சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்
இப்போது நான் செய்துள்ள வசதிகள் முதல் கட்டமே. இன்னும் இந்தத் தளத்தின் பயன்பாட்டையும் உலாவர் தேவைகளையும் அறிந்து மேலும் பலவற்றை ஏற்படுத்த மனதில் எண்ணியுள்ளேன். ஆனால் அதற்கு முன் குறைந்தது ஒரு மாதம் இந்த நிரல் எழுதும் பொழுதுபோகில் இருந்து கட்டாய ஓய்வெடுக்க உத்தேசம். தளம் இயங்குவதைத் தடுக்கும் பிழைகள் தவிர, இனி பெரிய மாற்றங்களை இப்போதைக்கு செய்யப்போவதில்லை.
எல்லா விபரங்களும் கட்டளைகளும் தானுணர்த்தியாக (intuitive) இருக்கும்வண்ணம் வடிவமைத்திருப்பதால் பெரிதாக எந்த விளக்கமும் தேவையிருக்காது. அனைவரும் பயன்படுத்திப்பார்த்து கருத்துக்களைக் கூற வேண்டுகிறேன்.
பல வாரங்களாக என் மனம் இதிலேயே கிடந்ததால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைத் தாங்கிக்கொண்ட என் மனைவிக்கும் மகளுக்கும் இந்தத் தளம் சமர்ப்பணம். அவ்வப்போது ஆலோசனையும் ஊக்கமும் அளித்த நண்பர்களுக்கு என் நன்றி.
அன்புடன்,
-காசி
RSS 2.0 ஓடை, பின்தொடர்பு, அச்சிடல், மின்மடலிடல்
Local search வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
மறுமொழிகள்:
தேசிகன் சொன்னது:மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
திங்கள், 23.08.04, 02:53:06 sakaran சொன்னது:ரொம்ப அருமையாக அமைந்திருக்கிறது தளம். நிறைய சிந்தனைகளை பயன்பாட்டில் கொண்டுவந்திருக்கீங்க... தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தொடுப்புகளின் பட்டியல், வலைப்பதிவர் தானாகவே இணைக்கும் வழி என்று நிறைய விசயங்கள் முழுமையாக இருக்கின்றன.. முக்கியமாக வண்ணங்களும் வடிவமைப்பும்.
வாசகர் பகுதியில், கடைசி 24 மணி நேரம் தவிர, செலக்ட் செய்யும் விதமாக, 48,72 மணிநேரம் என்பது போல இருந்தால் உதவியாக இருக்கும். ஒரு நாள் பாக்காமல் விட்ட வற்றை அடுத்தமுறை வரும்போது பார்க்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
திங்கள், 23.08.04, 03:44:46 ராசா சொன்னது:அருமையான முயற்ச்சிங்க, அதுவும் கடந்த இருபத்து நான்கு மனிநேரங்களில் புதுபிக்கப்பட்டவைங்கிறது ரொம்ப உபயோகமானதா இருக்கும்.
என்னன்னு சொல்றது, சும்மா கிளப்பிட்டீங்க!!
என்னப்பு,
இருந்தாப்டி இருந்து கலக்கிபுட்டியலே! பிரமாதம்!
திங்கள், 23.08.04, 07:18:29 சுந்தரவடிவேல் சொன்னது:போன வாரம் சந்தோஷ் குரு போட்டு உடைச்சதிலிருந்து முதலில் அங்குதான் போகிறேன். யார் யாரு என்ன எழுதிருக்காங்கன்னு மிகச் சுலபமாத் தெரிஞ்சுக்க முடியுது. ரொம்ப நன்றி காசியண்ணா, உங்கள் குடும்பத்துக்கும் சேர்த்து! :கை:
திங்கள், 23.08.04, 07:23:40 மெய்யப்பன் சொன்னது:காசி,
நல்ல முயற்சியினால் அமைந்த அருமையான வலைத்தளம். சிலநாட்களாகவே இங்கிருந்துதான் எல்லா வலைப்பதிவுகளையும் படிக்கிறேன். இந்தப் பணிக்கு எனது நன்றிகள்.
காசி, சில நாட்கள் தமிழ்மணத்தை நுகர்ந்த அனுபவத்தில் சொல்கிறேன்:
தமிழ்மணம் தமிழ் வலைப்பூ வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது.
தமிழ் வலைப்பூக்களை ஒருசேர படிக்க வழி செய்துள்ள இதுதான் உண்மையான 'தமிழ்மாலை'.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நன்றி.
பயனுள்ள வலை அரங்கமாக இருக்கிறது. உங்களின் இந்த முயற்சி , மிகவும் பாராட்டப் பட வேண்டியது. தமிழ் வலைத் தளங்களை படிப்பதை எளிதாக்கி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
திங்கள், 23.08.04, 14:36:05 நவன் பகவதி சொன்னது:என்னன்னு சொல்றது. கிளப்பிட்டீங்க போங்க. நம்ம சந்தோஷ் போட்டு உடைப்பதற்கு முன்னாடியே நான் 'bloglines, sharpreader, rssowl, bottomfeeder'ன்னு உபோயகிச்சிட்டுருந்த எல்லத்தையும் ஒரு ஓரமா ஒதுக்கு வச்சுட்டு 'தமிழ்மணம்' மட்டும் தான் உபயோகிக்கறேன்.
அப்படியே 'முந்திரிக்கொட்டை'யா நானும் ஒன்னு சொல்லிடறேன். நீங்க இப்பம் டெஸ்ட் செஞ்சிட்டிருக்கிற வெர்சன் இன்னும் ஜோரா இருக்கு.
//கொஞ்ச நாளாக நான் அதிகம் வலைப்பதிக்காமல் இருப்பதற்கு ஒரு (முக்கியக்) காரணம், நிரல் எழுதுவது. //
அப்பாடி. இனிமேல் “சித்தூர்க்காரனின் சிந்தனை”களை அடிக்கடி படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி. :குடி:
திங்கள், 23.08.04, 16:57:24 ராதா சொன்னது:நான் சொல்ல வந்ததை இரண்டு மெய்யப்பன்களுமே சொல்லிவிட்டார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இத்தளத்தை மேலும் மெருகேற்ற முயற்சியுங்கள்.
திங்கள், 23.08.04, 17:23:57 sundarrajan சொன்னது:அருமையான முயற்சி.
ப்ளாக்லைன்ஸ் தளத்திற்கு டாட்டா சொல்லீட்டேன்...
உங்களுக்கு ஒரு தனிமடலும் அனுப்பி உள்ளேன்.
திங்கள், 23.08.04, 18:41:20 Arun சொன்னது:அன்புள்ள காசி,
அற்புதமான முயற்சி.
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாவிடில், இதெல்லாம் சாத்தியமே இல்லை!
மீண்டும் மீண்டும் நன்றிகள்.
பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை!
- அழியா அன்புடன் அருண்
திங்கள், 23.08.04, 21:10:19 Chandravathanaa சொன்னது:நல்ல வேலை காசி.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றியுடன்
நட்புடன்
சந்திரவதனா
ரெண்டு மூணு வாரமாவே நான் பாத்தூட்டுத்தான் வர்ரேன். நல்லா வந்திருக்கு. நன்றி.
செவ்வாய், 24.08.04, 03:57:45 Kasi சொன்னது:அனைவருக்கும் நன்றி!
சாகரன்://வாசகர் பகுதியில், கடைசி 24 மணி நேரம் தவிர, செலக்ட் செய்யும் விதமாக, 48,72 மணிநேரம் என்பது போல இருந்தால் உதவியாக இருக்கும். ஒரு நாள் பாக்காமல் விட்ட வற்றை அடுத்தமுறை வரும்போது பார்க்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்... //
நல்ல யோசனை. அடுத்த பதிப்பில் செய்துவிடுகிறேன்.
நண்பர்களே, வேறு யோசனைகள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
-காசி
நன்றி காசி...
மேலும், தளத்தில் Expiry மற்றும் no-cache, Meta tags இல்லை.
அதனால் புதிய பதிவுகளை பார்க்க ஒவ்வொரு முறையும் ரீலோடு செய்ய வேண்டி இருக்கிறது.
பிராக்ஸி உபயோகிப்பவர்களுக்கும் ,ரீலோடு செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும் புதிய பதிவுகள் தெரியாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.
அதையும் கொஞ்சம் சரி செய்துவிடுங்களேன்.
சாகரன், செய்துவிட்டேன். நன்றி.
செவ்வாய், 24.08.04, 13:23:41 Thangamani சொன்னது:அன்புள்ள காசி
நான் இன்றைக்குத்தான் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் உழைப்பும் ஆர்வமும் எப்போதும் வியப்பூட்டுகிற, முன்மாதிரியாய் இருக்கிற விசயங்கள். மிக நல்ல முயற்சி. நன்றி.
தமிழ் வலைப்பதிவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க காசி சார்! இந்த மாதிரி ஒரு வலைத்தளத்தைப்பத்தி நான் ஒரு ஒன்றரை வருடமா கனவு கண்டுட்டிருக்கேன். முதல்ல நாம ஒரு பத்து பதினைந்து பேர் எழுத ஆரம்பித்தபோதே இது இந்த அளவுக்கு வளரும்னு எனக்கு நல்லா தெரியும். உங்களோட 'இன்று புதிதாய் எழுதப்பட்டவை' பக்கம் ஒரு வரப்பிரசாதம். யப்பா, ஒரு நாளைக்கு இத்தனை பேர் எழுதறாங்களான்னு பிரமிக்கவைக்குது. ஆனா, ௯௯௯-லிருந்து ய்ய்ய் அப்படின்னு காமிக்காம ய்ய்ய் (௯௯௯) அப்படின்னு காமிச்சா படிக்க வசதியா இருக்கும். அப்புறம் ஒரு வேண்டுகோள். என்னைமாதிரி சிலபேர் வாரத்துக்கு ஒருமுறைதான் வலைப்பதிவுகள் படிக்கறோம். எங்களையும் மனசில வெச்சிக்கிட்டு கடந்த வாரத்தில் எழுதப்பட்டவை-ன்னு வலைப்பதிவுகளோட தலைப்புகளை மட்டும் ஒரு லிஸ்ட் போட்டு தாரீயளா?
செவ்வாய், 24.08.04, 18:00:59 -/peyarili. சொன்னது:±øÄ¡Õõ ¦º¡ýÉôÀ¢ÈÌ Ò¾¢¾¡¸ ±ýÉò¨¾î ¦º¡øÄ¢Å¢¼ÓÊÔõ? ¬¸, ´§Ã “«ôÀʧ” ±ýÚ §À¡ðÎŢθ¢§Èý.
¿ýÈ¢, ¾Á¢úÁ½òÐìÌ ÁðÎÁøÄ, ¸¨¼º¢Â¡¸ ŨÄôÀ¾¢§Å¡÷ ±ø§Ä¡Õõ ´òÐô§À¡¸¢ÈÁ¡¾¢Ã¢ ´Õ À¢ýëð¼õ ¸¢¨¼ì¸ ÅÆ¢ Àñ½¢Â¾üÌ.
பெயரிலி குசும்புக்கு அளவே இல்லை ![]()
காசி அண்ணா,
இந்த முயற்சி ரொம்பவும் அருமை!
நிற்க,
10:45 நிர்வியம் : À¢Ã¢×
¾É¢¨Á ±ý ¯Â¢÷ Å¢Õðºò¨¾ ¾È¢òРŢΞüÌû ÅóРŢÎ! ....................
என தமிழ்மணத்தில் இருப்பது ஆனி 11, 2004, எழுதியது!
ஏன் அது கடைசி 48,72 மணி நேரத்திற்குள் வருகிறது?
தொழில்நுட்பக் கோளாரா? ஒருதடவை என்ன என்று பாருங்கள்???
அன்புடன்
நிர்வியா
நிர்வியா,
முதன்முறையாக பட்டியலில் சேர்க்கப்பட்ட வலைப்பதிவுகளுக்கு முதல் 24 மணிநேரம் இந்தக் குழப்பம் இருக்கும் பிறகு சரியாகிவிடும். எல்லா பழைய பதிவுகளும் சேர்க்கப்படும் வரைதான் இந்தத் தொல்லை. நெற்றிக்கண் போல தொடங்கியதுமே பட்டியலில் ஏற்றப்பட்டவற்றிற்கு இந்தத் தொல்லை இல்லை. எனவே ஒரு நாள் பொறுங்கள்.
அன்புடன்,
-காசி
இன்னொரு காரணத்தாலும் பழைய பதிவுகள் மீண்டும் புதிதாக அவதாரமெடுக்கும், தெரிந்தோ தெரியாமலோ எல்லாப் பக்கங்களையும் பதிப்பிக்கச் சொன்னால் (republish all posts) அவற்றை புதிதென்று நினைத்து காட்டவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஒரு பதிவு மாற்றி எழுதப்பட்டும் பதிப்பிக்கப் படலாம் அல்லவா? இயந்திரத்துக்கு இரண்டுக்கும் வேறுபாடு காணுவது கடினம்.
வியாழன், 26.08.04, 12:26:38 அன்பு சொன்னது:அண்ணே அதோட நம்ப கண்ணன் சாருக்குண்ணு இதுக்கு இணையா (அல்லது அது மாதிரி அதிகம் எழுதுபவர்களுக்கு) ஒரு 'காலம்ன்' ஒதுக்கிட்டீங்கன்னா இன்னும் வசதியாஇருக்கும்னு படுது. ஏன்னா சார் எழுதுறாங்களா அல்லது கொட்டுவந்து கொட்டுறாங்களான்னு தெரியல... ஒரே நேரத்துல்ல 10, 20 தலைப்பு அவங்களோட பதிவுள்ள வந்துடுது - அடுத்தவங்க பதிவுகள்ள ரொம்ப் ஸ்க்ரோல் செய்து தேடவேண்டியதாகிவிடுகிறது.
சனி, 28.08.04, 11:26:51 Moorthi சொன்னது:அன்பு காசி அவர்களுக்கு,
தளம் மிகவும் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது.காசியின் எழுத்துக்கள் என்றால் உண்மையில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருக்கும்.அது வலைப்பூவாக இருந்தால் என்ன நிரலாக இருந்ததல் என்ன?உங்கள் எழுத்துக்களுக்கென வாசகர் குழாமே உண்டு.தொடர்ந்து எழுதுங்கள்
திங்கள், 06.09.04, 22:40:40 சயந்தன் சொன்னது:அற்புதம்
ஞாயிறு, 12.09.04, 06:17:47மறுமொழியிடும்போது கவனிக்க:
விரும்பினால் மறுமொழியினூடே கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்:
- [a href=http://url.com]சுட்டியின் பெயர்[/a] என்பது சுட்டியாகக் காட்டப்படும்.
- [abbr title=text]abbr[/abbr] என்பது <abbr> ஆக மாற்றப்படும்.
- [cite], [code], [em], [strong], [q], [li] — என்பனவும் இதேபோல...
மறுமொழியிட:
Comments must be approved before being published. Thank you!
This item is closed, it's not possible to add new comments to it or to vote on it
01:02:37 - திங்கள், 23.08.04 -


