சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
புதன், ஜன 14, 2004
சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 04
இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.
உயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை?) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள்.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 03
இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.
அப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு '·பாரின் ஆ·பர்' ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம்! ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.
சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 02
இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.
ஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன்.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 01
இது முதலில் இங்கு எழுதப்பட்டதன் மறுபதிப்பு. மறுமொழிகளோடு வாசிக்க இங்கே செல்லலாம்.
முதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது 'இலவச இணைப்'பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள்.

புது இடுகைகள்:
14.01.2004
23:41:33 -