சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
திங்கள், அக் 24, 2005
குழவி, கிழவி, கொளவி, கல்வி?
ஏழு வருசத்துக்கு முந்தி எனக்கு மக பொறந்தா. கொளந்தைக்கு தண்ணியூத்தியுட (குளிப்பாட்ட) ஒரு வயசான அம்மா அண்ணாடும் (தினமும்) வரும். என்கிட்ட ஒண்ணும் பேச்சு வர்த்தை வெச்சுக்காது. எல்லாம் என் சம்சாரத்தோட சரி. (பையன் பொறந்தப்போ அம்மாவைக் கேக்காம யாருக்கும் இந்த வேலை கிடைக்காது. ஆனா பொண்ணு பொறக்கும்பொது ஆட்சி மாறீட்டுதுங்க
) ஒரு அண்டா சுடுதண்ணி வெச்சு, இந்தம்மா காலை நீட்டி உக்காந்து, அரப்பு, எண்ணெய், மஞ்சள் எல்லாம் போட்டு, நீவி நீவிக் தண்ணியுத்தி விட்டா கொளந்தை மணிக்கணக்கா தூங்கும். அப்படி ஒரு சொகமாமே!
இப்படியே ஒரு வருஷம் இது நடந்திருக்கும். மாசாமாசாம் அந்தம்மாவுக்கு காசு கொடுத்துடுவோம். அதுதவிர காபி கொடுப்பாங்க, குடிச்சுக்கும். வேற எதுவும் கொடுக்கல் வாங்கல் இருந்தமாதிரித் தெரியலை. இப்பவும் கிழவி எதிரில் பார்த்தால் என் சம்சாரத்துக்கிட்ட பேசீட்டுப்போகும்.
முந்தா நேத்து இப்படித்தான் அந்தம்மா கையில் அருவாளோட எங்க வீதியில வடபுறமா ஒசரமா வளந்திருக்கிற முள்ளுவேலியை வெறகுக்கு வெட்டப் போயிருக்குது. தென்னந்தோப்போரமா இருந்த வேலி நல்லா நெடு நெடுன்னு அடத்தியா இருந்ததானால, அங்க வெட்டுனா நல்ல கனமான விறகு கிடைக்கும்னு வெட்டப்போக...
'அய்யோ, அய்யோ'ன்னு சத்தம் வர பக்கத்தல இருந்தவங்க ஓடிப்போய்ப் பாத்திருக்காங்க. அந்தம்மா 'அய்யோ, கொளவி கொட்டீருச்சு'ன்னு அழுதுட்டே துடிச்சிருக்குது. அங்கே ஒரு பெரிய கொளவிக்கூடமே 'ஙோய் ஙொய்'னு சுத்தீருக்குது. எப்படியோ இந்தம்மாவை அங்கேருந்து இக்கட்ட கூட்டியாறதுக்குள்ள நிறைய இடத்துல கடிச்சுருச்சு, பாவம்.
அந்தம்மா துடிக்கறதப் பாத்து எங்க பக்கத்தூட்டுக்காரர் ஒரு ஆட்டாவைப்புடிச்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போக ஏற்பாடு பண்ணீருக்கறாரு. அப்ப விசயம் தெரிஞ்சு அந்தம்மாவோட மருமகளும் ஓடிவந்துட்டுது. அந்த வலீலையும், மருமகளைப்பாத்து, 'நீ ஆட்டோவில ஏறாத, எங்க்கூட வராதேன்னு' கத்தீருக்குது கிழவி.
அந்தமா ஆஸ்பத்திரீயிலுமே இதே மாதிரி 'மருமகளை ரூம்புக்குள்லயே வரவேண்டாம்னு சண்டை கட்டுச்சாமா, சொன்னாங்க. என்ன கோவமோ! வயசான காலத்தில முள்ளுவெறகு வெட்ட வெச்சிட்டாளேன்னு கோவமோ, என்னமோ. ராத்திரி எனக்கு இந்த விசயம் சொன்னாங்க. காலையில் எந்திரிக்கும்போதே அந்தம்மா செத்துப்போச்சுன்னு சேதி வந்தாச்சு. அட, கொளவி கொட்டி உசுரு போகுமான்னு ஆச்சரியமா இருக்குது. ஒடம்பு ஏகத்துக்கும் கொட்டீருச்சாமா. அது என்னமோ வெசக்கொளவியாமா. முள்ளு முள்ளா ஒடம்பெல்லாம் தெச்சிருச்சாமா. நம்பவே முடியலை... அத்தனை வலீலும் அந்தம்மா மருமகளை அண்ட வுடலையே! தெச்சிருந்த முள்ளைவிடவா மருமகமேல கோவம் வலிச்சிருக்கும்? ஒண்ணுமே புரியலையே, என்ன படிச்சு என்ன போங்க!
திங்கள், ஜூன் 13, 2005
பிடுங்கி நடப்பட்ட மரம்.
'ஏன் நீங்க ஊருக்குப் போக முடிவு செஞ்சீங்க?' என்று கேட்ட என் அமெரிக்கத் தோழரிடம் அருமையாக விளக்கம் கொடுப்பதாக நினைத்து ஒரு உவமை சொல்லியிருந்தேன். திருமணத்துக்கு முன்பே அமெரிக்கா வந்து, பிறகு விடுமுறையில் ஊருக்குப் போய் துணையுடன் திரும்பி, சில வருடம் ஊர்சுற்றி, பிறகு குழந்தை பெற்று பெற்றோரை அழைத்து சில மாதம் தங்களுடன் வைத்து பெருமைப்பட்டு, தனி வீடு, இரு கார்கள் என்று வளரும் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட எங்கள் அமெரிக்க வாசத்தை, 'மரத்தைப் பிடுங்கி நடுவ'தைப் போல சிரமமானது என்று சொல்லியிருந்தேன்.
திங்கள், ஏப் 25, 2005
பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் எப்போது வரும்?
எச்சரிக்கை:
1. வலைப்பதிவுகளில் சினிமாவைப் பற்றி எழுதுவது இப்போதைய சூடான சமாச்சாரமாகிப் போனதால் நான் இதை எழுதவில்லை.
2. இந்தப் படம் பலருக்குப் பழையதாக ஆகியிருக்கலாம். எனக்கு இது புத்தம் புதிய படம். நேற்றுத்தான் பார்த்தேன். அதனால் இன்று எழுதுகிறேன்
3. இது சினிமா விமர்சனமல்ல. படம் பார்த்ததால் எனக்குத் தோன்றிய எண்ணங்களின் தெளிவில்லாத கலவை. அவ்வளவே.
நேற்றுப் பார்த்த 'காதல்' படம் ஏற்கனவே வலைப்பதிவுகளிலும் யாஹூ-குழுக்களிலும் அல்சப்பட்டபோது மேலோட்டமாகவே வாசித்திருந்தேன். வீட்டில் ஒரு படம் ஓடிக்கொண்டிருக்க (மனைவி உபயம்) எதேச்சையாக அது என்ன படம் என்று கேட்டபின் பேரைச் சொன்னதும் எனக்குள் ஆர்வம் வந்தது அந்த மேலோட்ட வாசிப்பின் பயனே; அதனால் அவற்றை எழுதியவர்களுக்கு நன்றி. அவர்கள் பார்வையைக் குறிப்பிட்டு ஆதரித்தோ மறுத்தோ பேசப்போவதில்லை. எனவே அவற்றின் தொடுப்புகளைக்கூடத் தேடி எடுக்கவில்லை.
வெள்ளி, மார் 11, 2005
சிறுவாணித் தண்ணிப் பைத்தியங்கள்
கோவை என்றாலே சிறுவாணித் தண்ணிப் பெருமை பேசுபவர்கள் என்று சிலருக்கு எரிச்சல். கள்ள நோட்டு அடிக்கும் ஊர் என்று இன்னும் சிலருக்கு நக்கல். சிறுவாணித் தண்ணிப் பெருமை பேசினால் இவர்களுக்கு எத்தனை எரிச்சல் வருமோ அதே அளவுக்கு இந்த மாதிரி ஸ்டீரியோடைப் சொல்லாடல்களைக் கண்டால் எனக்கும் எரிச்சல் வருகிறது. கோவைப் பகுதி அல்லது கொங்குப் பிரதேசம் என்று சொல்லப்படுவது ஒரு பரந்து விரிந்த பகுதி. இதில் ஒரு சிறு கூட்டமே சிறுவாணித் தண்ணிப் பெருமை பேசும் கூட்டம். கோவை நகரத்தையே எடுத்துக்கொண்டால் அதில் முழுமைக்குமே கூட சிறுவாணித் தண்ணி அளிக்கப்படுவது கிடையாது. அப்படி இயற்கை/நிர்வாகச் சூழலால் தான் வசிக்கும் பகுதிக்கு அமையப் பெற்ற ஒரு (சிறப்பு என்றே வைத்துக்கொள்ளலாம்) வசதிக்கு ஒருவர் அதீதப் பெருமை பேசுவது மேல்சாதியில் பிறந்துவிட்டவர் பேசும் பரம்பரைப் பெருமைக்கு சற்றும் குறைந்ததல்ல.
வியாழன், மார் 10, 2005
கோவைக் குற்றாலம் - சில 'துளிகள்'
கோவை, சென்னைக்கு வெளியே தமிழகத்தின் முக்கியமான நகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். இதைச் சொன்னால் மதுரைக்காரர்கள் சிலர் கோபித்துக்கொள்வார்கள், 'இரண்டாவது பெரியது எது?' என்பதில் ஒரு பெருமையும் இல்லை. வேகமாக வளர்ந்துவரும் ஒரு நகரம் என்பது நல்ல விஷயம். சென்னைக்கு வெளியேயும் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இவ்வகை வளர்ச்சியை ஆதரிப்பார்கள்).
பழைய இடுகைகள்:
15.02.2005
- கல்லூரிக்கு வெளியே கல்வி [மறுமொழிகள்: 3] 15.02.05 17:15
28.01.2005
- பொழுதுபோக்கும் பயன்பாடும் [மறுமொழிகள்: 13] 03.02.05 15:44
20.01.2005
- டாஜ்பால், கபடி, பேஸ்பால், கிரிக்கெட் [மறுமொழிகள்: 7] 23.01.05 20:35
13.01.2005
- ரொம்ப நாள்னா எத்தனை நாள்? [மறுமொழிகள்: 11] 17.01.05 20:36
14.12.2004
- தாயுமானவள் [மறுமொழிகள்: 8] 16.12.04 04:27
13.12.2004
- செல்பேசி சொல்லும் கதை [மறுமொழிகள்: 4] 14.12.04 07:08
17.11.2004
- தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி [மறுமொழிகள்: 10] 30.11.04 03:41
18.10.2004
- என் நவராத்திரி அனுபவம் [மறுமொழிகள்: 16] 24.10.04 13:36
20.09.2004
- அதோ, அந்தப் பறவை போல... [மறுமொழிகள்: 4] 05.10.04 22:28
18.09.2004
- குறிஞ்சி நிலம் [மறுமொழிகள்: 1] 18.09.04 12:57
05:25:21 -







