சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

திங்கள், மே 09, 2005

தமிழ் உள்ளிடும் முறை

நண்பர் அனுராக் கேட்டுக்கொண்டபடி ஒரு சிறு வாக்கெடுப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்கள் தேர்வை சொல்லி உதவுங்கள். மிக்க நன்றி.

கணினியில் தமிழ் எழுத எந்த வகை விசைப்பலகை முறையைப் பயன்படுத்துகிறீர்கள்? (விருப்பத் தேர்வு)







-- வாக்கெடுப்பு முடிவுகள் --

புதன், மார் 30, 2005

எழுத்து மாற்றம் - மூன்று வகைக் கருவிகள்

இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பல நண்பர்கள் அவ்வபோது (பெரும்பாலும் இலவசமாக) அளித்து வரும் கருவிகள்  ஒரு முக்கிய காரணி. இந்தக் கருவிகளில் பலவகைகள் கண்ணுக்குத் தெரிகின்றன. இயங்கும் நுட்பம்/இடம் ஆகியவற்றைப் பொறுத்த ஒரு வகைப்படுத்தல் முயற்சி.

1. மேசைத்தளக் கருவிகள்
2. உலாவியினுள் இயங்கும் கருவிகள்
3. வழங்கி(சேவி?)யில் இயங்கும் கருவிகள்.

[மேலும் வாசிக்க...]

வியாழன், மார் 24, 2005

உங்கள் வலைப்பதிவை தமிழ் தெரியாதோர் வாசிக்கணுமா?

சோதிச்சுப்பார்க்கலாமே:
http://tools.thamizmanam.com/xlit_web.php?url=http://balaji_ammu.blogspot.com

மேலே உள்ள உரலில் ?url= என்ற இடத்தில் உங்கள் வலைப்பதிவின் உரலைப் போட்டு விளையாடிப்பாருங்க.

செவ்வாய், பிப் 22, 2005

திறமை மூலம் 'திறமூலம்'

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவி நாளும் வளர்ந்து வருகிறது மகிழ்வளிக்கிறது. இம்மாதிரி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியப் பயன்களில் ஒன்று இவை மூல நிரல் (source code)  யாருக்கும் கிடைக்கக்கூடியதென்பதால் மென்பொருள் அறிவுள்ள யாரும் தங்களுக்கு விருப்பமான மாற்றங்களைச் செய்துகொள்ளவும்,  தங்களுக்கு முக்கியமாகப்படும், ஆனால் பொதுவான முன்னுரிமைப்பட்டியலில் கீழ்வரிசையில் இருக்கும் சிறு பிழைகளைக் (bugs-க்கு சரியான சொல் தெரியவில்லை) களைந்துகொள்ளவும் இயலும் என்பது.

[மேலும் வாசிக்க...]

வெள்ளி, பிப் 18, 2005

வலைப்பக்கத்தைப் பிரித்துமேய்தல் - தலையும் உடம்பும்.

இந்தத்தொடரை எழுதும்போதே விக்கி கொண்டு சேமிக்கிறேன், இரட்டைவேலை மிச்சம். மறுமொழிகள் இங்கே இடலாம்.

இங்கே வாங்க...

பழைய இடுகைகள்:

08.02.2005

05.02.2005

02.02.2005

21.01.2005

01.01.2005

15.12.2004

08.12.2004

30.11.2004

26.10.2004

18.10.2004