சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள்
1. தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும் தங்கள் பெயரை உள்ளிடச் சொல்லியிருந்தநிலை போய், இனி தமிழில் மட்டும் போதுமானதாக இருக்கும். அப்படியென்ன தமிழ் வெறியா? இல்லை, முகப்புப் பக்கத்தில் இருக்கும் பட்டியலில் வலைப்பதிவரின் பெயரின் முதலெழுத்தை வைத்துத்தேட, முதலில் ஆங்கிலம் எளிதாக இருந்தது. எனவே அப்படி செய்திருந்தேன். ஆனால், இரண்டு பெயர்களை உள்ளிடும்போது தமிழில்/ஆங்கிலத்தில்தான் உள்ளிடுகிறார்களா என்று சோதிக்கவில்லை. இதனால் பலர் பிழையாக உள்ளிட்டிருந்தனர். சிலர் அழகாக இரண்டையும் மாற்றி (ஆங்கிலம் கேட்கும் இடத்தில் தமிழிலும், தமிழ் கேட்கும் இடத்தில் ஆங்கிலத்திலும்) உள்ளிட்டிருந்தார்கள்! எனவே இம்மாதிரிப் பிழைகள் வராமலிருக்க உள்ளிடும் சொல்லை சோதிக்க வேண்டியிருந்தது. இவ்வளவு செய்யும்போது, நேரடியாக தமிழில் முதலெழுத்தை வைத்துத்தேட ஏற்பாடு செய்துவிடலாமே என்று அதையும் செய்துவிட்டேன். எனவே இப்போது பெயரை ஒருமுறை, யுனிகோடு தமிழில் இட்டால் போதும். அப்படி இடாவிட்டால் ஏற்றுக்கொள்ளாது.

2. இதனோடு மேலே சொன்னவாறு வலைப்பதிவரின் பெயரின் தமிழ் முதலெழுத்தை வைத்துத்தேடும் வண்ணம் முகப்புப்பக்கம் மாற்றப்பட்டுள்ளது.

3. தளங்களின் முகவரியை உள்ளிடும்போது தட்டுப்பிழை போன்ற காரணங்களால் தவறு ஏற்படுகிறது. அதை அவர்களே சோதித்துப் பார்க்க 'முன்பார்வை' என்ற கட்டம் ஏற்படுத்தி, முகவரிகளை சுட்டிகளாக்கிக் காட்டுகிறேன். ஆனாலும் பலர் தவறு செய்திருந்தனர். மஞ்சள் கோட்டைவிட, தடுப்புச்சுவர்தானே நம் சாலைகளில் பயனளிக்கிறது. அதேபோல, இப்போது இந்த முகவரியை வெறுமனே வாங்கிவைத்துக்கொள்ளாமல், அந்த முகவரியில் ஒரு தளம் இருக்கிறதா, என்று சோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூடவே அந்தத்தளம் யுனிகோடு/திஸ்கி தமிழில் அமைந்துள்ளதா என்பதும் சோதிக்கப்படுகிறது. நம் தமிழர்களே 'ப்ளாக்'
சரியான யுனிகோடு தளம்
ஆங்கிலத்தில் அமைந்த தளம்
எட்டப்படாத தளம். (தட்டுப்பிழையாக இருக்கலாம்)
4. இதற்கும்மேல், தகவல்களைச் சேமிப்பதற்கு முன் ஒருமுறை அவர்கள் தளத்தையே முன்பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பின் யாரும் அறியாமலோ/கவனக்குறைவாகவோ தவறு செய்யமுடியாது. வேண்டுமென்றே செய்தால் எந்த சோதனைக்கும் டிமிக்கி கொடுக்க முடியும். யாரும் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

எது எப்படியோ, எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக PHP/MySQL கொண்டு மென்பொருள் எழுதுவது பிடிபட ஆரம்பித்துவிட்டது.
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search தமிழ்மணம் தளத்தில் சில மாறுதல்கள்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
-/¦ÀÂâĢ. சொன்னது:«ñ§½, ¿£í¸ ±í§¸§Â¡ §À¡öËí¸. :¨¸: Å¡úò¾ ꢸ¨Ä; Å½í¸ ¿£í¸ ¬!º¡Á¢Â¢ø¨Ä. §Àº¡Áø, šâ¼ðÎÁ¡ ±ýÚ À¡÷츢§Èý. :ஐ:
¿õÁ ¾¢Š¸¢ À¾¢× ¦À¡¨ÆîÍìÌÁ¡ñ§½, þø§Ä äɢ째¡÷ð ºð¼òÐÄ ¦À¡ÍìÌýÛ ¿¢÷Å¡¸¢ ¸¡½¡Á þí¸¢Ä£ÍÀ¾¢×ýÛ ¦Ãƒ¢ò¾¡Ã¡Å¢ô §À¡öÎÁ¡?
¦¸¡ïºõ ¸, ¹ Åâ¸û ì, í ¬É¡ ¾Á¢ú ¦Áö¡ÌÁøÄÅ¡? ![]()
கலக்றே காசி
)))))))))))
அருமை காசி அண்ணே. ஜமாய்ச்சுட்டீங்க!
திங்கள், 13.09.04, 06:40:02 காசி சொன்னது://-/பெயரிலி: ..வாரிடட்டுமா என்று பார்க்கிறேன்..//
அகோ வாரும் பிள்ளாய்
ஆளையே வாரும் சொல்லாய்
ஒருங்குறியா என்று உரசிப் பார்த்தாலும் நான் ஒருகுறிக்கும் ரசிகனல்லன். திஸ்கியும் சம்மதமே. காசா பணமா, உங்கள் தளத்தையும் சோதித்துப் பார்க்கவேண்டியதுதானே.
பொதுவாக க்+{அ...ஔ} அனைத்தையும் 'ககரம்' என்று சொல்வார்களே, 'ககரம்' என்பதன் முதலெழுத்தாக 'க'வை காட்டுகிறேன். வாசிக்கும்போதும் க,ங,ச,...என்று வாசிப்பது எளிதுதானே. புள்ளி வைப்பது எளிது. யோசிக்கிறேன்.
திங்கள், 13.09.04, 09:39:46 -/பெயரிலி. சொன்னது:³ÂýÁ£÷ ¿ýÈ¢. ¿ýÈ¢. ¯Ãº¢ôÀ¡÷òÐ ¦ÅÚõÀ¢ò¾¨Ç¡öô§À¡öŢΧÁ¡ ±ýÈ ÀÂò§¾¡Î ¯Ãºô§À¡¸¢§Èý. (¯Ãº¢¬ø, «ÊŢơо¡§É?)
திங்கள், 13.09.04, 10:43:51 Kasi சொன்னது:உரசுங்க ரமணி ஒண்ணும் பயப்படவேண்டாம். என்ன ஆனாலும் நான் பாத்துக்கறேன்.(தருமி வசனமெல்லாம் இல்லை
)
பிரமாதம் காசியண்ணே!
“Out of Sight is Out of Thought”னு சொல்வாங்க
“முன்பொரு காலத்தில்...” அப்பிடின்னு ஆரம்பிச்சி “அவர் அதைச் செய்தார்... இதைச் செய்தார்”ன்னு பழம்பெருமை வரலாறாகிப் போய் காணாமலெயே போய்விடாமல் எப்பவும் மனசுல நிக்கற மாதிரி அப்பப்ப என்னென்னவோ செஞ்சி கலக்குறீங்க
செவ்வாய், 14.09.04, 07:54:39 ஈழநாதன் சொன்னது:தளங்களை இனைப்பதற்குச் சிறப்பான முறை.அப்படியே எனது பதிவின் பெயரை அகவிதைகள் என்று மாற்றி விடுகிறீர்களா?
புதன், 29.09.04, 05:45:44மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
22:55:40 - ஞாயிறு, 12.09.04 -


