சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்
ஞாயிறு, டிச 18, 2005
'குரோர்பதி-2'ல் ஒரு அறிந்த முகம் - 'கலெக்டர்' பாலா

திங்கள், அக் 24, 2005
குழவி, கிழவி, கொளவி, கல்வி?
ஏழு வருசத்துக்கு முந்தி எனக்கு மக பொறந்தா. கொளந்தைக்கு தண்ணியூத்தியுட (குளிப்பாட்ட) ஒரு வயசான அம்மா அண்ணாடும் (தினமும்) வரும். என்கிட்ட ஒண்ணும் பேச்சு வர்த்தை வெச்சுக்காது. எல்லாம் என் சம்சாரத்தோட சரி. (பையன் பொறந்தப்போ அம்மாவைக் கேக்காம யாருக்கும் இந்த வேலை கிடைக்காது. ஆனா பொண்ணு பொறக்கும்பொது ஆட்சி மாறீட்டுதுங்க
) ஒரு அண்டா சுடுதண்ணி வெச்சு, இந்தம்மா காலை நீட்டி உக்காந்து, அரப்பு, எண்ணெய், மஞ்சள் எல்லாம் போட்டு, நீவி நீவிக் தண்ணியுத்தி விட்டா கொளந்தை மணிக்கணக்கா தூங்கும். அப்படி ஒரு சொகமாமே!
இப்படியே ஒரு வருஷம் இது நடந்திருக்கும். மாசாமாசாம் அந்தம்மாவுக்கு காசு கொடுத்துடுவோம். அதுதவிர காபி கொடுப்பாங்க, குடிச்சுக்கும். வேற எதுவும் கொடுக்கல் வாங்கல் இருந்தமாதிரித் தெரியலை. இப்பவும் கிழவி எதிரில் பார்த்தால் என் சம்சாரத்துக்கிட்ட பேசீட்டுப்போகும்.
முந்தா நேத்து இப்படித்தான் அந்தம்மா கையில் அருவாளோட எங்க வீதியில வடபுறமா ஒசரமா வளந்திருக்கிற முள்ளுவேலியை வெறகுக்கு வெட்டப் போயிருக்குது. தென்னந்தோப்போரமா இருந்த வேலி நல்லா நெடு நெடுன்னு அடத்தியா இருந்ததானால, அங்க வெட்டுனா நல்ல கனமான விறகு கிடைக்கும்னு வெட்டப்போக...
'அய்யோ, அய்யோ'ன்னு சத்தம் வர பக்கத்தல இருந்தவங்க ஓடிப்போய்ப் பாத்திருக்காங்க. அந்தம்மா 'அய்யோ, கொளவி கொட்டீருச்சு'ன்னு அழுதுட்டே துடிச்சிருக்குது. அங்கே ஒரு பெரிய கொளவிக்கூடமே 'ஙோய் ஙொய்'னு சுத்தீருக்குது. எப்படியோ இந்தம்மாவை அங்கேருந்து இக்கட்ட கூட்டியாறதுக்குள்ள நிறைய இடத்துல கடிச்சுருச்சு, பாவம்.
அந்தம்மா துடிக்கறதப் பாத்து எங்க பக்கத்தூட்டுக்காரர் ஒரு ஆட்டாவைப்புடிச்சு, ஆஸ்பத்திரிக்குக் கூட்டீட்டுப் போக ஏற்பாடு பண்ணீருக்கறாரு. அப்ப விசயம் தெரிஞ்சு அந்தம்மாவோட மருமகளும் ஓடிவந்துட்டுது. அந்த வலீலையும், மருமகளைப்பாத்து, 'நீ ஆட்டோவில ஏறாத, எங்க்கூட வராதேன்னு' கத்தீருக்குது கிழவி.
அந்தமா ஆஸ்பத்திரீயிலுமே இதே மாதிரி 'மருமகளை ரூம்புக்குள்லயே வரவேண்டாம்னு சண்டை கட்டுச்சாமா, சொன்னாங்க. என்ன கோவமோ! வயசான காலத்தில முள்ளுவெறகு வெட்ட வெச்சிட்டாளேன்னு கோவமோ, என்னமோ. ராத்திரி எனக்கு இந்த விசயம் சொன்னாங்க. காலையில் எந்திரிக்கும்போதே அந்தம்மா செத்துப்போச்சுன்னு சேதி வந்தாச்சு. அட, கொளவி கொட்டி உசுரு போகுமான்னு ஆச்சரியமா இருக்குது. ஒடம்பு ஏகத்துக்கும் கொட்டீருச்சாமா. அது என்னமோ வெசக்கொளவியாமா. முள்ளு முள்ளா ஒடம்பெல்லாம் தெச்சிருச்சாமா. நம்பவே முடியலை... அத்தனை வலீலும் அந்தம்மா மருமகளை அண்ட வுடலையே! தெச்சிருந்த முள்ளைவிடவா மருமகமேல கோவம் வலிச்சிருக்கும்? ஒண்ணுமே புரியலையே, என்ன படிச்சு என்ன போங்க!
ஞாயிறு, அக் 23, 2005
சில எண்ணங்கள்
சில எண்ணங்களை விளக்கமாக எழுதலாம் என்று நினனத்திருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. எனவே வேறு ஒரு நண்பருடனான மடல் பரிமாற்றத்துக்காக எழுதிய சிலவற்றை இங்கே பொதுவில் வைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது மேலும் எழுதுவேன்.
புதன், அக் 19, 2005
தமிழ்மணம் திரட்டும் பட்டியலில் உள்ள/இல்லாத பதிவுகள்
காலையிலேயே இதுவும் தயாராகி இருக்கவேண்டியது. ஆனால் ஏதோ நுட்பச்சிக்கல், சரி செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. ஆகவே தாமதம். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
தமிழ்மணம்.காம் முகப்புப் பக்கத்தில் உள்ள இடையூடாடும் பட்டியலில் புதிதாக பச்சை விளக்கு ஒன்று தெரியும். இந்த விளக்கு அணைந்திருக்கும் பதிவுகள் *தற்போதைக்கு* திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.
சில முக்கியக் குறிப்புகள்:
கீழக்கண்ட காரணங்களால் பதிவுகள் திரட்டிப்பட்டியலில் இருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கக்கூடும்.
(0. என் நிரல் எழுதும் திறனில் பாரத்தைப் போட்டு சொல்கிறேன், இந்தப் பச்சை விளக்கு உண்மையிலேயே பட்டியலில் உள்ளவற்றை சரியாகக் காட்டும் என்று நம்புகிறேன், ஆனாலும் பிழை இருக்கலாம். பிழைக்குத் தகுந்த படி அவரவர் தங்கள் மாதாமாதம் படியளக்கும் தவச தானியத்தில் குறைத்துக்கொள்ளலாம். அல்லது கொடுக்கும் கசையடியில் ஒண்ணு ரெண்டு கூட்டிக்கொள்ளலாம்.)
1. மூன்று மாதத்துக்குமேல் புதுப்பிக்கப்படாதவை
2. நுட்பக்காரணங்களால் திரட்டப்படமுடியாதவை
3. பிழையான/காலாவதியான யு.ஆர்.எல்.
4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.
இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும். ஆனால் அதற்குள் பக்கத்து அறைக்குப் போய்விட்ட என் மனைவி வக்கீலையே பார்க்கப்போய்விடாமல் இருக்க அந்த பகவான் கிருபையளிக்க வேண்டும்.
வீட்டில் 'கஜினி' படம் பார்க்க ஆசைப்பட்டார்கள், 'நண்டு' படமாவது விசிடியில் வாங்கிப் போட்டுக்காட்டவேண்டும்
செவ்வாய், அக் 18, 2005
ஒரு அறிவிப்பு:
தமிழ்மணம் திரட்டியின் பழுவைக் குறைக்கும் விதமாக, பல மாதங்களாக புதுப்பிக்கப்படாத பல பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே கொண்டவையும். மதநம்பிக்கைகளை விவாதிப்பதுமட்டுமே நோக்கமுமான சில பதிவுகளும் திரட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பதிவுகள் திரட்டுவது, அறிவிக்கப்பட்டுள்ள '20 நிமிடத்துக்கு ஒருமுறை' இனி நடக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் அவ்வப்போது இந்த திரட்டிப்பட்டியலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கும். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
-காசி
பழைய இடுகைகள்:
14.10.2005
- குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கடிதம் [மறுமொழிகள்: 9] 17.10.05 20:27
- தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள். [மறுமொழிகள்: 38] 23.10.05 13:40
02.10.2005
- கோவை வலைப்பதிவர்/இணைய நண்பர் சந்திப்பு [மறுமொழிகள்: 15] 09.10.05 10:48
30.09.2005
- கோவைப் பகுதி தமிழ் இணைய/வலைப்பதிவு நண்பர்கள் சந்திப்பு [மறுமொழிகள்: 27] 04.10.05 01:29
23.08.2005
- தமிழ்மணம் - 365 [மறுமொழிகள்: 98] 30.09.05 04:38
13.06.2005
- பிடுங்கி நடப்பட்ட மரம். [மறுமொழிகள்: 68] 07.07.05 02:10
09.05.2005
- தமிழ் உள்ளிடும் முறை [மறுமொழிகள்: 31] 17.05.05 22:03
25.04.2005
- பாலாஜி சக்திவேலின் அடுத்த படம் எப்போது வரும்? [மறுமொழிகள்: 14] 06.05.05 10:11
20.04.2005
- தேவை: தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை [மறுமொழிகள்: 37] 18.05.05 10:13
16.04.2005
- நியூஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பு. [மறுமொழிகள்: 25] 19.04.05 13:41
09:24:03 -







