சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்
புதிதாக வந்த நண்பர்கள் வசதிக்காகவும், ஏற்கனவே இதன் வளர்ச்சியோடு கூடவே வந்த நண்பர்களானாலும், தொடர்ந்து மாற்றங்களுக்குள்ளான தளமானதால் அனைவரும் அனைத்து அம்சங்களையும் கவனிக்காமல் விட்டிருக்கவாய்ப்பிருப்பதால் அவர்கள் நன்மைக்காகவும் இந்தத் தளத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட சில வசதிகளை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இங்கே சொல்லிவிடுகிறேன். 100 வது நாள் வெளியீடாக
கடந்த இரு வாரங்களில் கார்ட்டூன்கள், படப்பதிவுகள் ஆகியவற்றின் முன்னோட்டம் காட்ட வில்லை(thumbnail) வடிவில் ஒரு புதிய இடைமுகம் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தானாக இயங்குகிறது. எந்தப் பதிவுகளிருந்து கார்ட்டூன்கள்/படங்கள் தேடவேண்டும் என்று மட்டும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னும் பின்னும் போய்ப் பார்க்க வசதியாக பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் அவ்வப்போது தேவையான மேம்பாடுகள் செய்ய்யப்பட்டுக்கொண்டேஇருக்கும். தொடர்ந்து வருகை புரிந்து, அவ்வப்போது ஆலோசனை அளித்து பலருக்கும் அறிமுகப்படுத்தி வலைப்பதிவர் சமூக வளர்ச்சிக்கும் தமிழ் இணைய வளர்ச்சிக்கும் ஊக்கமளிப்பீர்கள் என்று அசையாத நம்பிக்கையுண்டு.
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள்.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
Mathy Kandasamy சொன்னது:Kalakkal Kasi!(adjective'aahavum eduththukkoLLalaam
)
மிக்க மகிழ்ச்சி...தொடரட்டும் சேவை!
- அருண் வைத்யநாதன்
தமிழ்மணம் மிகவும் பயனாக உள்ளது. நன்றி.
செவ்வாய், 30.11.04, 21:59:57 வாசன் பிள்ளை சொன்னது:உங்களுடைய அசாத்திய பொறுமை ஆச்சரியமளிக்கிறது.தமிழ்மணம் பல இணையத்தமிழர்களை சந்திக்கும் உணர்வை எளிதாக்குகிறது.நன்றி கலந்த வாழ்த்துகள்.என்றாவது உங்களை நேரில் சந்திக்கும் போது,பொறுமை மற்றும் திறமையில் கொஞ்சம் கொடையாகத் தருமாறு இப்போழுதே கேட்டுவிடுகிறேன்..
செவ்வாய், 30.11.04, 22:42:43 மூக்கன் சொன்னது:இந்தியமொழிகளிலேயே அதிக அளவு வலைப்பூக்களை உடைய மொழியாக தமிழை ஆக்கியதற்கும், இன்னமும் வரும் காலத்தில் தமிழ் வலைப்பூக்களில் நடக்கப்போகும் அற்புதமான விஷயங்களுக்காகவும், எல்லோரும் “கலக்கல் ” காசிக்கு ( நன்றி மதி..
கடமைப்பட்டுள்ளோம்.
சத்தமில்லாமல் சாதனை செய்யும் காசிக்கு இந்த மூக்கனின் வாழ்த்தும் நன்றியும்.
தொழில்நுட்ப விஷயங்களில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்கிறீர்கள் என்பதற்காக எழுதுவதை குறைக்காதீர்கள்...ஜீவனுள்ள எழுத்து உங்களது.
செவ்வாய், 30.11.04, 23:16:17 ஈழநாதன் சொன்னது:அன்பின் காசி அவர்களுக்கு.உங்கள் பொன்னான நேரத்தை உண்டு வளர்கிறது தமிழ்மணம்,நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் மிளிரும் தமிழ்மணத்தையும் உங்களையும் பாராட்டுகிறேன்.
செவ்வாய், 30.11.04, 23:17:28 தங்கம்ணி சொன்னது:அருமையான சேவை இது காசி. இதன் மூலம் நீங்கள் உண்மையில் ஒரு நல்ல தொடக்கத்துக்கு அடித்தளமிட்டிருக்கிறீர்கள்.
நன்றியும், அன்பும்
À¢ÃÁ¢ôÀ¡ö þÕ츢ÈÐ ¸¡º¢!
Å¡úòиû ¿ýÈ¢.
ãì¸÷ ¦º¡øÅÐ §À¡ø ¯í¸Ç¢ý ƒ£ÅÛûÇ
±Øò¨¾ô ÀÊì¸ ¬÷ÅÓ¼ý þÕìÌõ ±í¸Ù측¸
(º¢È¢¾ÇÅ¡ÅÐ §¿Ãõ ´Ð츢) ±ØÐí¸û.
வாழ்த்துக்கள் காசி. தினமும் குறைந்தபட்சம் அரை மணிநேரம் தமிழ்மணத்தில் (தமிழ்மணம் மூலமாக) தான் நான் இணையம் மேய்கிறேன். உங்களுடைய அருமையான சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
புதன், 01.12.04, 00:15:08 கண்ணன் சொன்னது:மிக்க நன்றி காசி!
வாழ்த்துக்கள்!!
அன்புக்குரிய காசி,
உங்கள் எண்ணத்துக்கு, உழைப்புக்கு, தொடர் பங்களிப்புக்கு
இன்னும் பல .....க்கு
நன்றி... நன்றி... நன்றி.
தொடர்ந்து செய்யுங்கள், வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
மேலே சொல்லபட்டுள்ள அத்தனையையும் ஆமோதிக்கிறேன். நன்றி. அன்புள்ள வசந்த்
புதன், 01.12.04, 00:46:16 கிறிஸ்டோபர் சொன்னது:அன்புள்ள காசி,
உங்கள் தமிழ் சேவை தொடரட்டும்... இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!
அன்புடன்,
கிறிஸ்டோ
உங்கள் உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் புதுமை எண்ணங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் காசி, தமிழ் இணைய வரலாற்றில் உங்கள் பங்களிப்பு என்றும் “மணம்” வீசு கொண்டிருக்(கும்)கட்டும் !
-ரா.சு
புதன், 01.12.04, 01:38:56 துளசி கோபால் சொன்னது:அன்புள்ள காசி,
'நன்றி' என்ற வார்த்தைக்கு ஈடான வேறு வார்த்தை தமிழில் இருக்கிறதா?
நன்றி காசி, மிகவும் நன்றி.
அட்டகாசமா அமைச்சிருக்கீங்க இந்த தமிழ் மணம் தளத்தை!
வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
வாழ்த்துக்கள் காசி
நட்புடன்
சந்திரவதனா
வாழ்த்துக்கள் காசி
நட்புடன்
சந்திரவதனா
காசி அவர்களே!
உங்கள் அபாரமான தமிழ் சேவைக்கு வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள் பல!
இது 'நம்முடைய' சாதனை என்றே சொல்ல தோன்றுகிறது. காசிக்கு நெஞ்சு நிறைய நன்றிகளும் வாழ்த்துக்களும்!
அன்புடன் ஜெ. ரஜினி ராம்கி
புதன், 01.12.04, 03:53:10 Alex Pandian சொன்னது:காசி,
அருமையான முன்னேற்றம்.
வாழ்க வளமுடன்.
- அலெக்ஸ்
புதன், 01.12.04, 04:04:22 Eelanathan சொன்னது:அப்படியே அப்பால் தமிழையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் செய்தியோடையை கீழே தந்துள்ளேன்.
http://www.appaal-tamil.com...
வாழ்த்துக்கள்...
புதன், 01.12.04, 05:01:23 நவன் பகவதி சொன்னது:தமிழ்மணத்திற்கும் காசிக்கும் வாழ்த்துக்கள். அப்படியே 'மூக்கன்' சொன்னதையும் வழிமொழிகிறேன்.
<blockquote>தொழில்நுட்ப விஷயங்களில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்கிறீர்கள் என்பதற்காக எழுதுவதை குறைக்காதீர்கள்...ஜீவனுள்ள எழுத்து உங்களது.</blockquote>
புதன், 01.12.04, 05:04:41 செல்வராஜ் சொன்னது:காசி, படவில்லைகள் சிலரைக் கவரக் கூடும். ஆனால், எனக்கு இ-இதழ்கள் வசதி அருமையாகப் படுகிறது. இன்னும் என்ன செய்து விட முடியும் என்று எண்ணும் போது இன்னும் பல கொண்டு வந்து அசத்தி விடுகிறீர்கள். போக்குவரத்தை மட்டுப் படுத்துவது (bandwidth) எல்லாம் இனி வேலை செய்யாது என்று எண்ணுகிறேன்.
அயராத முயற்சிகளுக்கும் அரும்பணிகளுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.
புதன், 01.12.04, 05:19:15 Dubukku சொன்னது:அட்டகாசம் ..போங்க...மிக்க நன்றி
புதன், 01.12.04, 05:58:19 jafar சொன்னது:வாழ்த்துக்கள் காசி!!! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை.
புதன், 01.12.04, 07:03:49 Raviaa சொன்னது:பிரான்ஸில் ஒரு கடை விளம்பரத்தில் <<பாண்டா ஷாப் (கடைப் பெயர்) இல்லையென்றால் அது கண்டுப்பிடிக்கப் பட வேண்டும்>> என்பார்கள்.
அதேப் போல் << காசி இல்லையென்றால் அவர் உருவாக்கப் பட வேண்டும் >> என்று சொல்லுமளவிற்கு இருப்பது உங்கள் சேவை சாசி. சுய நலமில்லாமல் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத் தக்கது. :கை:
:கை: :கை:
இச் சேவையை புரிந்து ஊக்குவிக்காமல் குறைச் சொல்லும் ஈனப் பிறவிகளை :சுடு: கண்டுக் கொள்ளாமல் உங்கள் கடமையை தொடருங்கள் காசி! தனி மடலில் பிறகு தொடர்கிறேன்.
புதன், 01.12.04, 07:28:17 Pands சொன்னது:வாழ்த்துக்கள்.
புதன், 01.12.04, 07:43:57 கோபி சொன்னது:படவில்லைகள், இ-இதழ்கள்,.....:ஐ: பிரமாதமுங்க காசி. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இதெல்லாம் தோனுது.:கை: கலக்கரீங்க போங்க :குடி:
புதன், 01.12.04, 08:12:26 kirukan சொன்னது:வாழ்த்துக்கள். நன்றி
புதன், 01.12.04, 09:19:09 பாண்டி சொன்னது:அட... இந்த இ-இதழ் மாதிரி ஒரு மரத்தடி, ரா.கா.கி. தொகுப்புகளை எளிதாக பார்க்க ஒரு எளிதான வழி செய்யுங்களேன் காசி என்று ஒரு வேண்டுகோள் வைக்கலாம்னு யோசிக்கும்போதே...சூடாக பறிமாறிவிட்டீர்களே! கலக்கல் காசி!
கேட்காமல் கொடுப்பவரே காசி காசி!
தமிழ்மணத்தின் நாயகரே!
“you THE Man”
புதன், 01.12.04, 09:39:20 அனுராக் சொன்னது:தமிழ் வலைப்பதிவுகளை பரவலாக வாசிக்க வைத்த தமிழ்மணத்தின் 100வது நாள் வாழ்த்துக்கள்
புதன், 01.12.04, 12:28:43 BALA சொன்னது:காசி,
ஒரு வாசகராகவும், மாஜி சக மாணவராகவும் (ex-GCTian) என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை “கொஞ்சம்” எங்களைச் சேரும்
என்றென்றும் அன்புடன்
பாலா
வாழ்த்துக்கள்.
புதன், 01.12.04, 13:20:17 Raviaa சொன்னது:ஒரு சம்மந்தமில்லாத கேள்வி !!!!!! மதியை ஈராக்கில் பிடித்து வைத்திருகிறார்களா ? எங்கே ஆளையே காணோம்??????
புதன், 01.12.04, 15:01:33 Sinniah Maheswaran சொன்னது:அன்புடன் திரு காசி அவர்களுக்கு!
கடந்த சில நாட்களாகத்தான் தமிழ்மணத்தின்பக்கம் உலாவந்துகொண்டிருக்கிறேன்.
மிக அருமையான முயற்சியில் தொடர்ந்து ஈடுபாடுகாட்டிவரும் தங்களுக்கு
இந்த நூறாவது நாளிலேனும் ஒரு வாழ்த்துதெரிவிக்காவிட்டால் எப்படி.
வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்
(இணையத்) தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் உங்கள் தமிழ்ப்பணிக்கு நன்றிக்கடன் உடையதே.
தமிழ்மணத்தில் மணம்பரப்பிவரும் படைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தொடர்க!
அன்புடன்
இந்துமகேஷ்
(ஜெர்மனி)
கடந்த 100 நாட்களாகத் தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பது தமிழ்மணம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது. 'மின்னிதழ்'களின் சேர்க்கை நல்ல முயற்சி (புதிய வலைப்பதிவுகளைப் போல புதிய/இருக்கும் இதழ்களையும் யுனிகோடில் எதிர்பார்ப்போம்). தமிழ்மணம் மேலும் செழிக்க மனமார்ந்த வாழ்த்துகள் காசி!
புதன், 01.12.04, 16:08:27 Balaji-paari சொன்னது:காசி,
வாழ்த்துக்கள்!!.
என்ன சொல்றதுன்னே தெரியலை...
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
நன்றிகள் காசி.
வாழ்த்துக்கள் காசி.
உங்கள் நிர்வாகத் திறன் கண்டு வியக்கும்,
- சத்யராஜ்குமார்
100 வது நாள் கொண்டாடும் 'தமிழ் மணத்தை' பின்னாடி பெஞ்ச் ரவுடி பசங்க சார்பா வாழ்த்திகுனு
குந்திக்குறேன்!!
நூறாவது நாட்களை கடந்து ஜனத்திரள் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் மணத்திற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
வியாழன், 02.12.04, 01:58:02 காசி சொன்னது:அடேங்கப்பா, மறுமொழிகளாக வாழ்த்துக்களால் திணற அடித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
சில பதில்கள்:
வாசன், //பொறுமை மற்றும் திறமையில் கொஞ்சம் கொடையாகத் தருமாறு இப்போழுதே கேட்டுவிடுகிறேன்..// எனக்கு பொறுமையும் அதிகம், கோபமும் அதிகம். ஒன்றை மட்டும் கொடுக்கமுடியாதே!
என் திறமையாக நான் கருதுவது ஒன்றே ஒன்றுதான்: கவனக்குவிப்பு! (concentration). இந்த multitasking எல்லாம் எனக்கு வராது. ஆனால் வாழ்க்கையில் அதுதான் நிறையத் தேவைப்படும். எனவே நாம் வேணுமானால் பண்டமாற்று செய்துக்கலாமா?
மூக்கர்://இந்தியமொழிகளிலேயே அதிக அளவு வலைப்பூக்களை உடைய மொழியாக தமிழை ஆக்கியதற்கும், இன்னமும் வரும் காலத்தில் தமிழ் வலைப்பூக்களில் நடக்கப்போகும் அற்புதமான விஷயங்களுக்காகவும், எல்லோரும் “கலக்கல் ” காசிக்கு ( நன்றி மதி.. கடமைப்பட்டுள்ளோம்.// ரொம்பப் பெரிய வார்த்தையெல்லாம் போடறீங்களே. இது ஒரு கூட்டு சாதனை. மதியின் பங்களிப்பு, முக்கியமாய் ஒரு வருடத்துக்கும் மேலாக பட்டியல்/வலைப்பூ இரண்டும் நடத்தியது இதற்கு ஒரு முக்கியக் காரணி. மேலும் பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கு விடை அளித்த, அளிக்கும் உமர், சுரதா, உள்ளிட்ட (முழுப்பட்டியல் இடமுடியவில்லை) நண்பர்களுக்கும் முக்கியப் பங்குண்டு.
//தொழில்நுட்ப விஷயங்களில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்கிறீர்கள் என்பதற்காக எழுதுவதை குறைக்காதீர்கள்...ஜீவனுள்ள எழுத்து உங்களது. // இது நாயர் பிடித்த புலிவால்மாதிரித்தான் இப்போதைக்கு இருக்கிறது. ஆனால் இதை இப்படியே விடமுடியாதே. தமிழ்மணம் தளத்திற்கு இரண்டு அடிப்படையான, தன்னிறைவு அளிக்கும் மாற்றங்கள் இன்னும் பாக்கி, அதில்லாமல் புலிவாலை விடமுடியாது.
1. நிர்வாகிகள் நானில்லாமல் தொடர்ந்து நடத்தத் தேவையான கட்டுப்பாட்டு முகப்பு.
2. செலவுகளை தாங்கிக்கொள்ளும் திறன்.
இரண்டும் செய்துவிட்டு அக்கடா என்று எதையாவது கிறுக்கலாம். என் இலக்கு இரண்டையும் புத்தாண்டுக்குள் முடித்துவிடவேண்டும் என்பது, பார்க்கலாம்.
வியாழன், 02.12.04, 09:58:04 மூக்கன் சொன்னது:இப்போதுதான் பதில் பார்த்தேன்.
செலவுகளைப் பற்றி நான் தனிமடல் இடுகிறேன்.
நன்றி.
வியாழன், 02.12.04, 17:14:41 Mayiladuthurai Sivaa சொன்னது:அன்பு நண்பர் காசிக்கு
உங்களது தன்னலம் இல்லா தமிழ் சேவைக்கு எனது மனதாரப் பாராட்டுகள்!!!
வாழ்க உங்கள் தமிழ் பணி! வளர்க உங்கள் தமிழ் தொண்டு!!!
மயிலாடுதுறை சிவா...
மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
21:23:53 - செவ்வாய், 30.11.04 -


