சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
வீரப்பன் சாவால் நடந்த நன்மை தீமை.
நன்மை:
விவேக் முதற்கொண்டு எல்லாரும் தமிழ்நாட்டு போலீசை கிண்டல் செய்தார்களே, இனியாவது அவர்கள்மேல் மதிப்பும் மரியாதையும் வரலாம் (யாரப்பா ஜெயலட்சுமியைப் பத்தியெல்லாம் பேசுவது, பிடி அவனை.. ச்சே.. ஓடிட்டான்யா)
சட்டத்தை மதிக்காமல் அடாவடித்தனம் செய்தால் எப்படியும் (கண்ணில் புரைவிழுந்தபிறகாவது) மாட்டிக்கொள்வோம் என்று பயத்தில் இனியும் யாரும் அடாவடித்தனம் செய்யமாட்டார்கள்.
இரவுபகல் என்று பாராமல் காட்டுக்குள் பாராவுக்குப் போய், மாறுவேடத்தில் ஒளிந்து கஷ்டப்பட்ட காவல்துறையினர் இனி நிம்மதியாக பொண்டாட்டி பிள்ளகளுடன் வாழலாம்.
வீரப்பனுக்கும் காவல்துறைக்கும் நடுவே மாட்டி அல்லாடிய கிராமப்புறப் பொதுமக்கள் இனி நிம்மதியாக விறகு பொறுக்க, மாடு மேய்க்கக் காட்டுக்குப் போகலாம். வீரப்பனுக்கு
தெங்குமரஹடா, மசினகுடியிலிருந்து, ஆனைகட்டி, சிறுவாணி வரை என்னைப்போல ஊர்சுற்றிகள் சுற்றுலா போகப் பயமாக இருந்தது. செக்போஸ்ட் கெடுபிடிகள் குறையலாம்.
சத்தியமங்கலம் வழியாக மைசூருக்கு இருந்த பாதையை கிட்டத்தட்ட மறந்தே போகும்படி செய்த அராஜகம் ஒழிந்து கோவைக்கும் மைசூருக்கும் இடையே இனி அதிகம் போக்குவரத்து நடக்கலாம்.
தீமை:
இன்னும் பலநாட்களுக்கு, வாரம்-இருமுறை இதழ்களும் தினமும் பொய்க்கும், ச்சே, பூக்கும் மலரும் வீரப்பனை, போலீசை, முதல்வரை, முன்னாளை, அவரை, இவரை வைத்துக் கதைபண்ணி ஏன்தான் வீரப்பன் செத்தானோ என்ற விரக்தியை கொடுக்கலாம்.
இதைவைத்து அம்மா (உண்மையான) நவராத்திரியில் அரக்கனை வென்ற பராசக்தி (சரியா?) யாக சித்தரிக்கப்பட்டு கடைசியாக வாங்கிய (no pun intended) தங்கத்தாரகை பட்டம் மக்களிடமிருந்து மறந்துபோகலாம்.
சென்னை கமிஷனர்களுக்கு பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்பர் கொடுக்க இருந்த இருந்த ஒரே வீரப்பன்காடு இல்லாததால் அவர்களை என்ன செய்வதென்று ஆலோசிக்க, தேவையில்லாமல் பொன்னான நேரம் வீணாகலாம். கிடைக்கும் மூன்றுமணி நேரத் தூக்கத்துக்கும் பங்கம் வரலாம்.
இனிமேல் தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகமாகும். அத்னால் அவை காட்டில் கிடைக்கும் உணவு போதாமல் நாட்டுக்குள் வந்து தொல்லை தரலாம். அப்போது யானைகளை அடக்க இன்னொரு அதிரடிப்படை அமைக்கலாம்.
முன்னாள் முதல்வர் காவல்துறையைப் பாராட்டியே ஆகவேண்டியிருப்பதால், தமிழர் தலைவராக, தியாகியாக வீரப்பரை சித்தரிக்கமுடியாது போகலாம்.
கர்நாடகாவில் சாகாமல் போனதால் 'இது கன்னடர் சதி' என்று சொல்லிப் பூச்சாண்டி காட்ட முடியாமல் போனதை எண்ணி சிலர் வருத்தப்படலாம்.
கேரள எல்லையில் தமிழ்நாட்டு சந்தனமரங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் சந்தன எண்ணை எடுக்கும் ஆலைகளுக்கு இனிமேல் கடத்தல் சந்தனமரம் கிடைக்காமல் போகலாம். இதனால் அதை நம்பிப் பிழைக்கும் பல குறுங்கடத்தல் கார்கள், ச்சே காரர்கள் வேறு தொழில் தேட வேண்டியிருக்கலாம்.
பார்சோப்பைவிட சந்தன சோப் விலை குறையப்போவதால் மைசூர் சந்தன சோப் கம்பெனி நஷ்டத்தில் இழுத்து மூடப்படலாம். மக்கள் சந்தன சோப்பால் இனி துணிதுவைக்க ஆரம்பிக்க, சென்ட் வியாபாரிகள் நஷ்டத்தில் விழலாம்.
வீரப்பனுக்கு இவர்தான் பினாமி, அவர்தான் ஆதரவு என்றெல்லாம் கைகாட்டி, என்றாவது ஒருநாள் வீரப்பனை அப்ரூவர் ஆக்கி அந்த அவர்களை மாட்டவைக்கலாம் என்பது கனவாகிப் போனதில் சிலருக்கு வருத்தம் வரலாம்.
உள்நாட்டுக்குள்ளேயே வீரப்பனைப் பிடிக்கமுடியவில்லை, நான் நாடுவிட்டு நாடுபோய் எப்படி ஒசாமாவைப் பிடிப்பேன் என்ற ஜார்ஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸின் வாதம் எடுபடாமல் போகலாம்.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search வீரப்பன் சாவால் நடந்த நன்மை தீமை
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
கோபி சொன்னது:ஜவச்cரிப்ட்:இன்செர்டெ௯ட்(':%ஏ0%ஆஏ%9ஆ%ஏ0%ஆF%81%ஏ0%ஆஏ%9F%ஏ0%ஆF%81:','ஷொர்ட்')
[:சுடு: ]
வீரப்பன் தயவால் காடு காடாய் இருந்தது. இனி வனத்துறையினர் ஆசிர்வாதத்துடன்
மரங்கள் வெட்டப்படும்
அது எப்படிங்க காசி, டைனோ டைப்லையே எழுதுறீங்க? ![]()
காசி சூப்பர் பதிவு.
ஐயோ! உஷா... சுற்று புறச் சூழல் துறையில் பணி புரிந்த என் நண்பன் சொன்னத அப்படியே சொல்லிட்டீங்க.
¸¡º¢Âñ½¡ þý¦É¡Õ Å¢¨Ç¨Åô ÀüÈ¢Ôõ ¿¡ý ¸Å¨ÄôÀθ¢ý§Èý.
“ÁìÉ¡” ¡¨É¨Âô ÀüÈ¢ ¦¾Ã¢ÔÁ¡? þý¦É¡Õ Å£ÃôÀý ±ýÚ «Æì¸ô Àð¼Ð.
«ó¾ «Ç× Åñ½¡ò¾¢ôÀ¡¨È À̾¢Â¢ø º¢Ä ¸¡Äõ ÓýÒ «ð¼¸¡ºõ ¦ºö¾Ð. ÅÉòШÈ¢ý Á¢Ìó¾ ÓÂüº¢ìÌôÀ¢ý À¢Êì¸ôÀð¼Ð. «Ð þÕó¾Å¨Ã ¦¸¡ïºõ ¦ºÆ¢ôÀ¡¸ þÕó¾ «ì ¸¡ðÎôÀ̾¢ «Ð À¢Êì¸ôÀð¼ ´Õ ÅÕ¼ò¾¢ø ¦ÀÕõ À¡¸õ «Æ¢ì¸ô À𼾡¸ ´Õ Òò¾¸ò¾¢ø ÀÊò§¾ý. «Ð þÕó¾ Ũà ¡ÕìÌõ «ôÀ̾¢ìÌû ¦ºøÄ н¢Å¢ø¨Ä.
«§¾ §À¡ø þÐŨà ¦¸¡ïºÁ¡¸ «Æ¢ó¾, þÉ¢§Áø Å¢¨ÃÅ¡¸ «Æ¢Âô§À¡Ìõ «Æ¸¢Â ºò¾¢ÂÁí¸Äõ ¸¡ð¨¼ ¿¢¨ÉòÐ ¸Å¨ÄôÀθ¢§Èý. ¬õ þРŨà ţÃôÀý ÀÂò¾¢ø «íÌ ¾¨Ä ¸¡ð¼¡¾Å÷¸û þÉ¢ н¢×¼ý §À¡Å¡÷¸û (±ýɾ¡ý Å£ÃôÀý ÁÃõ ¦ÅðÊÉ¡Öõ «Ð, þÉ¢ ÀÄ áÚ §À÷ §º÷óÐ ¦Åð¼ô §À¡Å¨¾ Å¢¼ Á¢¸į̀ÈÅ¡ö ¾¡ý þÕìÌõ.)
¸¡º¢Âñ½¡ «íÌ ¦ºøÅ¾¡Â¢ý Å¢¨ÃÅ¡ö ¦ºøÄ×õ...
¸Å¨Ä§Â¡Î,
ÓòÐÌÁÃý
i am sorry i typed this reply in notepad using Ekalppai and then paste it here. Even though its showing junk characters. what happen to my “Pinnuttam”.
Muthu
முத்துக்குமரன், இதோ மாத்திப் போட்டுட்டேன்:
காசியண்ணா இன்னொரு விளைவைப் பற்றியும் நான் கவலைப்படுகின்றேன்.
“மக்னா” யானையைப் பற்றி தெரியுமா? இன்னொரு வீரப்பன் என்று அழக்கப் பட்டது.
அந்த அளவு வண்ணாத்திப்பாறை பகுதியில் சில காலம் முன்பு அட்டகாசம் செய்தது. வனத்துறையின் மிகுந்த முயற்சிக்குப்பின் பிடிக்கப்பட்டது. அது இருந்தவரை கொஞ்சம் செழிப்பாக இருந்த அக் காட்டுப்பகுதி அது பிடிக்கப்பட்ட ஒரு வருடத்தில் பெரும் பாகம் அழிக்கப் பட்டதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். அது இருந்த வரை யாருக்கும் அப்பகுதிக்குள் செல்ல துணிவில்லை.
அதே போல் இதுவரை கொஞ்சமாக அழிந்த, இனிமேல் விரைவாக அழியப்போகும் அழகிய சத்தியமங்கலம் காட்டை நினைத்து கவலைப்படுகிறேன். ஆம் இது வரை வீரப்பன் பயத்தில் அங்கு தலை காட்டாதவர்கள் இனி துணிவுடன் போவார்கள் (என்னதான் வீரப்பன் மரம் வெட்டினாலும் அது, இனி பல நூறு பேர் சேர்ந்து வெட்டப் போவதை விட மிகக்குறைவாய் தான் இருக்கும்.)
காசியண்ணா அங்கு செல்வதாயின் விரைவாய் செல்லவும்...
கவலையோடு,
முத்துகுமரன்
தங்க தாரகை மறப்பது ஸுப்பர்.
செவ்வாய், 19.10.04, 13:31:13 இராஜ. தியாகராஜ சொன்னது:அன்புள்ள காசி ஆனந்தன்,
வணக்கம். யார் என்ன சொன்னாலும், இத்தனை வனத்துறையினரையும், காவல் துறையினரையும், சுற்றுலா பயணிகளையும், கடத்தியவன், பெரும்பான்மையினரை ஈவிரக்கமின்றி கொன்றவன், முடிவு மற்ற சமூக விரோதிகளுக்கொரு பாடமே. ஒசாமா உட்பட வன்முறையைத் தூக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வலுவான காரணமிருக்கலாம். ஆயின் வன்முறையின் முடிவு வன்முறையே. இது காலங்காலமாய் காலத்தின் பாடம்.
அன்புள்ள காசி,
சூஊஊஊப்பர்!! யானைகள் நடமாட்டம் ஏற்கெனவே அதிகரிக்க ஆரம்பிச்சாச்சு! அதுலே
இருந்து ஒரு அஞ்சை பிடிச்சு வேறு இடத்துலேயும் போட்டாச்சு!
இனி 'சந்தன சோப்பால் துணி துவைக்கவேண்டியது''தான் பாக்கி!
செவ்வாய், 19.10.04, 15:37:23 Thangamani சொன்னது://வீரப்பனுக்கும் காவல்துறைக்கும் நடுவே மாட்டி அல்லாடிய கிராமப்புறப் பொதுமக்கள் இனி நிம்மதியாக விறகு பொறுக்க, மாடு மேய்க்கக் காட்டுக்குப் போகலாம்// எனக்குத்தெரிந்து நீங்கள் ஒருவர்தான் மக்களைப் பற்றி யோசித்திருக்கிறீர்கள், மற்றவர்கள் எல்லாம் தமது வழக்கம் போல தீபாவளி கொண்டாடுகிறார்கள்!
செவ்வாய், 19.10.04, 15:51:01 பாலாஜி சுப்ரா சொன்னது:கருத்துக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்... 'சூடான விவாதப் பொருள்' அமைப்பு மிகவும் நன்றாக, ட்ராக்பேக், பிங்பேக் போன்றவைக்கு எளிய மாற்றாக இருக்கிறது. நன்றி.
செவ்வாய், 19.10.04, 17:05:30 பாண்டி சொன்னது:ஆமா.... விறகு பொறுக்கபோன எடத்துல வேரப்பன் பொதச்ச பணம் பொறுக்கி பணக்காரனா ஆனா என்கவுன்ட்டர் வருமா?
![]()
¸¡º¢,
¿øÄ À¾¢×. ´Õ º¢ýÉ §¸ûÅ¢...¸¡º¢Ä¢í¸õÛ ±ý ŨÄôÀ¾¢×§Ä «ôÀô§À¡ À¢ýëð¼õ ¾÷ÈÐ ¿£í¸ ¾¡É¡?
- «Õñ ¨Åò¿¡¾ý
¸¡º¢,
¿øÄ À¾¢×. ´Õ º¢ýÉ §¸ûÅ¢...¸¡º¢Ä¢í¸õÛ ±ý ŨÄôÀ¾¢×§Ä «ôÀô§À¡ À¢ýëð¼õ ¾÷ÈÐ ¿£í¸ ¾¡É¡?
- «Õñ ¨Åò¿¡¾ý
தமிழ்லே தெரியணும்னா என்ன பண்ணனும் ![]()
அப்பாடா...மன்னிசுக்கங்க..
இந்தப் பதிவு நல்லாயிருந்தது...காசி லிங்கம் அப்படீங்கற பேருலே பின்னூட்டம் தர்றது நீங்கதானா...இல்லை வேற காசியா?!?!
அனைவருக்கும் நன்றி.
அருண், அது நான் நானேதான் அய்யா
துளசி: //அதுலே
இருந்து ஒரு அஞ்சை பிடிச்சு வேறு இடத்துலேயும் போட்டாச்சு! //
இது புரியலையே
'அப்பன் வீரன்', நீரும் டைனோ, நானும் டைனோ, நினெச்சுப் பாத்தா எல்லாரும் டைனோ![]()
>>>>'அப்பன் வீரன்', நீரும் டைனோ, நானும் டைனோ, நினெச்சுப் பாத்தா எல்லாரும் டைனோ <<<<
அடக்கொடுமையே! :ப்
-'நிஜ' டைனோ.
புதன், 20.10.04, 17:29:31 மூர்த்தி சொன்னது:அப்படியே ஒருமுறை நண்பர் கவிதன் அவர்களின் படைப்பையும் படித்துவிடுங்களேன்.
புதன், 20.10.04, 22:32:13 Tulsi Gopal சொன்னது:அன்புள்ள காசி,
அந்த அஞ்சு யானைங்களையும், மதி 'துளசிதளம்' ப்ளாக் அலங்காரங்களுக்குப்
பயன்படுத்தியிருக்காங்க!
எல்லாம் ஒரு டெக்னிக்கல் சப்போர்ட்தான்!
அன்புடன்,
துளசி.
நன்றாக எழுதி இருகிறீர்கள் ..
சனி, 23.10.04, 16:46:05 nila_va2@hotmail.com சொன்னது:வீரப்பனின் மரணம் ௯ஒர் பெரிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். நரகாசுரனை பிடித்தது போலவே இருக்கிறது.
கனடாவிலிருந்து
\ நிலா.
ஞாயிறு, 24.10.04, 23:34:36 Dondu சொன்னது:வீரப்பன் மகள்களைப் பார்த்து மனம் சங்கடப்பட்டது. பிரபாவிற்கு T.C. கொடுத்தது அக்கிரமம். பள்ளி நிர்வாகிகள் மனம் மாறியது குறித்து மகிழ்ச்சி.
ராகவன்
ஈழதமிழர்கள் வீரப்பனை, மாவீரர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.
முன்னர் இராவணன், இப்பொழுது வீரப்பன், இப்படி வில்லன்களை எல்லாம் ...
தமிழ் படங்கள் பார்கிறத தடை செய்யணும்.
ஈழத் தமிழர் ஒருபோதும் வீரப்பனை மாவீரராகப் பார்த்ததில்லை. ஆனால் தமிழகத்தில் ஏராளமானோர் அப்படிப் பார்க்கிறார்கள்.(பி.பி.சி கேட்டிருப்பீர்கள்). தவிர, இராவணண் ஒரு புராணப் பாத்திரம். ஒரு புராணத்தைப் பயன்படுத்தி ஈழத்த்மிழரை/அரசனை அரக்கராய்ச் சித்தரிக்க முற்பட்டதன் எதிர்வினைவே அது. இது கூட பார்ப்பணியத்துக்கெதிராக தமிழகத்திலேயே வலுவாகப் பயன்படுத்தப்பட்டது. (நூல் எழுதப் பட்டது கூட அங்குதான்.)
வெள்ளி, 05.11.04, 06:58:26மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
11:11:43 - செவ்வாய், 19.10.04 -


