவு முக்கியமா, படத்தின் தரம் முக்கியமா, என்பதைப் பொறுத்து தேவையான அளவு சுருக்கலாம்.
3. வரிப்படங்கள், கொடுகளால் ஆன சித்திரங்கள், பொன்றவற்றிற்கு, gif மிகவும் ஏற்றது. மேலும் அசையும் படங்கள் (animated picture), பின்புலம் கண்ணாடிபோல் (transparent) தெரியவேண்டிய படங்கள் ஆகியவை gif கொண்டு மட்டுமே செய்யமுடியும்.

இதையே ஒலி (audio), சலனப்படம் (video) ஆகியவற்றிற்கும் விரிக்கலாம், எளிமை கருதி இங்கே நிறுத்துகிறேன்.
காசி - clock 10:34:49 - ஞாயிறு, 18.01.04 - கணினியியல் - 1436x - pencil நிரந்தர சுட்டி

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்

  • மறுமொழிகளுடன் இந்த ஆக்கத்தின் ஓடை: RSS 2.0 comments feed
  • DISALLOWED (TrackBack)
  • இந்தப் பக்கத்தை நீங்கள் அச்சிட, மின்மடலிட இயலும்.

Local search ஊடகக் கோப்புகளின் (Media files) சுருக்க முறைகள்

No results found or search not configured.

Google search

No results found or search not configured.

மறுமொழிகள்:

பரி சொன்னது:

இணையப் பக்கங்களில் பயன்படுத்த gif வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது(logos, menus etc).
jpg அதிகமாக சுருக்கப்பட்டிருப்பதால் உலாவி அதை பிரித்து எழுத வெகுநேரம் ஆகும். குறுவேக இணைப்பு இருப்பவர்களுக்கு தாவு தீர்ந்துவிடும்.

ஞாயிறு, 18.01.04, 11:02:40 காசி சொன்னது:

பரி,

எனக்கு நீங்கள் சொல்வதில் உடன்பாடில்லை. சொல்லப்போனால் கோப்பின் அளவைச் சுருக்குவது அவர்களுக்கே அதிகம் பயன்தரும். உலாவி இப்படங்களை விரிவாக்குவது நம் கணினியின் வேலைத்திறனோடு ஒப்பிடும்போது ஜுஜுபி :D

ஆனால் சில குறிப்பிட்ட வடிவங்களுக்காகத் தான் jpg-க்கு மேல் gifஐத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. உ.ம். மேலே உள்ள அட்டவணை. இங்கு gif மிகப் பொருத்தம். ஆனால் வேறு ஒரு போட்டோவுக்கு jpg பொருத்தம் என்பது என் அனுபவம்.

ஞாயிறு, 18.01.04, 11:51:28 dyno சொன்னது:

JPEG / GIF / BMP are proprietary compression technologies.
JPEG uses a 'lossy' compression methods as it removes information while creating a file. GIF is a grat image format except for tha fact that licensing terms are severe.
There is a better and great openstandard technology for compressing color images called “Portable Network Graphics” also called “PNG Not GIF”. The files compressed using PNG might be a bit larger than GIFs but if you are an open standard enthusiast, PNG is the way to go!

dyno
http://www.w3.org/Press/PNG...

ஞாயிறு, 18.01.04, 22:26:45 பிரபு ராஜதுரை சொன்னது:

நன்றி காசி,

இப்படியே போனால் தேறி விடுவேன் போல. தமிழ் வலைப்பக்க குழுவுக்கு எனது நன்றிகள்

ஞாயிறு, 18.01.04, 22:35:15 Kasi சொன்னது:

நன்றி டைனோ. ஆம் png நன்றாக இருக்கிறது. சில இடங்களில் பயன்ப்டுத்தியிருக்கிறேன்.:) நம்மைப்போன்ற ஒருவருக்கு எந்த அளவு உரிமங்கள் பாதிப்பு இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. :!:

ஞாயிறு, 18.01.04, 22:39:37 குமரகுரு சொன்னது:

GIF is now patent free in the US(the patent expired last june in the US)
(see http://burnallgifs.org/ )

“.., சலனப்படம் (video)...” ;-)
Video'விற்கு வேறு நல்ல பெயர் இல்லையா? :D

செவ்வாய், 20.01.04, 00:29:06 காசி சொன்னது:

நன்றி, டைனோ,குமரகுரு,
இனி முடிந்தவரையில் png வடிவத்தையே பாவிக்கப் போகிறேன். :idea:

செவ்வாய், 20.01.04, 09:19:04 பத்ரி சொன்னது:

டைனோவின் விளக்கம் நன்றாக இருந்தது. சாதாரணமாக கையினால் உருவாக்கப்படும் படங்களுக்கு gif/png வடிவமும், ஃபோடோக்களுக்கு jpg வடிவமும் பரிந்துரைக்கப்படுகின்றன.

gifஇன் காப்புரிமை, மற்ற லைசென்சு உரிமங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எல்லாப் பழைய மென்பொருட்களாலும் PNG வடிவத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் இனி நானும் gifஇற்குப் பதில் PNGஐப் பாவிக்க முயற்சிக்கிறேன்.

செவ்வாய், 20.01.04, 09:24:25 கண்ணன் சொன்னது:

பத்ரி,
PNG வடிவம் ஃபோட்டோக்களுக்கும் ஏற்றதே. jpg வடிவத்தினால் இயற்றப்பட்ட ஃபோட்டோவை விட PNG ஃபோட்டோ மிகவும் துல்லியமாக இருக்கும் (PNG ஒரு இழப்பில்லா இயக்குமுறையை - Lossless algorithm அடிப்படையாகக் கொண்டது). png யின் வளைத்தளத்தில் மேலதிக விபரங்களைக் காணலாம். <a href="கண்ணன் சொன்னது:

http://www.libpng.org/pub/p...

புதன், 21.01.04, 05:12:18 வெங்கட் சொன்னது:

படத்தைச் சேமிக்கிறீர்கள். அது எதற்கு வருங்காலத்தில் பயன்படப்போகும் என்று தெரியவில்லை (கணினியில் காட்ட/பார்க்க மாட்டும்தானா, உதாரணமாக வ்லைத்தளம், அல்லது அச்சில் எடுத்து ஆமைமடலில் அனுப்பவா என்றெல்லாம் தெரியவில்லை என்றால் கண்களை மூடிக்கொண்டு (அவசியமில்லை )PNG வடிவில் சேமித்து வையுங்கள்.

bmp-ஐ விட அளவில் குறைவு, jpeg-ஐவிட துல்லியம், gif-ஐ விட மனசாட்சிக்கு உகந்‌தது - நான் என்றும் விரும்புவது PNG தான் (திரையில் எனக்குப் பின்னால் ஐநூறு தேவதைகள், இளையராஜாவின் வயலின் இசைக்க அசைவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்). :D :D

வியாழன், 22.01.04, 21:20:07 Kasi சொன்னது:

:D :D :D :D

வெள்ளி, 23.01.04, 05:39:51

மறுமொழியிடும்போது கவனிக்க:

விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:

மறுமொழியிட:

Comments must be approved before being published. Thank you!

This item is closed, it's not possible to add new comments to it or to vote on it