சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
ஆர் எஸ் எஸ் (அல்ல்து ஆடம்) செய்தியோடை - ஒரு எளிய விளக்கம்
நம்ம ஊரில் தினசரிப் பேப்பர் விக்கிறதுக்கு ஒரு முக்கியமான அவுட்லெட் பெட்டிக்கடைகள்தான் இல்லையா? அங்கே தினசரி காலையில் தினத்தந்தியும், மாலையில் மாலைமுரசும் (சும்மா ஒரு பேச்சுக்கு)வந்துட்டேதான் இருக்கு. சிலபேர் தினசரி வாங்கிப்படிச்சாலும், சிலர் தினமும் வாங்கமாட்டாங்க. ஆனா பஸ்ஸி லோ பைக்கிலோ போயிட்டே இன்னிக்கி அதில் என்ன வந்திருக்குன்னு பாக்கறோமில்லையா, எப்படி?
பெட்டிக்கடையில் வரிசையாத் தொங்கவிட்டுக்கிற போஸ்டரால். நியூஸ்பேப்பருக்கு போஸ்டர் பண்ணுற அதே வேலையை தான் வெப்சைட்டுக்கு ஆர்எஸ்எஸ் செய்தியோடை(RSS newsfeed/Atom newsfeed) பண்ணுது. முழுப் பேப்பரும் படிக்காமலே (அல்லது காசு குடுத்து வாங்கும் முன்னமே) அதில் இன்னிக்கு என்ன வந்திருக்குன்னு தெரிஞ்சுக்கிறோம். அதே மாதிரி வெப்சைட்டுக்குப் போகாமலே என்ன புதுசா போட்டிருக்காங்கன்னு இந்த செய்தியோடையை வெச்சுத் தெரிஞ்சி க்கலாம்.
எப்படி பேப்பர் அச்சடிக்கிறவங்க, பேப்பர் கடைக்கு அனுப்பும்போது கூடவே போஸ்டரும் அனுப்பறாங்களோ, அதே மாதிரி வெப்சைட் நடத்துறவங்க, அங்கே போய்ப் பாக்கும்போது நமக்குத் தெரியுதே அதுகூட, செய்தியோடையயும், வேற ஒரு அட்ரசிலே வெச்சிருக்காங்க. கடைக்காரர் எடுத்து மாட்டலைன்னா நம்மால போஸ்டர்லே என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கமுடியுமா?. அதே போல இந்த செய்தியோடைகளைப் படிக்க இதுக்குன்னே இருக்கிற சில படிப்பான்கள்(newsreaders) உதவுது. அவைதான் திரட்டி(aggregator)ன்னு சொல்றோம்.
தமிழ்மணம்.காம் (http://www.thamizmanam.com) அப்படின்னு ஒரு தளத்தில் இந்த மாதிரி செய்தி யோடைத் திரட்டி ஒண்ணு செஞ்சுவெச்சிருக்கோம். அங்கே போனா வெறும் போஸ்டர் மட்டும் படிக்கலாம். ரயி ல்வே ஸ்டேஷன் புக்ஸ்டாலில் போஸ்டர் மட்டும்படிக்கத்தான் நேரமிருக்கும், சில சமயம் அதுவே சுவையாயும் இருக்கும். அதுமாதிரி இங்கே என்ன இன்னிக்கு லேட்டஸ்டா வந்திருக்குன்னு யாரும் நம் வீட்டில் பிட் நோட்டீஸ் போடாமலே, நாம் வாங்கும் பேப்பர்க்குள்ளே ஒழிச்சு வெச்சுக் குடுக்காமலேயே தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்புத்தான் இந்த ஆர்எஸ்எஸ் செய்தியோடை. மத்தபடி இது லெ·ப்டும் இல்லை, ரைட்டும் இல்லை.
என்ன விளங்கிற மாதிரி சொன்னேனா?
(இன்று மரத்தடியில் எழுதியது)
இதைப் பத்தி இன்னும் ஆழமாத் தெரிஞ்சிக்க விருப்பமிருக்கிறவங்க (மட்டும்), நம்ம சகோதரர் உமர் எழுதியிருக்கும் இந்தத் தொடர்மடல்களைப் பாருங்க.
http://nila.brinkster.net/kanani/rss_essays.htm
(நன்றி: எழில்நிலா மகேன்)

RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search ஆர் எஸ் எஸ் (அல்ல்து ஆடம்) செய்தியோடை ஒரு எளிய விளக்கம்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
sakaran சொன்னது:நீங்கள் தந்த சுட்டி உதவியாக இருந்தது... நன்றி..!
வெள்ளி, 10.09.04, 18:39:40 எழில்நிலா மகேன சொன்னது:வணக்கம் காசி
மேலே காணப்படும் சுட்டியை கீழ்க்கண்டவாறு தயவுசெய்து மாற்றிவிடவும்.
http://nila.brinkster.net/k...
அன்புடன்
எழில்நிலா மகேன்
மகேன், செய்தாயிற்று.
வெள்ளி, 08.10.04, 00:13:53மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
16:45:29 - வெள்ளி, 10.09.04 -