சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

ஞாயிறு, டிச 18, 2005

'குரோர்பதி-2'ல் ஒரு அறிந்த முகம் - 'கலெக்டர்' பாலா

bala-kbc2
நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான 'கோன் பனேகா க்ரோர்பதி - 2' நிகழ்ச்சியில் பல ஆச்சரியங்கள். முகமறிந்து கைகுலுக்கி பழகிய நண்பர் ஒருவர் அங்கே உற்சாகம் ததும்பும் சிரித்த முகத்துடன் அமிதாப்புக்கு எதிரில் அமர்ந்து பங்கேற்கும்போது, ஏதோ நாமே அங்கே உட்கார்ந்து உலகம் பூராவும் காண போட்டியில் பங்கேற்பதுபோல ஒரு உணர்வு. நம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவரும், கலைநயம் மிகுந்த நிழற்படங்களை எடுப்பவரும், அவற்றை இங்கே பகிர்ந்துகொண்டு நம்மை மகிழ்விப்பரும், பழகுவதற்கு இனிய நண்பருமான பாலமுருகன் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

[மேலும் வாசிக்க...]

ஞாயிறு, அக் 23, 2005

சில எண்ணங்கள்

சில எண்ணங்களை விளக்கமாக எழுதலாம் என்று நினனத்திருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. எனவே வேறு ஒரு நண்பருடனான மடல் பரிமாற்றத்துக்காக எழுதிய சிலவற்றை இங்கே பொதுவில் வைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மேலும் எழுதுவேன்.

[மேலும் வாசிக்க...]

புதன், அக் 19, 2005

தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள்

காலையிலேயே இதுவும் தயாராகி இருக்கவேண்டியது. ஆனால் ஏதோ நுட்பச்சிக்கல், சரி செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. ஆகவே தாமதம். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

தமிழ்மணம்.காம் முகப்புப் பக்கத்தில் உள்ள இடையூடாடும் பட்டியலில் புதிதாக பச்சை விளக்கு ஒன்று தெரியும். இந்த விளக்கு அணைந்திருக்கும் பதிவுகள் *தற்போதைக்கு* திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

சில முக்கியக் குறிப்புகள்:

கீழக்கண்ட காரணங்களால் பதிவுகள் திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கக்கூடும்.

(0. என் நிரல் எழுதும் திறனில் பாரத்தைப் போட்டு சொல்கிறேன், இந்தப் பச்சை விளக்கு உண்மையிலேயே பட்டியலில் உள்ளவற்றை சரியாகக் காட்டும் என்று நம்புகிறேன், ஆனாலும் பிழை இருக்கலாம். பிழைக்குத் தகுந்த படி அவரவர் தங்கள் மாதாமாதம் படியளக்கும் தவச தானியத்தில் குறைத்துக்கொள்ளலாம். அல்லது கொடுக்கும் கசையடியில் ஒண்ணு ரெண்டு கூட்டிக்கொள்ளலாம்.)

1. மூன்று மாதத்துக்குமேல் புதுப்பிக்கப்படாதவை

2. நுட்பக்காரணங்களால் திரட்டப்படமுடியாதவை

3. பிழையான/காலாவதியான யு.ஆர்.எல்.

4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.

இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும். ஆனால் அதற்குள் பக்கத்து அறைக்குப் போய்விட்ட என் மனைவி வக்கீலையே பார்க்கப்போய்விடாமல் இருக்க அந்த பகவான் கிருபையளிக்க வேண்டும்.

வீட்டில் 'கஜினி' படம் பார்க்க ஆசைப்பட்டார்கள், 'நண்டு' படமாவது விசிடியில் வாங்கிப் போட்டுக்காட்டவேண்டும்:(

செவ்வாய், அக் 18, 2005

ஒரு அறிவிப்பு:

தமிழ்மணம் திரட்டியின் பழுவைக் குறைக்கும் விதமாக, பல மாதங்களாக புதுப்பிக்கப்படாத பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கொண்டவையும். மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகளும் திரட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பதிவுகள் திரட்டுவது, அறிவிக்கப்பட்டுள்ள '20 நிமிடத்துக்கு ஒருமுறை' இனி நடக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் அவ்வப்போது இந்த திரட்டிப்பட்டியலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கும். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
-காசி

வெள்ளி, அக் 14, 2005

குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம்

சென்ற ஆண்டு செப்டம்பரில் தமிழ் வலைப்பதிவுகளின் நிலை பற்றியும், அறிவியலாளர், சமூகத்தோடு தொடர்புகளைப் பேணுவதில் ஆர்வம் காட்டுபவர், தமிழில் கவிதைகள் எழுதுபவர் என்ற வகையில், அவரையும் வலைப்பதிக்க அழைத்து ஒரு மடல் எழுதினேன். இன்றுவரை மடல் கிடைத்ததத்ற்கான ஒப்புகையோ, அவரின் பதிலோ கிடைக்கவில்லை. மடலில் கொஞ்சம் பெருமையடிப்பும் தமிழ்மணம் தளத்துக்கு விளம்பரவாசமும் தெரியலாம், ஆனாலும் உதவியாளரை விட்டுப் பதில் எழுதச்சொல்லக்கூட முடியாமல் போகும் அளவுக்கு இது ஒதுக்கத்தக்கதா என்று தெரியவில்லை. பிறந்தநாள் காணும் அப்துல் கலாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல நண்பர்கள் அவரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்பது கண்டு இதை பொதுவில் சொல்லத்தோன்றியது. அவ்வளவுதான்.  (ஒரு நினைவூட்டு மடலும் அனுப்பினேன், அத்ற்கும் பதில் இல்லை. நான் அனுப்பிய முகவரி: presidentofindia@rb.nic.in

எழுதிய மடலை இங்கே கொடுக்கிறேன்


[மேலும் வாசிக்க...]

பழைய இடுகைகள்:

14.10.2005

02.10.2005

30.09.2005

23.08.2005

20.04.2005

16.04.2005

13.04.2005

07.04.2005

27.03.2005

25.03.2005